Saturday, February 27, 2016

டாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோயின் ஆகிடலாமா?

சார்.உங்க ஹோட்டல்ல வீட்டுச்சாப்பாடு மாதிரியே இருக்கும்னீங்க?


ஆமா.ருசி எப்படி?
அதை விடுங்க.பரிமாறுவதற்கு லேடீஸ்.யாரும் கிடையாதா============

2 திருவள்ளுவரே! நீங்க ஏன் அவளதிகாரம் எழுதலை?


வாசுகி விடலை==========

3 டியர்.பிப்ரவரி 14 சன்டே.என்ன பண்ணலாம்?


1ம்.பண்ண முடியாது.வீட்ல அனுப்ப மாட்டாங்க


===========


4 டியர்!ஆண்கள்  எல்லாம் பொய் சொல்லவே  படைக்கப்பட்டவர்கள்என்பது உண்மையா?

 ஆமா, பெண்களை வர்ணித்துக்கவிதை எழுதும்போது கவிதைக்குப்பொய் அழகுதானே?


==============


5  டியர்,பிப்ரவரி 14  ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொல்லிட்டு பீச் வந்துடு


லூசு, சண்டே. நம்ப மாட்டாங்க,அம்மாவும் கூடவே வருவாங்க==============


6 எப்போப்பார்த்தாலும் என் இடையில் கிள்ளறீங்களே?என்னை கிள்ளுக்கீரைன்னு நினைச்சீங்களா?


சரி, கரிசலாங்க”கன்னி”க்கீரைன்னு நினைச்சுக்கறேன்


==================டாக்டர். இதுவரை எனக்கு வந்த கனவுகள் எதிலுமே நான் முடிவே பார்த்தது இல்ல .ஏன்?
தியேட்டர்லயே க்ளைமாக்ஸ் வர்ற டைம் ல கிளம்பிடுவீங்க்ளோ?
============8 சார்.நீங்க சொல்ற ஜோக் எந்த கோணத்தில் பாத்தாலும் சிரிப்பு வரல"கும்பகோணம் ,அரக்கோணம் இந்த ஊர்ல படிச்சுப்பாருங்க


=========


9 பூ மாலை போடாம பொண்ணோட கழுத்துல மாப்ளை ஏன் வடை மாலை போடாறாரு?


பொண்ணோட பேரு ஹனு மலர்.அனுமார் பக்தையாம்


===========

10 டாக்டர்.டெய்லி க்ரீன் டீ குடிச்சா எவர் க்ரீன் ஹிரோயின் ஆகிடலாமா?


ஏம்மா.விட்டா பச்ச சேலை கட்னா பச்சப்புள்ள ஆகிடலாமா?னு கேட்பே போல============


11 நான் என்ன எழுதுனாலும் எல்லாரும் பாராட்றாங்க.அப்போ நான் பெரிய எழுத்தாளினி தானே?


காலை வணக்கம் னாக்கூட கவிதை பிரமாதம் மிஸ் ங்கற உலகம் இது


=============


12 மிஸ்! இந்த ஃபோட்டோ  எப்போ எடுத்தது?

கராத்தே'ல  ப்ளாக் பெல்ட் வாங்கினப்போ


ஓஹோ, மான் கராத்தே வா?


====================

13  மாப்ளை, என் பொண்ணுக்கு கராத்தேன்னா இஷ்டம், அட்லீஸ்ட் குங்க்ஃபூ தெரிஞ்ச மாப்ளை தான் வேணுமாம்

 எனக்கு குஷ்பூவை வேணா நல்லா தெரியும், ஓக்கேவா?


================

14 தலைவரே! மீண்டும் கூடா நட்பா?

அரசியலில் நிரந்தர கூடா நட்பு என்பதும் இல்லை, நிரந்தர கூடா பகையும் இல்லை


==============


15  சார், நம்ம படத்துல  ஏழரை இருக்குன்னு நியூஸ் வந்திருக்கே?


யோவ், கொன்றுவேன், ஏழு ஃபைட் சீனும் , ஒரு அரைகுறை ஃபைட் சீனும் இருக்கு


===============


16 திருமணம் ஆகாத ஆண்களுக்கு வாடகைக்கு வீடு தரமறுப்பதன் காரணம் என்ன?

இருக்க இடம் கொடுத்தா  படுக்க இடம் தேடுவானே?அதான்


=================

17 டியர், உடம்பு சரி இல்லை, யாராவது செய்வினை செஞ்சிருப்பாங்களோ?

 இல்லை, நான் தான் உப்புமா செஞ்சேன்

===============


18  மிஸ்!காதலர் தினத்தன்னைக்கு  பச்சை கலர் சுடி  போட்டுட்டு வந்தா  ஐ லவ் யூ சொல்லலாமா? உங்களுக்கு?

 பச்சை பச்சையா திட்டிடுவேன், பரவாயில்லையா?


===============

19 சிவப்பு கலர்  டிரஸ் போட்டா ஆள் உண்டு, பச்சை போட்டா ஆள் இல்லை


ஓஹோ, அப்போ  சிவப்பு ஜாக்கெட், பச்சைப்பாவாடை போட்டுட்டு வந்தா என்ன அர்த்தம்?


===============


20 டியர்! நாளைக்குதானே லவ்வர்ஸ் டே, இன்னைக்கு ஏன் பார்க் போலாம்கறீங்க?

ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இ ன்றே செய்! முந்திக்கலாம்னுதான்


==================

0 comments: