Friday, February 26, 2016

முளைச்சு மூணு இலை விடலை. அதற்குள்.......

1  மஞ்சள் நிற மகரந்தக்காலணிகளுடன் வண்டு
 தென்பட்டால் அப்போதுதான் அது  தன் விருப்பப்பூவுடன் குடித்தனம் நடத்தி வந்திருக்கிறது என அர்த்தம்


==============

2 எல்லோரது வாழ்க்கைச்சுவடுகளிலும் ஒரு வடு இருக்கும்.
அவ்வளவு  ஏன்?
சு”வடு” எனும் வார்த்தையிலேயே வடு மறைந்திருக்கிறதே!

==============


முளைச்சு மூணு இலை விடலை.

அதற்குள் சமைந்து விட்டது
சமைக்கப்பட்டது
காளான்

=========

4 சஹாய ராணி க்கு வணக்கம் வைக்க ரொம்ப மெனக்கெடத்தேவை இல்லை.ச"ஹாய்"ரா நீ (SA"HAY"A RA NI)


==========5
சிம்ம வாகனிக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவரை மைக்ரோ சிம் ம வா கனி ன்னு சொல்லலாமா?==========6 ஒரு ட்வீட் கூட போடாத ஒரு பெண் ட்வீட்டர் கிட்டே நெட் தமிழன்" ட்வீட் எதுனா போடுங்க.அப்போதானே.RT பண்ண முடியும்?கறான்
=============
7 5வது் படிக்கற பையனுக்குக்கூட புரியற மாதிரி சாதா தமிழ்ல ட்வீட்னாக்கூட மிஸ்.இதுக்கு என்ன அர்த்தம்?னு தெரியாத மாதிரியே நடிப்பான் நெட் தமிழன்
==========8 பொண்ணுங்க பேச.விருப்பமில்லா ம நாசூக்கா தவிர்க்கும்போதே கிளம்பிடனும். வெறுப்பு ஏற்படுத்தும்.அளவு நச்சரிக்கக்கூடாது
=======9 மோடி யின் வெற்றியில் முக்கியமானது அவரது சட்டப்பூர்வமான திருமண வாழ்க்கை பற்றியே பலர் அறியாமல் இருப்பது.==============
10 சாதா தமிழன் பசிச்சதும் தட்டில் சோறு போட்டு சாப்பிடுவான், நெட் தமிழன் “சாப்பிட்டியானு கூட கேக்க யாரும் இல்லையே”னு FB ல புலம்புவான்
==============
11 உடன்பிறப்பே! என் பையனுக்கு கால் விரல்ல சுளுக்கு. இந்த அனுதாப ஓட்டுகள் எல்லாம் தேர்தல் நேரத்தில்  நமக்கு ஆதரவு  வாக்குகளாய் மாற  உழைப்பீர்!
==============
12 சினிமா ஆர்வலன் என்பதற்காக ஒருவன் சினிமாத்துறையைச்சார்ந்தவரை  தலைவனாகவோ, தலைவியாகவோ ஏற்றுக்கொள்வான் என எதிர்பார்க்காதீர்! # கலைஞர், ஜெ
==============13  அழுவதில் என்ன சந்தோஷம் கிடைத்துவிட ப்போகிறது.?னு கேட்கும் பொண்ணுங்க எல்லாம் நாள் பூரா டி வி சீரியல் பார்த்து அழுதுட்டு இருக்கும் ஆளுகதான்
================
14  அனு கில்மா மூட் ல இருக்கும்போது வாக்குசாவடி கூட்டிட்டு வந்து ஓட்டுப்போடச்சொன்னா அதுதான் அனு தாப ஓட்டு
=================
15  அன்பே! ஃப்ளோரா!  நீ குடி இருப்பது ஃபர்ஸ்ட் ஃப்ளோரா? கிரவுண்ட் ஃப்ளோரா?
===============16  பொண்ணுங்க ப்ரோ-ன்னு கூப்பிட்டா வருத்தப்படாதீங்க.ப்ரொஃபசரைக்கூட சுருக்கமா ப்ரோன்னுதான் கூப்பிடுவாங்க அவங்க

==============
17  எந்த ஊர் பிகரா இருந்தாலும் தயங்காமல் கடலை போடு.

கோவில் பட்டி என்றால் மட்டும் கடலை பர்பி கொடு


==========

18 உடன் பிறப்பே! காங்கிரசுடன் உறவுக்கு "கை"கொடுப்போம்.கூடா நட்பு அதிகார குறளை இப்போதைக்கு மறப்போம்.வாழ்க சோனியா!வளர்க குஷ்பூ

===========

19 பெரும்பாலான குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் குற்றங்கள் தொடர்வதற்கும் முக்கியக்காரணம் பாதிக்கப்பட்டவர் புகார் தர தயங்குவதாலேயே

============

20 பழைய சோற்றுப்பானையில் உள்ள நீச்சத்தண்ண்ணீர் போல் சுவையான அமிர்தம் எந்த ஷாப்பிங்க் மால்களிலும் கிடைப்பதில்லை


================

0 comments: