Saturday, February 06, 2016

தேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட் யார் யார்?

பொண்ணுங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி உள்ளே என்ட்ரி ஆகும்போதே நெட் தமிழன் பாய்ஞ்சு போய் ஐ லவ் யூ சொல்றான்.ரொம்ப காய்ஞ்சு கிடப்பானோ?


==============
2 பசியெடுக்குது,காலையில 3 இட்லி தான் சாப்ட்டேன்😥😿"இட்லி ல. 3 தான் சாப்ட்டீங்க ஓக்கே.தோசை ல பணியாரத்துல எல்லாம் எவ்ளோவ் சாப்ட்டீங்க?============

3 நெட் தமிழன் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா ஆஃபீஸ் வேலை செய்ய உக்காந்தாக்கூட டார்லிங்க் எங்கே போய்ட்டே?னு மென்சன் போட்டு கூப்ட்டுக்குது

==============

4 அவனோட அடிக்கடி சண்டை போடனும் னு தோணுது என்னவா இருக்கும்

ஒரு வேளை டைவர்ஸ் ஆசை வந்துடுச்சோ என்னவோ? மேரேஜுக்கு முன்னமே?


===============


5  பெரும்பாலான மக்கள் விரும்பும்படி ஒரு படைப்பைப்படைக்க நினைக்கும்போது படைப்பாளியின் சுயம் மடிகிறது


=================


விருப்பமான ஹீரோ/தலைவர் உடன் ஒரு ஃபோட்டோ எடுக்க , ஒரு பதில் வாங்க எல்லை மீறிக்கெஞ்சி உங்கள் பெற்றோர் அளித்த சுயமரியாதையை இழந்து விடாதீர்!


==================

யாரிடமாவது எதற்காகவாவது கை நீட்டிப்பணம் வாங்கி விட்டால் நீ அவருக்கு அடிமை, வாங்கா விட்டால் நீ எஜமான்! உன் நிலையை நீயே தீர்மானி!


================


பொண்ணுங்க அவங்களோட தாய் மாமன் சித்தி மாமன், முறை மாமன் ஃபோட்டோ போட்டு வெறுப்பேத்தறாங்க, ஏம்மா தில் இருந்தா உங்க தங்கை ஃபோட்டோ தோழி ஃபோட்டோ  போடுங்களேன்


==================


9  தேவதை மாதிரி பொண்ணுங்க மஞ்சள் பூசி குளிச்சு சேலை அணிந்து வந்தா அவங்களை தேவ”தைப்பூச” ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லிக்கலாம்


================

10 எவ்வித நிபந்தனையும் இன்றி எல்லா ஃபிகர்களையும் நேசிக்கவும் கடலை போடவும் தயாராக இருக்கிறோம்,ஆனால் அது அவர்களுக்குப்புரிவதே இல்லை-தியாகிதிருமல


================


11 பொண்ணுங்க சொந்த டிபியா அவங்க கண்ணை வெச்சுட்டாப்போதும், நெட் தமிழன் ஓடி வந்து உன் கண்ல பவர் இருக்கே?ங்கறான், பவர் ஸ்டாரினினு தான் கூப்பிடலை


=================


12 ஃபேஸ்புக்கில் வந்து தோழி  ஃபிரண்ட்ஷிப் பிடிக்க முடியாதவன்  ஃபோன் நெம்பர் வாங்கி வாட்சப்ல வாகா கடலை வறுக்கறேன்னானாம் # நகரத்து சொலவடை


=================


13  ஊரே அமளி துமளி ஆகிட்டு இருந்தாக்கூட இந்தப்பொண்ணுங்க வீட்ல உட்கார்ந்து ரமணி VS  ரமணி சீரியல் பார்த்துட்டு இருக்காங்க


===================


14  அபிமான ஹீரோ கிட்டே நான்லாம் நேர்லயே கேள்வி கேட்டுட்டேன்டா.
 நீங்க கேட்டீங்க, சரி, அவரு எதுனா பதில் சொன்னாரா? ட்விஸ்ட்டே அங்க தானே இருக்கு?================

15  பிரபலங்களிடம் கேள்வி கேட்டு பதில் வரவில்லை என  ஏமாறாதீர்கள்! அவர்களைப்ப்புறந்தள்ளி கண்டுக்காம விட்டா  அவர்கள் கெத்து குறையும்


===================

16  தங்கள் பட ரிலீஸ் டைமில் பட ப்ரமோவுக்காக ஹீரோக்கள் உங்களை பகடைக்காயாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காதீர்கள்.


===================


17  யார் என்ன ஜோக் சொன்னாலும் இதெல்லாம் ஒரு ஜோக்கா?ன்னு சொல்லும் பொண்ணுங்க வீட்டுக்குப்போய் இப்போ இம்மீடியட்டா 10 ஜோக்ஸ் சொல்லுங்கனு சொல்லனும்


=====================


18  வெற்றிக்கனி உன் மடியில் வந்து விழ வேண்டும் எனில் முதல் கட்டமாய் நீ தினம் அதிகாலை 5 மணிக்குள் எழ வேண்டும்


===================


19 பெரியோர் சொல் கேட்டு நடத்தலில் ஈகோ பார்க்கத்தேவை இல்லை, 70 ஆண்டு கால அனுபவப்பாடம் இலவசமாய் நம் கைகளில் கிடைப்பதே ஒரு பாக்கியம் தான்


===================


20  ஒரு சினிமா ஹீரோவிடமோ, அரசியல் தலைவரிடமோ அபிமானம் வைப்பது தவறில்லை, ஆனால் நாளடைவில்  நீ அவருக்கு அடிமை ஆகாமல் பார்த்துக்கொள்


========================

0 comments: