Monday, February 22, 2016

அனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு கண்டிஷன் போடறீங்களே? ஏன்?

மேடம், ஷூட்டிங்க் ஸ்பாட்க்கு பெட்ஷீட் போர்த்திட்டு வந்திருக்கீங்களே? குளிர் ஜூரமா? கவர்ச்சி 1% கூட காட்ட மாட்டேன், அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்


================


2 எதிர்க்கட்சித்தலைவருக்கு  கல்யாணமாம்


என்னைப்பார்த்து காப்பிஅடிக்கிறார், போன மாசம் தான் எனக்கு ஆச்சு, அதைப்பார்த்து அட்டக்காப்பி அடிச்ட்டார்


=============

3  டிடிஆர் =  ரயிலில் ஏன் டிக்கெட் எடுக்கலை?

சார், கண்டக்டர் வரட்டும்னு ஐ ஆம் வெய்ட்டிங்


================


4  தலைவரே! இந்த  வயசுலயும் அயராமல் நீங்க உழைப்பது நாட்டுக்காகவா? ஓட்டுக்காகவா?

நோட்டுக்காக, என் வீட்டுக்காக


==================


5  ஜட்ஜ் = அரசியல் நாகரீகம் இல்லாம மேடைல பேசுனதா அவதூறு வழக்கு உங்க மேல

 கைதி- அரசியல்ல ஏதுங்க நாகரீகம்?===============


6  தலைவரே! கூட்டணி தர்மம்னா என்ன?

 கேவலம் ஓட்டுக்காக கட்சிகளிடம் பிச்சை எடுப்பது=================7 தலைவரே! நம்ம கட்சியோட பலம் என்ன?

யாராவது ஒருவர் கட்சியை விட்டுப்போகும்போது வேற கட்சில இருந்து 2 பேர் வந்துடறாங்களே?அதான் பலம்


===============

8 காதலிக்கு லெட்டர் எழுதும்போது எப்டி ஆரம்பிக்கனும்?

 அன்புள்ள....

 (சொந்த) சம்சாரத்துக்கு எழுதும்போது?


வம்புள்ள...


================9  டாக்டர்!  அனுஷ்கா படம் பார்க்கக்கூடாதுன்னு சில பேஷ்ண்டுக்கு கண்டிஷன் போடறீங்களே? ஏன்?

 சுகர் பேஷண்ட்ஸ் அஸ்கா , அ(னு)ஷ்கா சேர்த்தக்கூடாது===================

10
ஆஃபீஸ் மீட்டிங்க் நடக்கும்போது எல்லோரும் செல்லை சைலண்ட் மோடு ல போடனும்

 அது ஓக்கே சார்,, ஆனா லேடி ஸ்டாஃப்ஸ் வாயை எப்டி மூடுவீங்க?


====================


11 லவ் ஃபெய்லியர் ஆனா வருத்தப்படாம ஏன் சந்தோஷப்படறே?


அடிக்கடி லவ் ஃபெய்லியர் ஆனா தான் புதுப்புது லவ்வர் கிடைக்கும்

==============

12 
காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்பேன் கறாரே தலைவர், இன்னா மேட்ட்ரு?

 காமன் வெல்த் = பொது சொத்து அப்டினு நினைச்ட்டாரோ என்னவோ?


===============


13  என் சம்சாரத்துக்கும், எனக்கும் கொடுக்கல் வாங்கல்ல தகராறே வராது

 நிஜமாவா?

கோபத்துல அவ எத்தனை அறை கொடுத்தாலும் சலிக்காம வாங்கிக்குவேன்


==============


14  சரக்கு அடிக்கறவங்க எதுக்கு ஊறுகாய் தொட்டுக்கறாங்க?


 தயிர் புளிச்சாலே ஊறுகாய் இல்லாம உள்ளே இறங்காது, நாற்றம் பிடிச்ச சரக்கு உள்ளே போக வேணாமா?


================


15  தலைவரே! நம்ம கட்சிக்குப்பின்னடைவே இனி இல்லைன்னு எப்டி சொல்றீங்க?

டெட் எண்ட்ல இருக்கோம், இனி பின்னால போக இடமே இல்லை


=================


16 தலைவரே!  ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தின கட்சியோட எதுக்கு கூட்டணி வைக்கனும்?

குற்றம் பார்க்கில் கூட்டணி இல்லை


================


17  நம்ம கட்சியோட அடிப்படைக்கொள்கை என்ன?


 அண்ணன், தம்பி, தங்கை  எல்லாரும் அடிச்சுக்காம ஒற்றுமையா  ஊழல் பண்ணனும்


===============

18 சார், உங்க  படம் செம ஸ்பீடு சார்.

 தாங்க்ஸ்ங்க, திரைக்கதைலயா? எடிட்டிங்க்லயா?


  நெட் ல டவுன்லோடிங்க்ல. 8 நிமிசத்துல  14 ரீலும் ஆகிடுச்சு


==============


19    நடிகை = எதிர்காலத்துல  ஒரு தமிழனைத்தான் மேரேஜ் பண்ணிக்குவேன்


 மேடம், உங்க இன ஆட்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா?நிகழ்காலத்துல என் இனஆளைத்தானே கட்டினேன்


================

20   முத   படத்தை விட என்  2 வது படத்துல  ரொமான்ஸ் ஜாஸ்தி

 ஓ, அப்போ  கதை நாஸ்தி?


======================

0 comments: