Sunday, February 14, 2016

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?

1  இனி எக்காலத்திலும் எந்தக் காரணத்துக்காகவும் திமுக, அதிமுகவோடு கூட்டணி கிடையாது-வை.கோ # அப்டியே  டாக்டர் ராம்தாசைப்பார்க்கற மாதிரியே இருக்கு

=============

உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பான்- ஸ்டாலின் # அழகிரி அண்ணே ,இந்த கவுன்ட்டர் உங்களுக்குத்தான்னு நினைக்கேன்

==========

3 234 தொகுதிகளிலும் வெற்றி பெற கண் அயராமல் உழையுங்கள்: ஜெ.# ஸ்டடி லீவ்ல விடிய விடிய விழிச்சிருந்து படிச்சவன் எக்சாம் ஹால்ல தூங்கிட்டானாம்


==========

4 ஜெ. அரசுக்கு சமத்துவம் காக்கும் அரசு என விருது வழங்கலாம்.. ராமதாஸ் கிண்டல்! # ஆமா.பாமக ,தேமுதிக ன்னு யாரையும் மதிக்காம துரத்தி விட்டுடுச்சே


=============

5 DMK,ADMKகட்சிகள் தனியாக போட்டியிட தயங்குகின்றன : அன்புமணி ராமதாஸ்..# லாஸ்ட் ரேங்க் வாங்கற மாணவன் எக்சாம் ஹால்ல டென்சனே இல்லாமதான் இருப்பான்


==========


6 அதிமுக கூட்டணியில் தான் தற்போதும் சமத்துவ மக்கள் கட்சி உள்ளது: சரத்குமார்
# நீங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க.உங்க கட்சிதான் கலைஞ்சிடுச்சே?

=============

7 தமிழக மக்கள்  மாற்றத்தை விரும்புகிறார்கள் - வை கோ # இப்டி ஒவ்வொரு டைமும் மாத்தி மாத்தி  வாக்கு குத்தி  ஏமாற்றம் தான்


===============

8 கோவைக்கு வரும் மோடியை வரவேற்கிறார் ரஜினி - செய்தி #,அடுத்ததா எங்க இளைய தளபதி யும் வரவேற்பார்

==============


9 சல்மான் உடனான உறவு பற்றி விவரிக்க தேவையில்லை - கத்ரீனா # டைப் அடிக்க முடியலைன்னா வாட்சப் ல அனுப்புங்க


=============


10 தமிழகத்தின் நிதி பற்றாக்குறைக்கு ஜெ பொறுப்பேற்க வேண்டும்-விஜயகாந்த் # பற்றாக்குறைக்குக்காரணம் கருணா”நிதி” தான் அப்டினு அடிச்சு விடுவாரே 


===============

11 சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உச்சநீதிமன்ற நீதிபதி நாகப்பன் திடீர் விலகல்  # அய்யா , மிரட்றாங்க அய்யா , அம்மா மிரட்றாங்க அம்மா


================


12 தூத்துக்குடி யில் மு.க.ஸ்டாலின் போட்டியிடக் கோரி விருப்பமனு # அதுவும் ஒரு துறைமுகம் (உள்ள) தொகுதி தானே? வெற்றி முகம் உண்டுனு நினச்சாரோ?


==================


13   மோடியிடம் இருக்கும் ரொக்கப் பணம் ரூ.4700 மட்டுமே.பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சொத்து விவரம்  # அய்யோ பாவம் , ரொம்ப ஏழை போல, ஃபாரீன் போக காசு?


==============


14  ஆட்சி முடியப் போகிற நேரத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்துவது ஏமாற்று வேலை-கருணாநிதி  தான்  எத்தனை பேர் தான்  மாற்றி மாற்றி  ஏமாற்றுவார் இந்த நாட்டிலே


==================

15  பாமக ஆட்சிக்கு வந்தால் அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெறும்-ராமதாஸ் # இன்னும் 20 வருசம் ஆனாலும் தமிழகம் வளர்ச்சியே பெறாதா?


===============


16 மக்கள் நலக் கூட்டணியினர் தெருக்களில் மட்டுமே பேச முடியும்: தமிழிசை சவுந்தரராஜன்  # எல்லோருடைய முகவரியிலும் தெரு உண்டே மேடம்,அது கேவலமா?


==================


17 அவ்வையார் விருதுக்கு  5/2/16-க்குள் விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்டஆட்சியர் அறிவிப்பு # விருதை கைல வாங்கிட்டு அவ்வை யார்?னு கேட்கப்போறாங்க


================


18 234 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும்: ராமதாஸ் தகவல் # உத்தேசமா  2+3+4 = 9 தொகுதில  ஜெயிப்பீங்களா?


==================19 மிசா' சிறை தண்டனை மூலம் மிகப் பெரிய அரசியல் பாடம் கற்றேன்: ஸ்டாலின் # அந்த தண்டனை க்குக்காரணமான காங்கிரஸ் கூட கூட்டணி வெச்சது ஏனோ?


=================


20  புரியாத மக்கள் காதுகளிலே பூ சுற்றுகின்றனர் ஆட்சியினர்-கலைஞர்#  மக்கள் எப்பவும் வாசமா இருக்கனும்னு நல்ல எண்ணம்தான்னு சால்ஜாப் சொல்வாங்களோ?


=======================0 comments: