Sunday, February 28, 2016

வெட்டிப்பயணம்

1  "தமிழகத்தையே மாற்றுவோம்".. நாளை 234 வேட்பாளர்களையும் அறிவிக்கிறது நாம் தமிழர்- சீமான் # அடேங்கப்பா!! கட்சில 234 பேர் இருக்காங்களா?

============


நடந்தாலே சார்ஜ் ஏறும் ஸ்மார்ட் போன்கள்  மார்க்கெட்டில் #  அஜித் ரசிகர்கள் , வை கோ கட்சிக்காரர்கள், வாக்கிங் கிளப் ஆட்களுக்கு சவுகர்யம்


===========

எல்.கே.ஜிக்கு கட்டணம் ரூ.42,680 என அரசு அறிவிப்பு # நாங்க எல்லாம் டிகிரி முடிக்கவே 25,000 தான் 3 வருச ஃபீசே! ஏபிசிடி சொல்லித்தர இவ்ளோவா?


============


மனைவியை காப்பாற்றமுடியாத மோடியால் நாட்டை காப்பாற்ற முடியுமா?-நக்மா # ஆனானப்பட்ட புத்தரே சம்சாரத்தை விட்டுட்டுப்போன பின் தானே புகழ் பெற்றார்?


=============


ஜெ வும், சசிகலாவும் மகாமக விழாவிற்கு செல்லாமல் தவிர்ப்பதே மக்களுக்கு செய்யும் பேருதவி-EVKS  # அப்புறம் பாவத்தை எப்படி கழுவ?

================


மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே பயணம் உறுதுணையாக இருக்கும் -் கருணாநிதி #,நெட் ரிசல்ட்.இந்த தேர்தலிலும் நமக்கு நாமமே

==============

7 எம்.பி.க்களின் சம்பளம் 2 மடங்காக உயர்த்த பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரை #,பிட்டுப்படம் பார்க்கறதுக்கு எதுக்கு இன் க்ரீமென்ட்?

==============

8 காங். இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும்: இளங்கோவன் அழைப்பு # கேப்டன் + குஷ்பூ + கலைஞர் !!


===========


9 நடிகை டாப்சியின் கையை பிடித்து இழுத்த சேலம் ரசிகை... போலீஸ் தடியடியால் சிதறிய ரசிகர்கள் # ரசிகைதானா? பேக் ஐ டி யா இருக்கப்போவுது

==========

10 திமுக, காங்கிரஸ் இணைந்து போட்டி்.காங் 24 சீட் - குலாம் நபி ஆசாத்# வள்ளுவர் கூடாநட்பு க்கு எத்தனை குறள் எழுதுனாரோ கலைஞர் 24,எழுதிட்டார்

=============

11 மதுவிலக்கைஎப்படிசெயல்படுத்துவோம் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது: ஸ்டாலின் திட்டப்படி செயல்படுத்துவோம்னு ஓப்பனா சொல்ல முடியுமா?

===========

12 காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை: மு.க. ஸ்டாலின்:# கேப்டன் அது பற்றி முடிவு எடுப்பார்.அவர் சொல்படி?


=============

13 திமுக - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு :குலாம் நபி ஆஸாத் அறிவிப்பு #  முறைப்படி கலைஞர் தானே இதை முதல்ல அறிவிச்சிருக்கனும்?


================14 அம்மா குடிநீர்' திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு விலையில்லா சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்- ஜெ # எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல்ல தண்ணி காட்டப்போறாங்க?


===============

15  ஆன்லைன் ஏலம்: ரயில்வேக்கு 3 ஆயிரம் கோடி வருமானம் #  அடேங்கப்பா, இவ்ளோவ்  லாபத்துல கம்பெனி ஓடியும் எதுக்கு ரயில்  கட்டணம் உயர்த்தனும்?


=================


16  கோர்ட்டிடம்  பல முறை குட்டு வாங்கியும்  ஜெ திருந்தவில்லை- ஸ்டாலின்  # GOODடுன்னு  தப்பா நினைச்ட்டாரோ?


==================


17  சமூக வலைதளங்களில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு # ஓட்டுப்போடுன்னு ஒரு ட்வீட் போட்டா ஒரு ஆயிரமா? சபாஷ்================

18  ஸ்டாலின்-ன் மக்களை சந்திக்கும் பணி  வெற்றிப் பயணம்!- திண்டுக்கல் லியோனி -  எனக்கென்னமோ வெட்டிப்பயணம்னு தோணுது


===================


19 இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்-செய்தி # கடக ராசி இல்லா குழந்தைகள் வளர ஆவண செய்யனும்


===============


20 ஜெ., நல்லதே செய்வார்!- செங்கோட்டையன் -எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,  # அதாவது தேர்தல் கிட்டே வந்தா மட்டும்?


====================

0 comments: