Thursday, February 11, 2016

கள்ளக்காதலி சோப்ளாங்கி என அழைத்தால் என்ன அர்த்தம்?

அஸ்கா சர்க்கரை , மைதா மாவு போன்ற வெள்ளை உணவுப்பொருட்கள் உண்ட நாட்கள் உங்கள்  ஆரோக்ய வாழ்வின் கறுப்பு தினங்கள்



=============




2  கோதுமை , கேழ்வரகு ( ராகி) , கம்பு போன்ற மெரூன் கலர் உணவுப்பொருட்கள் உங்கள் ஆரோக்ய வாழ்வை மெருகேற்றும்




=================




பாடையில்  நீ போகும்போதும் 

பாவாடை தாவணி அணிந்த ஃபிகரை ரசிக்க மறக்காதே!


=================


ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையும் நீ கட்சியில் சேர்ந்தால்



=============



5 ராஜாவைப்போல் வாழ ஆசைப்படாதீர்கள்.செஸ்சில் ராஜா வுக்கு ஒரு ஸ்டெப் மட்டுமே அனுமதி



================



6 ரசம் சாதம் சாப்பிடுகையில் தமிழன் அப்பளம் கடிச்சுக்கறான்.கேரளன் அப்பளம்/பப்படம் நொறுக்கி புட்டு,ஆப்பம்,தோசையுடன் பிசைஞ்சு சாப்பிடறான்.அய்யகோ




===========



7 ஆற்றில் குளிக்கும் காதலி முதுகுக்கு சோப் போட அழைக்கையில் சோப் மட்டும் போட்டுட்டு வருபவன் சோப்ளாங்கி என அழைக்கப்படுவான்



============




8 சாந்தீனி ,நந்தீனி ,இவர்களெல்லாம் நொறுக்குத்தீனிப்பெயர்ச்சொற்களுக்கு எ கா




=============



9 க்யூட் ஷோபனா னு புது அக்கவுண்ட் வந்திருக்கு.இது க்யூட் புஷ்பா கன்னத்து ல ஓங்கி ஒண்ணுவிட்ட சித்தி பொண்ணாம்




============




10 நம்ம ஊர் தியேட்டர்ல எல்லாம் தண்ணீர் இலவசமா கிடைக்குது.மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் வாட்டர் பாட்டில் சேல்சுக்கு ஆசைப்பட்டு் வைப்பதே இல்லை



==============




11 சொந்த சம்சார ராணிக்குத்தெரியா.ம கள்ளக்காதலி யா ஒரு இளவரசியை ராஜா கரெக்ட் பண்றதுதான் கதை மஸ்தானி ஒன் லைன் ஸ்டோரி



============



12 சமூக ஆர்வலராய் இருப்பதை விட முக்கியம் நீங்கள் சக மனிதரிடம் பொறாமை கொண்டு  வார்த்தையை விட்டு உங்கள் நன் மதிப்பை இழக்காதிருத்தல்



=================




13 நெட் தமிழன்  பொண்ணுங்க கிட்டே  டி எம் பாருங்கன்னு என்னமோ இந்த சினிமாப்பாருங்கங்கற தொனில டெய்லி சொல்ல ஆரம்பிச்ட்டான்




================




14  அன்பே! ரோஷினி! ரோஸ் பவுடர் 100 கிராம் போடும்  முன்பே ரோஸ் நீ!




===============




15  100மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மற்றவரை முந்திக்கொண்டு எடுத்து வைக்கும் முதல் அடியின் முக்கியத்துவம் போல் தினம் நாம் அதிகாலையில் துயில் எழுவது


============


16 உன்னால் முடிவெடுக்க முடியாத பிரச்சனைகளில் உன் பெற்றோரை , பெரியோரை ஆலோசனை கேள்!நமக்கு முன்பே 25 வருடங்கள் இந்த உலகை அறிந்தவர்கள்


==========

17 அதிகாலையில் தினசரி 4 கிமீ
நடப்பதெல்லாம் பிற்கால, தற்கால நன்மைக்கே!


=============


18 கோடிக்கணக்கில்  நீ செலவு செய்து அரண்மனை மாதிரி உன் கள்ளக்காதலிக்கு பங்களா கட்டிக்கொடுத்தாலும் உலகம் அதை சின்ன வீடு என்றே அழைக்கும்


===================


19 சேலரி க்ரெடிட்டட் மெசேஜ் வந்த அடுத்த நிமிடமே ஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர் என லீவ் லெட்டர் எழுதுபவன் தான் தமிழன்

============


20 எவ்வளவு பணம் சம்பாதிக்கிறாய் ?செலவு செய்கிறாய் ? என்பதை விட எத்தனை சதவீதம் சேமிக்கிறாய் என்பதைப்பொருத்தே உன் முன்னேற்றம் அமையும்

============

0 comments: