Sunday, February 14, 2016

அலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை அடிக்குது

மோடி-கோவை வருகை திருப்புமுனையை ஏற்படுத்தும்: பொன்.ராதா #  ஏன்? ஊட்டி  அல்லது கொடைக்கானல் வழியா வர்றாரா?அங்கே தான் ஹேர்பின் பெண்ட் ஜாஸ்தி==============
நல்ல கல்விதான் நல்லவர்களாக வாழவைக்கும்-ஜயேந்திரர்# படிச்சா நல்லவனாகிட்டா என்ன பண்றதுனுதான் அரசியல்வாதிங்க படிக்காம கைநாட்டா இருக்காங்களா?===============
பட்ஜெட்டில் சலுகைகள் இருக்காது: அருண்ஜேட்லி # தேர்தல் அருகில் வந்தால் சலுகை, இல்லைன்னா அழுகை தான்
=================

4  என் வீடு மீதான தாக்குதலை கலைஞர் கண்டித்தது நெகிச்சியளிக்கிறது: பழ.கருப்பையா # அய்யோ ராமா எல்லாம் எலக்சன் டைம் டிராமா
===============எஸ்.வி.எஸ் கல்லூரிக்கு திமுக அரசு தான் அனுமதி அளித்தது: ஜெ # ஒரு தப்பை தொடர விடுவதும் தப்பு தான், அதைக்கண்டுக்காம விட்டதும் தப்புதான்

=================
6  ஜெ ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு-ஸ்டாலின்  # 2 ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு சம்மன், கலைஞர் டி வி 200  கோடி வழக்கில் தயாளுஅம்மாள்க்கு சம்மன் இதை சொல்றாரா?
================7  மத்திய அமைச்சர பதவி மீது ஆசை இல்ல-அன்புமணி ராமதாஸ் #  அய்யா கவனம் பூரா இப்போ முதல்வர்  சீட்ல , இப்போ இல்லாட்டி எப்போ?ன்னு களம் இறங்கிட்டார்
================
8  தற்போதைக்கு திருமணத்தில் விருப்பமில்லை: த்ரிஷா # இன்னும் 20 வருசம் தாட்டிட்டா மொத்தமா அறுபதாம் கல்யாணமா பண்ணிடலாம்
===============
9  ஒரே மேடையில் 14 திருமணங்கள்.10ம் தேதி சென்னையில் ஜெ. நடத்தி வைக்கிறார் # பிப்ரவரி 14 காதலர் தினம் வருது, அப்போ நடத்துனா மேட்சுக்கு மேட்ச் 
===============
10 கூகுளுக்கு போட்டியாக புதிய வசதிகளுடன் வெளிவருகிறது ’யாகூ மெயில்-செய்தி # அப்போ தெறி யில்  யாஹூ யாஹூ பண்ணிப்பார்த்தேன்னு பாட்டு  வருமா?
====================
11  பழ.கருப்பையாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்காதது ஏன்?:-ஸ்டாலின்# அவரைத்தான் கட்சியை விட்டு நீக்கியாச்சே?இனி எதுக்கு பாதுகாப்பு?ம்பாரோ?ஜெ

==================
12 உலகிலேயே முதன்முறையாக டிரைவர் இல்லாமல் ஓடும் பஸ்: நெதர்லாந்தில் அறிமுகம்-செய்தி # லைசன்ஸ் இருக்கா?னு கேட்டு மாமூல் யார் கிட்டே கேட்பாங்க?
=================
13 லட்டு விலை உயராது -திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு # சைசை மட்டும் சின்னது பண்ணிடுவீங்க, அதானே உங்க டெக்னிக்கு? 
=================
14  ரூ.20 கோடி வரி செலுத்தி அக்‌ஷய்குமாரைமுந்தினார் சல்மான் # எல்லா ஹீரோக்களையும் ஏதோ வழக்கில் உள்ளே தள்ளினா இன் கம் டாக்ஸ் கட்டிடுவாங்க போலயே?
================
15  கூட்டணிக்காக பா.ஜனதா யாரையும் கெஞ்சி நிற்காது-பொன்.ராதாகிருஷ்ணன் # ரைட்டு , கேப்டன்  ஓக்கே சொல்லலை போல , அப்போ பிஜேபி , தேமுதிக கூட்டணி இல்ல
==================
16 பொதுமக்களிடம் திமுக.வின் சாதனைகளை எடுத்துக்கூறினால் வெற்றி நிச்சயம்-கனிமொழி # அலை அடிக்குது அலை அடிக்குது உம்மைச்சுத்தி 2 ஜி அலை அடிக்குது
================17  ஆன்லைன் மூலம் துப்பாக்கி விற்க பேஸ்புக் தடை. -செய்தி # அப்போ கத்தி , தெறி இதெல்லாம் விற்கலாமா?
=================
18 கட்சி பொதுக்குழு கூடி வரும் 7-ம் தேதி கூட்டணி குறித்து முடிவு செய்யும் -- சமக தலைவர் சரத். # ஏழாந்தேதிக்கு ஏழரையைக்கூட்டறீங்க?
==================


19 "மோடி ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்  உதவி' -அமித் ஷா # பேருக்கு 1 கோடி யை ஏழைகளுக்கும் மீதி 99,000 கோடியை தொழில் அதிபர்களுக்கும்?

==================சென்னை மாநகராட்சி பெயர் மாற்றம்: 'பெருநகர சென்னை மாநகராட்சி'யாக  -ஜெ # நாங்க ஆட்சிக்கு வந்தா  சென்னையையே மாத்திக்காட்டுவோம்னீங்களே இதானா?

20  

0 comments: