Sunday, February 07, 2016

எல்லோருமே தானே தலைவர்களே!

பிற்காலத்தில் ஹாஸ்பிடலுக்கு நடையாய் நடந்தாலும் கிடைக்காத உடல் ஆரோக்யம் இளமைக்காலத்தில் தினசரி 4 கிமீ நடந்தால் நிரந்தரமாய் கிடைக்கும்===================2 தான் சம்பாதித்த சொத்துகளை  தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும், தானே அதற்கு பாத்யதை என  கொண்டாட நினைப்பவர்கள் எல்லோருமே தானே தலைவர்களே!
==================
குடி மக்கள் குடிச்சு நாசமாப்போனாலும் அரசாங்க கஜானா நிரம்பினாப்போதும் என நினைக்கும் திராவிடக்கட்சிகளுக்கு குடி அரசு தின  வாழ்த்து
==================நடிகைகளும், அரசியல்வாதிகளும் ஒன்றே. யாருடன் வேண்டுமானாலும் ஜோடி சேரத்தயாராக இருப்பார்கள்
===================

5 போட்டியில் பங்கெடுக்காத ஓய்வு பெற்றவரால் தரப்படும் ஆலோசனையே 100% நம்பகத்தன்மை கொண்டதாக இருக்கும்
==============6 வாழ்க்கை உப்பு சப்பில்லாம போகுது என புலம்பும்
அன்பே சப்னா! கொஞ்சம் மிளகாய்ப்பொடி தூவி ருசிச்சா போதும்!
=============7 சுகர் ,பிபி ,கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் தான் வாக்கிங் போவார்கள் என நினைப்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!===========8 காலை டிபன் ,மதியம் லஞ்ச் ,இரவு டின்னர் என எப்போது உணவு உட்கொண்டாலும் அதற்குப்பின் 4 மணி நேரம் தண்ணீர் தவிர எதும் உட்கொள்ளாதீர்!
===========9 அன்பே! நீ அருகில் இருந்தாலும் விலகினாலும் என் வசம் எப்போதும் உன் வாசம்
==============10 கலைஞர் டூ அமீர்கான் = உடன் பிறப்பே!,நம் கழகத்தில் சேர்ந்து விடு.இப்படி மாற்றி மாற்றிப்பேசி மக்களைக்குழப்புபவர்களுக்கு அரசியலில் எதிர்காலம்=============
11 அன்பே!உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாமல் இராதே!
உன் ஜன்னல் வெச்ச ஜாக்கெட் பற்றிய கமெண்ட் ஆகவும் இருக்கலாம்
=============12 அன்பே சஞ்சனா!உன்னை விட
நான் இருக்கலாம் நோஞ்சானா.
டவுன் பஸ்ல நீ போகும்போது
எவனாவது வேணும்னே உன் மேல சாஞ்சானா
அப்பவே ஆகிடுவேன் டானா !-தீனா
================13 பெண்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்! வாக்குவாதத்தில் அவங்க ஜெயிச்ட்டா நமக்கு அவமானம்.நாம ஜெயிச்ட்டா பிகர் பிரண்ட்ஷிப் கட் பண்ணிடும்
===============14 மாமா! உங்க பொண்ணுக்கு வெட்கப்படக்கூட தெரியலை.
எப்டி ஏமாந்தீங்க மாப்ளை?
பேரைப்பார்த்துத்தான் ."SHY"AMALAAன்னதால ஷை டைப்னு நம்பிட்டேன்
===============15 வழக்கமா படத்துக்குத்தான் தடை வரும்.இப்ப டீசர் ,ட்ரெய்லருக்கே தடை போட ஆரம்பிச்ட்டாங்களா? # என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா
================16  ஒரு சிறந்த படைப்பாளி  தான் எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்தை விட 2 மடங்கு புத்தக வாசிப்புக்கு எடுத்துக்கொள்வான்=================


17 அன்பே! அன்றொருநாள் அந்தி மாலைநேரம்
நம்கண்கள்  முதல் முதலாக சந்தித்தன
அடுத்த நாள் காலை உங்க அப்பாவின் கை,கால்கள் என் முதுகில் சந்தித்தன


================

18 தன் பட ரிலீசுக்கு முந்தின நாள் ட்விட்டர் வருபவர் மத்தியில் குடியரசு தினத்தன்னைக்கு எண்ட்ரி குடுத்தார் பார்த்தீங்களா? அதுதான் கமல்


===================


19 இணையத்தில் உங்கள்  இணையைத்தேடாதீர்! திடீர் என நாட் ரீச்சபிள் ஆகலாம்


====================

20  தகுதி அற்ற ஒருவருக்கு ஆதரவு அளிக்கும்போது நீங்கள் நீண்ட  நாட்களாக சேர்த்து வைத்திருந்த நன் மதிப்பை  இழக்க நேரிடலாம்


====================

0 comments: