Monday, February 01, 2016

தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?டாக்டர்?

1  தினமும் காலையில் பிரட் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா?டாக்டர்?


மேடம்.பிரட்டிவிமன் (PRETTY WOMAN)ஆகனும் னா பிரெட் ,டீ சாப்டனும்னு அவசியம் இல்ல===========


2 டியர்! 3 நாளா வேலைக்கார லேடி வரல. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க 


ஒரு வெள்ளைக்கார லேடி எனக்குத்தெரியும், வீட்டுக்கு கூட்டிட்டு வரவா?

==================


3  டாக்டர், ஆண் மூலம் அரசாளுமா?

 ஏம்மா, மூல நோய்க்காரங்க உட்காரவே முடியாது,எங்கிருந்து அரியாசணத்தில் அமர்ந்து ஆட்சி எல்லாம் பண்றது?


================


பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை எல்லாம் நம்பமாட்டேன்,


ஏன்?

 முதல் பாவம் நாயகி அபிலாஷாவுக்கு 10 லட்சம் சம்பளம், ஆண்பாவம் ஹீரோவுக்கு 20 லட்சம்


=================

ஹலோ! அம்மா குறை தீர்க்கும் மையமா?

ஆமா, உங்களுக்கு என்ன குறை?


லைனே கிடைக்க மாட்டேங்குது, எங்கேஜ்டாவே இருக்குனு பலர் குறைபட்டுக்கறாங்க


=================


6  டிக்டேட்டர் படத்தை அஜித்க்குப்பதிலா கமல் ரீமேக்கினா டைட்டில் என்ன வைப்பாங்க?


டிக் டிக் டிக் நைட்டர்


================


7   ஒரு லெட்டர் கூட ஒழுங்கா பிரிண்ட் அவுட்  எடுக்கத்தெரியல, என்னம்மா டைப்பிஸ்ட் நீ?

 ரிசர்வ் பேங்க்லயே 1000 ரூபா நோட்டை தப்பா பிரிண்ட் பண்றாங்க, என்னைக்குறை சொல்ல வந்துட்டீங்க?=================


8  டியர், லிப் கிஸ்க்கு மூக்குத்தி  தடையா இருக்கு, அதைக்கழட்டேன்

 ஆங், நம்ப மாட்டேன், அடகு வெச்சுடுவீங்க


================


9  சார், தியேட்டருக்குப்போனீங்களே, படம் எப்படி?

 கேண்ட்டீன்ல பப்ஸ் நல்லாருந்தது

 சார், படம் படம்.

ஐஸ்க்ரீம் செம டேஸ்ட் தெரியுமா?


================

10   மகளிர் அணித்தலைவியைப்பார்த்து மேடைல தலைவர்   கட்சியின் பூலான் தேவியே! அப்டிங்கறாரே?

பூமா தேவியேன்னு தான் சொல்ல வந்தார், டங்க் ஸ்லிப்டு


======================


11  சார், நீங்க ட்விட்டர்/ ஃபேஸ்புக் வந்து இதுவரை என்ன சம்பாதிச்சிருக்கீங்க?

கெட்டபேருதான்


==================


12 தலைவரே! பொங்கல் பரிசா 2 அடி நீள கரும்புத்துண்டு ஏன் கொடுத்தீங்க?

2 அடின்னா இரட்டை இலை, 5 அடி குடுத்தா உதய சூரியன்


=================


13 சார், உங்க SB  அக்கவுண்ட்ல மினிமம் பேலன்ஸ் இல்லை,1000 ரூபா கட்டுங்க

 அய்யய்யோ, என் கிட்டே இருக்கற மேக்சிமம் பேலன்சே   200 ரூபாதானுங்க


==================


14 நீரில் நனையாதத் தன்மை {water proof} பட்டுப் புடைவை  ஒரு லட்சம் ரூபாய் தான்.

 ஏம்மா, அதுக்கு நாங்க துவைக்காமயே சாதா புடவையை வெச்சுக்கறோம்


================


15   டாக்டர்! காலைல டைம் முத்தம் தர கரெக்ட் டைம்னு எப்படி சொல்றீங்க?

 அப்பொதான் மவுத்வாஷ் பண்ணி  ஓரளவு சுத்தமா இருப்பீங்க?


=================


16 டாக்டர்! கடலை எண்ணெய்ல எள்ளுப்பொடி கலந்து தோசைக்கோ இட்லிக்கோ தொட்டுக்கிட்டா நல்லதா?


 எள்ளு நல்லது, எண்ணெய் கெட்டது ,  ப்ளஸ் இண்ட் மைனஸ்  மைனஸ்


==================
19  மிஸ்! நீங்க கீர்த்தி மாதிரி இருக்கீங்க
 டேய் லூசு, என்பேரே கீர்த்திதான்
கீர்த்தி சுரேஷ் மாதிரி
கீர்த்தி எப்படி சுரேஷ்மாதிரி இருக்கமுடியும்=====================


20  இண்ட்டர்வ்யூவில்

மிஸ்! உங்க பேரு என்ன?


பவானி.

ஓஹோ.உங்க தங்கச்சி பேரு குமார பாளையமா? அக்கா பேரு பள்ளி பாளையமா?

=============

0 comments: