Saturday, February 13, 2016

தலைவரே! எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேட்க வந்தீங்க?

1  இது தான் என் முத சம்சாரம்.இது 2 வது சமாச்சாரம்.
ஓஹோ.அரண்மனை 1 , அரண்மனை 2 ன்னு சொல்லுங்க


===========

2 ஃபேஸ்புக்ல டிபில என்னமாரி கன்னுவெச்சிர்க பிள்ளைங்லாம் ரொம்ப பாவம் பசங்க புல்போட்டோ கேகராங்க
புல் போட்டோ போட்ராதீங்க.அன் பாலோ பண்ணிட்டு ஓடிடுவான்

=============

3 டார்லிங் .டெய்லி .உனக்கு ஐ லவ் யூ சொன்னாதான் என்னாலே சோறு திங்க முடியுது..
ஓஹோ.சாம்பார் ,ரசம் ஊற்றும்போது ஒன்ஸ் மோர் சொல்வியா?


=============


4 டைரக்டர் சார், அழகான பொண்ணுங்களை ஏன் உங்க படத்துல பேயா காட்றீங்க?

 ஏன்னா பேய்ங்களை அழகான பொண்ணா காட்ட முடியாதே? அதான்=================


5  மிஸ் புவனா! இனிமே நீங்க சுடு தண்ணீர் ல குளிக்காதீங்க!

 ஏன்?

 புவி  வெப்பமயமாவதால்  உலகத்துக்கே ஆபத்து காத்திருக்குனு சயிண்ட்டிஸ்ட் சொன்னாக


==================

6 மாப்ளை, ஸ்மார்ட்டா ஒரு பொண்ணு இருக்கு, ஜாதகம் பார்க்கறீங்களா?

தரகரே! ஸ்மார்ட்  சிட்டி பொண்ணு வேணாம், கிராமத்துப்பொண்ணா பாருங்க


===============


7  நான் மென்சன் பார்த்துட்டேன்னா  ஹ்ம்ம் -னு பதில் போடுவேன்


ஓஹோ, மென்சன் பார்க்கலைன்னா மென்சன் பார்க்கலைன்னு பதில் போடுவீங்களா?

===============


டியர்.143 சொல்லுங்க.
அது தப்பான வரிசை.1234,,எப்பூடி என் மேத்ஸ் அறிவு


===========


9 நெத்திலி மீனை எப்டி அடையாளம் கண்டுபிடிக்கறது?
அதுக்கு நெத்தி இருக்காது ( நெத்தி +இலி = நெத்திலி)


============

10 நிலா போல் அழகிய உதடு இருந்தா அதுதான் சந்திர வதனா வாம்
ஓஹோ.அப்போ அமாவாசை அன்னைக்கு மட்டும் உதடு இருக்காதா? எப்டி சாப்டுவாங்க?கிஸ்?


===========


11 என்னைத் தவிர வேற எவ கிட்டயாவது
பேசுன ! கொன்னுடுவேன் ஓஹோ.பேச மட்டும்தானே கூடாது?ஐ ஜாலி

============

12
தலைவர் கூட கூட்டணி வைக்க ஏன் எல்லோரும் ரெடியா இருக்காங்க? மத்தவங்க கெட்ட வார்த்தைல திட்னாங்க.இவர் டீசன்ட்டா திட்டுவாரு


=============


13 எல்லாரும் என் ட்வீட்டை லைக் பண்றாங்க, ஏண்டா , உங்க ஆர் டி பட்டன் வேலையே செய்யாதா?

மிஸ்! நாங்களே வேலை இல்லாம சும்மா தான் இருக்கோம், நாங்களே வேலை செய்யாதப்ப  எங்க ஆர் டி பட்டன் மட்டும் எப்படி வேலை செய்யும் ?


====================


14 டார்லிங்க் டூ , சினிமா க்கு போலாமா?

 அதான் டூ விட்டுட்டீங்களே? எதுக்கு கூப்பிடறீங்க?


 அய்யோ ஊர்மிளா! , நான் கூப்ட்டது டார்லிங்க் பாகம் 2  சினிமா க்கு போலாமான்னு


===================


15  டியர், ஹனிமூன் -க்கு ஊட்டி போலாமா?

 ஊட்டி பழைய படமாச்சே? அதர்வா நடிச்ச புதுப்படமே வந்தாச்சு, ஈட்டி போலாம்


================


16  உன் வாழ்வில் நிகழ்ந்த பசுமையான சம்பவம் பற்றிக்கூறு


டீச்சர், கிளிப்பச்சக்கலர் சேலை ல கிளி மாதிரி அன்னைக்கு வந்தீங்களே?அதுதான்


==========================


17 டைரக்டர் - இந்த சீன்ல வில்லன் உங்க கற்பை அழிக்கப்போறான்

நடிகை- எதை வேணா அழிச்சுக்கட்டும், போட்ட மேக்கப் அழியாம இருந்தா சரி


====================


18  உனக்கு மயில் வாகனன் தான் மாப்ளை, நான் முடிவெடுத்துட்டேன்


சாரிப்பா, நான் கார் மேகத்தை லவ் பண்றேன்


=================


19  தலைவரே! எந்த முகத்தை வெச்சுக்கிட்டு ஓட்டு கேட்க வந்தீங்க?

நம்ம கொள்கைப்பரப்புச்செயலாளர் ஆறுமுகத்தை   கூட வெச்சுக்கிட்டுதான்


==================


20 தலைவரே! எலக்சன் கிட்டே வந்துடுச்சு, ஏன் குளிக்காமயே பிரச்சாரத்துக்குப்போறீங்க?


 எப்டியும் கழுவிக்கழுவி ஊத்துவாங்க இல்ல?


=====================
0 comments: