Tuesday, February 16, 2016

யூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்

1  தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவர் முதல்வர் ஜெயலலிதா: அமைச்சர் கே.சி.வீரமணி #  யூ ஆர் அப்சல்யூட்லி கரெக்ட்னு அம்மா பாராட்டி இருப்பாரே?


===============விசாரணைகமிஷன்களுக்கு காலநீட்டிப்பு அளிப்பதால் வரிப்பணம் வீண்-கருணாநிதி # சர்க்காரியா கமிசன் பத்தி ஞாபகப்படுத்தி வாக்கு வங்கியை இழக்காதீங்க
================
3  நேர்மையாளர்களுக்கு ஏற்ற தொழில் சினிமாதான்!- கமல் ஹாஸன் #,அப்போ அரசியல் அயோக்கியர்களின் தொழிலா?னு சண்டைக்கு வந்துடப்போறாங்க==========4 கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவது மீதான தடை நீக்கப்படலாம்: மேனகா" # ஏகப்பட்ட கருத்தம்மாக்கள் கருவோடு அழிக்கப்படுவார்கள்==========5 ஜெ தான் தமிழை வளர்க்கிறார்: அமைச்சர் வீரமணி -# இப்டி எல்லாம் சொல்லி வயிறை வளர்த்த வேண்டியதா இருக்கு இல்ல?
===========6 தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு வியாபாரிகள் துணை நிற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் # நாம பண்ற.அரசியலே ஒரு வியாபாரம் தானே?
===========
7 கமலை சந்திக்க மோடி சம்மதம்.தமிழிசை # கமல் =,எனக்கு இந்த நாட்ல இருக்கவே பிடிக்கல

மோடி = எனக்கும் தான்.வாங்க டூர் போய்க்கிட்டே பேசுவம்

=============

8 அழகிரி மீண்டும் திமுகவில் இணைவார் என்று கூறப்படுவது வதந்தியே -ஸ்டாலின்."# அப்டி இணையலைன்னா உங்களுக்கு வசதியே !

===========


9 பழ.கருப்பையாவிற்கு காங்கிரஸ் அழைப்பு -செய்தி # பழைய ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் வாங்க விற்க  எங்க கிட்டே வாங்க ================


10  ஒரு ஏழைத்தாயின் மகன் பிரதமராக இருப்பதை சிலரால் தாங்கிகொள்ள முடியலை - மோடி # அந்தத்தாய் இந்தியாவில் தான் இருக்கு, பையன் ஃபாரீன்ல, அதைத்தான்..


===============


11  மோடியின் சொத்து மதிப்பு ரூ 1.41 கோடி!
- செய்தி # பீரோவில் அடுக்கி வெச்சிருக்கும் டிரஸ் மதிப்பே 141 கோடி வருமாமே?அப்போ பேங்க் ல?


================


12  அரசு ஊழியர்களுக்கு மாதம் இரண்டு முறை சம்பளம்-அன்புமணி # எப்டி? 10,000 ரூபா சம்பளத்தை ரெண்டா பிரிச்சு 1ந்தேதி 5000, 15ந்தேதி 5000?


===============


13 காமராஜர் ஆட்சிக்கு சரத்குமார் அழைப்பு # சித்தப்பா, அவர் ஆடம்பரத்தை நாடார்! வீண் விளம்பரத்தை நாடார்!வசதி வாய்ப்புகளை நாடார்!முடியுமா உம்மால்?


==================

14  இந்தியாவில் ஜிகா வைரஸ் இல்லை : மத்திய அமைச்சர் நட்டா அறிவிப்பு # ஏர்போர்ட்ல தரோவா செக் பண்ணி அனுப்புங்க, ஃபாரீனர்ஸ் பரப்பிடப்போறாங்க


================


15  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2 லட்டு கவுன்டர் கூடுதலாக திறப்பு # கண்ணா , இன்னொரு லட்டு கவுண்ட்டர் வேணுமா?ன்னு கேட்டிருப்பாங்களோ?


==================


16 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இளைஞர்களிடையே நம்பிக்கை வந்துள்ளது: மோடி # ஆமா, ஊர் சுற்றி  உருப்படவா போறேன்னு அப்பா திட்றதில்லை


==============17  2 ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழலை மக்கள் நினைத்து பார்க்க வேண்டும் - மோடி # அப்போ இந்திய பிரதமர் இந்தியாவில் இருந்தார் 


================


18  திமுக , பா ஜ க, தேமுதிக  கூட்டணி  உருவாகும் - சுப்ரமணியம் சுவாமி # அப்டி அமைஞ்சா அது இரட்டை இலைக்கு இரட்டைத்தலைவலி தான்


================

19 "எதைப் பேசினால் பிரச்சனை வருமோ அதைப் பேசுபவன்தான் ரியல் ஹீரோ" - கமல் # பேசாமல் காரியம் சாதிப்பவன் உத்தம வில்லன்?


=====================


20  பாஜக தேர்தல் அறிக்கையில் 'பூரண மதுவிலக்கு' இடம்பெறும்: ஹெச்.ராஜா # எக்சாம் ஹால்ல ஒரே பையனைப்பார்த்து எல்லாரும் காபி அடிச்சா தெரிஞ்சுடாது?

===================

0 comments: