Friday, February 05, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 5/02/2016 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை


1,பெங்களூர் நாட்கள்

2 . விசாரணை
3 சாகசம்
4 சேதுபூமி
5 இரண்டு மனம் வேண்டும்
6,நாளை முதல் குடிக்க மாட்டேன்7 ஆக்சன் ஹீரோ பிஜூ
 maheshinte prathikaram #5/2/16

1,பெங்களூர் நாட்கள்


ஆர்யா, பாபி சிம்ஹா, ஸ்ரீ திவ்யா, ராணா டகுபதி, பார்வதி, ராய் லெட்சுமி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோ நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘பெங்களூர் நாட்கள்’.
 
இந்தப் படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கி உள்ளார். இசை கோபி சுந்தர். எடிட்டிங் மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ். ஒளிப்பதிவு கே.வி.குகன்.
 
இந்த திரைப்படம் 2014ஆம் ஆண்டு துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஷிம், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில், அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான ’பெங்களூர் டேஸ்’ என்ற மலையாள திரைப்படத்தின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது.அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குநர் இயக்கிய 'பெங்களூர் டேஸ்' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கான 'பெங்களூர் நாட்கள்' திரைப்படம் வருகிற 5-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீசாகவிருக்கிறது. முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான 'பொம்மிரிலு' பாஸ்கர் இயக்கியுள்ள 'பெங்களூர் நாட்கள்' படத்தில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, சமந்தா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், ரேகா முதலானோர் நடித்துள்ளனர். 

மலையாள 'பெங்களூர் டேஸ்' படத்திற்கு இசை அமைத்த கோபி சுந்தரே 'பெங்களூர் நாட்கள்' படத்திற்கும் இசை அமைத்துள்ளார். இயக்குநர் சரணின் தம்பியான கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான 'பிவிபி சினிமா' தயரித்துள்ள 'பெங்களூர் நாட்கள்' படத்தை தமிழகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடுகின்றனர்!

பொங்கலுக்கு வந்த படங்கள் தியேட்டர்களில் தங்காததினால் பெங்களூர் நாட்கள் படத்துக்கு எதிர்பார்த்ததைவிட கூடுதல் தியேட்டர்கள் கிடைத்துள்ளன. வழக்கமாக தமிழ்ப்படங்களை தமிழ்நாடு தவிர்த்து கர்நாடகா, கேரளாவில் மட்டுமே வெளியிட ஆர்வம் காட்டுவார்கள். இந்தப்படத்தை, மும்பை உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெளியிட உள்ளனர். அதனாலேயே அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் படமாக மாறிவிட்டது - 'பெங்களூர் நாட்கள்'.

அமெரிக்காவில் மட்டும் 35 தியேட்டர்களில் வெளியாகவிருப்பதையும் சேர்த்தால் உலகம் முழுக்க 'பெங்களூர் நாட்கள்' திரைப்படம் 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்கிறன பிவிபி நிறுவனத்தினர். இந்த எண்ணிக்கை வரும் தினங்களில் மேலும் கூடும் என்றும் சொல்கின்றனர்.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘விசாரணை’.  கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய ‘லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக இது உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர் போன்றோர் நடித்துள்ளளார்கள்.


72-வது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அத்துடன், மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தைத் தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டிய நிலையில் ரஜினி காந்த், விசாரணை படம் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததாவது:


விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் - தனுஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.


3 சாகசம்


மலையூர் மம்பட்டியானுக்கு பிறகு பிரேக் எடுத்துக் கொண்ட பிரசாந்த், அந்த ஓய்வை தனது எக்ஸ்ட்ரா வெயிட்டை குறைப்பதில் கழித்திருக்கிறார். தனது வெயிட்தான் தனது தோற்றத்துக்கு எதி‌ரி என்று சற்று தாமதமாகவாவது அவர் பு‌ரிந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சி. 

எடையை குறைத்து தோற்றத்தை பொலிவுபடுத்தியிருக்கும் பிரசாந்த் அடுத்து சாகசம் என்ற படத்தில் நடிக்கிறார். தியாகராஜனே இந்தப் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஃபேஸ்புக் நண்பர்களின் ப‌ரிந்துரையின் பே‌ரில் சாகசம் என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறார் பிரசாந்த்.

இந்த தகவல் சிம்ரனின் முகநூல் பக்கத்திலும் உள்ளது. சாகசத்தை அடுத்து ‌ஜீன்ஸ் இரண்டாம் பாகத்தை தியாகராஜனின் இயக்கத்தில் உருவாக்கும் திட்டமும் அவர்களுக்கு உள்ளது.

நல்ல கதைகள் அமைந்தால் வெளிஇயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் பிரசாந்த் தயாராக இருக்கிறார். இந்த முடிவு ஹீரோ பஞ்சத்திலிருக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான அறிவிப்பாக இருக்கும்.


4 சேதுபூமி
ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்கும் முதல்  படம் ‘சேது பூமி’. ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த தமன்  இப்படத்தில் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இப்படத்தை இயக்குகிறார். படம் முழுவதும் முடிந்து வெளியீட்டுக்கான  வேளைகளில் இறங்கியுள்ள தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப்பிடம் படம் குறித்து கேட்கையில்,‘‘சேது பூமி, கண்டிப்பாக ஒரு வெற்றி படம் தான்.  தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பாக சொல்லியிருக்கும் இப்படத்தில் வெற்றிக்குண்டான அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

காதல், ஆக்சன், காமெடி என்று மக்களுக்கு பிடித்த வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ராமநாதபுர மாவட்ட மக்களின் வாழ்க்கை, அவர்களது நட்பு போன்றவற்றை ரொம்ப எதார்த்தமாக சொல்லியிருக்கிறோம். இப்படத்தின் இயக்குனர்  கேந்திரன் முனியசாமி, எனது பள்ளி நண்பனின் தம்பி. இவரை நான் ஒரு வேலைக்காக அழைத்த போது, அவர், சினிமா தான் எனது மூச்சு, சினிமாவில் நான் வெற்றி பெற்றே தீருவேன், என்று என்னிடம் கூறினார். சரி தம்பிக்கு ஏதாவது ஒரு வழியில் நாம் உதவ வேண்டும். இப்படி சினிமாவுக்காக கஷ்டப்படும் தம்பிக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை தயாரித்தேன்’’ என்றார் ஹபீப்.
5 இரண்டு மனம் வேண்டும்

இரண்டு மனம் வேண்டும் படத்துளிகள்
சினிமாவில் பால பாடம் கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில் தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்ற கோலிவுட் காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர்.
“மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம், ஏ.ஆர்.காசிம் போன்ற இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் வேலை செய்திருக்கிறேன். இயக்குநராக இது எனக்கு முதல் படம்” என அறிமுகப்படுத்திக்கொண்டவரிடம் படம் பற்றி பேசினோம்.
 ’வசந்தமாளிகை’ படத்தில் சிவாஜி பாடிய பாடலின் வரியை படத்தின் தலைப்பாக வைத்ததன் காரணம் என்ன?
“நடிப்புக்கு உதாரணமாக இருக்கும் நடிகர்திலகம் நடித்த பாடலின் வரியை அறியாத ரசிகர்கள் இங்கே குறைவுதான். அப்படி பிரபலமான பாடலின் வரி எங்களுக்கு தலைப்பாக கிடைத்ததில் மகிழ்ச்சியே. தவிர கதைக்கு பொருத்தமாகவும் இருந்ததால் வைத்தோம்.”
என்ன கதை, எப்படி பொருந்தி வருகிறது?
ஒரு சுனாமியில் தொலைந்து போகும் ஒரு குழந்தையை தேடி அலையும் நாயகன். சூழ்நிலையின் பொருட்டு தன்னிடம் வந்து சேரும் அந்த குழந்தையை வளர்க்கும் நீதிபதி. குழந்தைக்கு சொந்தம் கொண்டாடும் இந்த இருவருக்குள்ளும் நடக்கும் பாசப்போராட்டமும் அதைச்சுற்றிய சம்பவங்களுமே கதை. ஹீரோ, நீதிபதி தவிர கதையோட்டத்தில் டிராவல் ஆகும் அத்தனை கதாபாத்திரங்களுக்குள்ளும் அலையடிக்கும் இரண்டு குணங்களின் குறியீடாகவும் இருக்கும் என்பதாலேயே ‘இரண்டு மனம் வேண்டும்’ என்ற தலைப்பை வைத்தோம்.”
ஹீரோ, ஹீரோயின் பற்றி?
“ஷஜித் சுரேந்தர் என்ற புதுமுகம்தான் நாயகன். நாயகிகளாக நடித்திருக்கும் சிலங்கா, சைனாவும் புதுமுகங்களே. நீதிபதியாக மோகன் சர்மா, அரசியல்வாதியாக அழகு, காமெடியும் குணச்சித்திரமும் கலந்த கதாபாத்திரத்தில் கிரேண்மனோகர், சப் இன்ஸ்பெக்டராக படத்தின் தயாரிப்பாளர் அனில், வில்லனாக மணிமாறன், அருள்மணி, பழம்பெரும் மலையாள நடிகை ஸ்ரீமாஜிநாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்தில் வேறென்ன ஸ்பெஷல்?
“நாகர்கோயிலில் உள்ள ஒரு கிராமத்து கடற்கரைதான் கதைக்களம். படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவும் இந்த கடற்கரை இருக்கும். ஒரு சோகப் பாடல் காட்சியை இந்த கடற்கரையில் எடுத்திருக்கிறோம். நாயகிகளில் ஒருவரான சிலங்கா, கடற்கரையை ஒட்டி நடந்துவருவது போன்ற காட்சியை எடுத்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று வந்து நாயகியை கடலுக்குள் இழுத்துச்சென்றது. நாங்களெல்லாம் அதிர்ச்சியாகி நின்றோம். அலையடித்து நின்றபோது கரையில் இருந்து சில மீட்டர் தொலைவில் கடலில் போராடிக்கொண்டிருந்த நாயகியை நீச்சல் தெரிந்த தொழிலாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி கரை சேர்த்தபோதுதான் எங்களுக்கு உயிரே வந்தது.”
எந்த நம்பிக்கையில் புதுமுகங்களை வைத்து படம் எடுத்தீர்கள்?
“அந்த நம்பிக்கையை கொடுத்தது கதைதான். பிரபல நடிகர்கள் நடித்தால் கதையில் நிறைய சமரசம் செய்துகொள்ளவேண்டி இருக்கும் என்பதால் புதுமுகங்களை நம்பினோம். இன்றைக்கு பெரிய நடிகர்களாக இருப்பவர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் புது முகங்களாக இருந்தவர்கள்தானே.”
கவர்ச்சி, கமர்ஷியல் உண்டா?
“கமர்ஷியலா இருக்கும் கவர்ச்சி இருக்காது. குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருந்ததால்தான் சென்சாரில் ஒரு கட்கூட வாங்கவில்லை. படத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்பதில் எனக்கு இரண்டாவது சிந்தனை இல்லை” என்று நம்பிக்கையுடன் முடிக்கிறார் பிரதீப் சுந்தர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, வசனம் : பி.ஆர்.அஜயக்குமார்
இசை : முகமது அலி
ஒளிப்பதிவு : வி.கே.பிரதீப்
எடிட்டிங் : ரஞ்சித் டச் ரிவர்
சண்டைப் பயிற்சி : ஃபயர் கார்த்தி
பாடல்கள் : ‘நேரம்’ வேல்முருகன்
தயாரிப்பு : ஹோலிமான் ஃபிலிம்ஸ் அனில் கொட்டாக்காரா
இயக்கம் : பிரதீப் சுந்தர்

6,நாளை முதல் குடிக்க மாட்டேன்


சென்னை, : பனிமதி பிலிம்ஸ் சார்பில் எம்.ஜி.ராஜா தயாரிக்கும் படம், ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’.  புதுமுகங்கள் ராஜ், காந்தராஜ், சம்ருதின், பனிமதி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு ‘புன்னகை’ வெங்கடேஷ். இசை ஆர்.சிவசுப்புரமணியன். கோ செந்தில்ராஜா இயக்குகிறார். 
‘மதுவுக்கு அடிமையான ஒருவன், தன் வாழ்க்கையில் எதை எல்லாம் இழக்கிறான், பிறகு அவனுக்கு ஏற்படும் பிரச்னையில் இருந்தும் குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் படம் இது.7ஆக்சன் ஹீரோ பிஜூ

நிவின்பாலியின் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படத்தைப்பற்றி பெட் கட்டாத குறையாக ரசிகர்கள் விவாதம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எதற்காக என்பதை சொல்வதற்குமுன் இந்தப்படத்திற்கு எதிர்பார்ப்பு சதவீதம் கூடியதற்கான சில காரணங்களை பார்த்து விடலாம். 'பிரேமம்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு நிவின்பாலி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இது. நிவின்பாலி முதன்முதலாக தயாரிப்பாளராக மாறியிருக்கும் படம், முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் படம், '1983' என்கிற மாஸ் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அப்ரிட் ஷைன்-நிவின்பாலி இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.


ஆனால் பெட் கட்டும் அளவுக்கு ரசிகர்களை தூண்டியது இந்த காரணங்களில் ஒன்றான போலீஸ் கேரக்டர் தான். ஆம் மலையாள சினிமாக்களில் மோகன்லால், சுரேஷ்கோபி, மம்முட்டி, பிருத்விராஜ் என போலீஸ் கேரக்டர்களில் நடித்த அனைவருமே மாஸ் ஆக்சன் காட்டியிருந்தார்கள். அதுதான் ரசிகர்களுக்கும் பிடிக்கும். 


ஆனால் இந்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' காமெடிப்படம் என ஒரு சிலர் கொளுத்திப்போட்டதால், இது மாஸ் படமா இல்லை காமெடி படமா என்றும், நிவின்பாலி சீரியஸ் போலீசா, இல்ல சிரிப்பு போலீஸா என்பதும் தான் விவாதப்பொருளாக மாறியுள்ளன. ஆனால் படத்தின் இயக்குனர் அப்ரிட் ஷைனோ, இது காமெடியும் அல்ல மாஸும் அல்ல, ரியலிஸ்டிக்கான போலீஸ் படம் என விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
8  maheshinte prathikaram
You had 12 releases in 2013, five in 2014 and three in 2015. Is this a deliberate move on your part to cut down the number of films?
(Smiles) Frankly, I don’t keep track of the numbers. But yes, it’s true. I had found some exciting projects earlier and I did them. Now, I am looking forward to things that I have not tried doing before. I feel that I have time to play around with subjects and themes. I may be cautious about the number of films I am committing to, but I am utilising that time to do something that I believe in.
The perception is that you have become choosier about your films.
Actually, I never plan things. I just go with my gut feeling. Of course, I might be proved wrong, but I am never in doubt about any project. Earlier, I used to get excited about certain projects and that is why I acted in so many films. Nowadays, I don’t get too enthused about all the scripts I get to hear. I don’t want to do a film just for the sake of it. I am looking for something exciting in every project. Right now, I have signed on for three films that are really big, though I can’t reveal any details about them at this point of time.
Monsoon Mangoes, your first release of the year, was a different film…
It was meant to be a fun ride, like a Tintin novel. The original concept was fabulous, with so many emotions and without a geography or specific place. I am happy that I tried doing something like that.
How about Maheshinte Prathikaram?
Maheshinte Prathikaram is absolutely fresh and different. It’s a serious comedy and its storyline has been inspired from some real-life incidents.
You are perceived as an intense actor. How comfortable are you while doing comedy?
Let me make something clear: I can’t do anything in particular to make others laugh. I do what is necessary for a character. The body language of the character may make others laugh. In my kind of films, you have to read between the lines. I can’t be loud just to make the viewers laugh. That is how I want to connect with the viewers.
Do successes, failures and expectations affect you?
I believe it’s a part of the game. I do take failure quite badly. After the failure of my first film, I stayed away for several years. On that note, I am never insecure, not even for a moment. I clearly know what good cinema is for me. My attempt has always been to make good films. I am in that process all the time.
But you seem to shy away from the limelight and you are rarely seen at big events and award shows?
I am an introvert. When I am with my friends, I am comfortable. I like to laugh and to make people laugh. I don’t like being in the middle of a crowd, though I would be fine after 10 minutes or so.
Also, I don’t do films for awards. I want my films to do the talking. I feel if people have to understand me better, I should do more good films. I just want them to know me through my films.
Talking about new projects, what excites you now as an actor?
It keeps changing. Earlier, deep, moving topics used to excite me. Nowadays I am looking for films that will bring a smile to people’s face.
How has marriage changed you as a person?
I have realised that marriage is beautiful. After I got married I learnt that I am a lot more grounded than I thought I was. I love the feeling of being wanted and wanting to be with some one. That has really changed my perspective. All of a sudden I decided to stop everything I was working on, I returned the advances and decided to start fresh.
Is Nazriya planning a comeback?
Definitely. She is committed to a project and is already in talks with friends. It’s just that we need some time to settle down.
Is there a project in the offing with your wife as a co-star?
(Laughs) There has been no such offer as of now but I am not saying we won’t do such a project in the future.
When all your peers are vying to do films outside the Malayalam film industry, why are you hesitant to do so?
I think in Malayalam and I am happy being here. I am not sure whether I will enjoy a space while working in a language that I don’t understand or speak.
நன்றி - தினமலர், தினமணி , மாலை மலர் , சினிக்கிறுக்கல் , சினி பக்கம்  ஆல் வெப்சைட்

0 comments: