Sunday, February 28, 2016

தலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா? எப்டி?

1  டீக்கடை மாஸ்டருக்கு உடம்பு சரி இல்லையாம்

 அதுக்கென்ன இப்போ?

 லைட் டீ மட்டும் தான் போட்டுத்தருவாராம், ஸ்ட்ராங்க் டீ முடியாதாம்


=================

2  மேடம்,  என்ன இது? குனிஞ்சு உக்காருன்னு  படத்துக்கு டைட்டில் வெச்சிருக்கீங்க?

 நிமிர்ந்து நில்-னு ஆல்ரெடி வெச்ட்டாங்களே?


=============

3 டியர்! உங்க சொந்த ஊர் எது?

HOSURE

அங்கே என்னைக்கூட்டிட்டுப்போவீங்களா?

OH,SURE==============

4  ஜட்ஜ் = எதுக்காக தலைவரை மேடைல இருந்து தள்ளி விட்டீங்க?

கைதி=  என்னை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாதுன்னாரு


===============

5 கல்யாணியை என்னால மறக்கவே முடியலை

 விடு கழுதையை,வேற ஃபிகரா இல்ல?


 கல்யாணி  பீர் பற்றி சொல்றேன், கிடைக்கவே மாட்டேங்குது

===============


6  ஊட்டிலயா இருக்கே? பயங்கரமா குளிர் அடிக்குமே எப்டி சமாளிப்பே?


என்ன பண்ண? பொண்டாட்டி அடிச்சாலும், குளிர்அடிச்சாலும் திருப்பி அடிக்கவாமுடியும்?


============
7 இந்த 4 மாத்திரையையும் சுடு தண்ணில சாப்பிடுங்க,

 டாக்டர், எனக்கு வந்திருப்பது ஒற்றைத்தலைவலிதானே?  ஒரு மாத்திரை  சாப்பிட்டா போதாதா?

==============

8  தலைவர் எதுக்காக வீட்டுக்கு வீடு ஒரு ட்யூப்லைட் தர்றாரு?

 சுத்த ட்யூப் லைட்டுடா நீ. அவர் எல்லாருக்கும் பல்பு தர்றாரு


===============


9 போன தை யிலேயே எனக்கு மேரேஜ் ஆகிஇருக்கவேண்டியது, மிஸ் ஆகிடுச்சு,

 போனதையே  நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்காத,ஒரு பொண்ணு மிசஸ் ஆகி”டும் டும்”


==============

10  மேடம், ரயில்ல உங்க பக்கம் குழந்தையை படுக்க வைக்காம  எதிர் சீட்ல ஏன் படுக்க வெச்ட்டீங்க?

DRதான் குழந்தையை இப்போதைக்கு தள்ளிப்போடுங்கன்னாரு


================

11  நாங்க ஜெயிச்சா சினிமா தியேட்டர் ஷோ டைம் எல்லாம் மாத்துவோம்

 எதுக்கு தலைவரே?

 ஆட்சி மாறியது, ஆனா காட்சி மாறலைன்னு சொல்லிடக்கூடாதில்ல?


=================

12  உங்களுக்கு  தண்ணில கண்டம்  இ!ருக்கு தலைவரே!

 அய்யய்யோ, அப்போ சரக்கு அடிக்க முடியாதா?

=================


13  ஜட்ஜ் = இந்த வழக்கை சிங்கப்பூர்க்கு மாத்தனுமா? ஏன்?

கைதி= நான் எப்போதான் சிங்கப்பூர் பார்க்கறது?


================

14   என் சம்சாரம் பயங்கரக்கோபக்காரி

 எப்டி சொல்றே?

 குக்கர் விசில் அடிச்சாக்கூட செருப்பைக்கழட்டிடுவா


=================

15  டிராஃபிக் போலீஸ் = ஆர் சி புக் எங்கே?

 சாரி சார், புக் வாங்கற பழக்கம் எல்லாம் இல்லை, லைப்ரரி போய்டுவேன்


================16 நாங்கள்  ஆட்சிக்கு வந்தால்  ஆண்களைக்கவர  மலிவு விடை மதுக்கடை , பெண்களைக்கவர மலிவு விலை நகைக்கடை திறப்போம்


=================


17 டியர், என் தங்கச்சியை  டெடி பியர் பொம்மைன்னு வர்ணிச்சீங்களாமே?

அது வந்து.. ம்ம். நாம பேசிட்டு இருக்கும்போது சிவபூஜைல கரடி போல் வந்துடறாளே?

===============

18  தலைவரே! நீங்க தான் எங்க தெய்வம்

 எப்டி?

 கஞ்சிக்கே வழி இல்லாம இருந்தாலும் கட்டிங்க்கு வழி பண்ணித்தர்றீங்களே?=================

19  குருவே! வாழ்க்கை பற்றி உங்க கருத்து என்ன?

 அம்பிகா -சிவாஜி நடிச்ச சோகப்படம்னாலும் அதுல சில்க் கிக் பாட்டு 1 இருக்கு


=================

20 தலைமுறை இடைவெளி என்பது 72 நாட்கள்தானா? எப்டி?


 அக்டோபர் 31  ஆரம்பம் ரிலீஸ், அடுத்த ஜனவரி 10  வீரம் ரிலீஸ்.இடைப்பட்ட கேப் 72 நாள் தானே?


=================

0 comments: