Monday, February 01, 2016

தெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்டி சொல்றே?

சூரிய உதயத்துக்கு முன் நீ எழுந்து விட்டால் உன் வெற்றிக்கு அஸ்தமனம் கிடையாது


============2 சக மனிதனுக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள் ,செய்ய நினையாதவர்கள் தான் இந்த சமூகத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள்
===========3 பெற்றோர் ,பெரியோர் சொல் கேட்டு நடக்க வேண்டும்.அதிகாலையில் தினம் 4 கிமீ நடக்க வேண்டும்.இவை உன் வாழ்வில் தினம் நடக்க வேண்டும்
============
4 வீண் ஆனது என நாம் ஒதுக்கிய பல உபயோகமானவையாக இருக்கக்கூடும்.உதா - பிர"வீண்" என்ற பெயர்ச்சொல்லுக்கு திறமைசாலி என்று பொருள்=============
5 தலைவர்கள் ,நடிகர்கள் வாழ்வு உயர தாமாக முன் வந்து பல்லக்குத்தூக்கத்தயாராக இருப்பவர்கள் இருக்கும்வரை இந்த சமூகம் முன்னேறாது=============
6 வயிறு பசியுடன் இருக்கும் நேரமே மூளை சுறுசுறுப்பாக இயங்கும் தருணம்.எனவே பசித்த உடனே சாப்பிடாதீர்!
==============7 பட்டுப்போல் மென்மையாக இருப்பதால்,பட்டுப்புடவையைக்கட்டிக்கொள்வதால் தொட்டுத்தொடரும் பாரம்பரியம் என நினைப்பதால் பெண்கள் பட்டினத்தார் !================8 ஏன் எனக்கு மென்சன் போடாதவங்க எங்கிட்ட பேசாதவங்கள ,டி எம் அனுப்பாதவங்களை ஃபாலோயர்சா வச்சுக்கனும்னு நினைச்சா ஒரு பாலோயர் கூட நிலைக்காது
===========9 நடுரோட்டில் பைக்கில் செல்கையில் சிம்ம வாகினி,ஜகன் மோகினி வகையறாவிடம் கடலைபோடாதீர்!எருமை வாகனன் வந்து உங்களுக்கு லிப்ட் தரக்கூடும்=============
10 அன்பே! நீ காதலியாய் இருக்கும் வரை சிண்ட்ரெல்லா! கல்யாணம் ஆகி விட்டால் சிலிண்டர்லா!
==========11 எங்கிட்ட பேசாதவங்களா பார்த்து அன்பாலோ பண்ண போறேன் 😋😋😋😋😋"மிஸ்! நீங்க பாரீன்,நாங்க லோக்கல்.எப்டி "கிட்டே"வந்து பேச முடியும்?============


12 வளர் பிறை நாட்களில் வளர்மதிக்கு மூளை கொஞ்சம் அதிகமாய் வளரும் என்பது ஒரு வித மூட நம்பிக்கையே!


=============


13 நான் பாலோ செய்யும் அத்தனை பேருடனும் டெய்லி பேசியிருக்கிறேன்


சும்மா அடிச்சு விடாதீங்க.5000 பாலோயர்ஸ் ங்க கூட டெய்லி பேச டைம் பத்துமா பத்மா?


=============

14 யாரை மாதிரி எழுதனும்னு ஆசைப்படறீங்க?

எல்லாருக்கும் தனித்தனிக்கையெழுத்து இருக்கு, எதுக்கு இன்னொருத்தர் மாதிரி நாம எழுதனும்?


================


15  விடிகாலை ல 4 மணிக்கு ஒரு நெட் தமிழன் “போ லூசு , உன் கிட்டே பேசமாட்டேன்”னான், இன்னும் பேசிட்டேதான் இருக்கான், அண்ணன் எப்போ எந்திரிப்பான்?திண்ணை  எப்போ காலி ஆகும்?

====================

15  தெறி படம் வேட்டைக்காரன் மாதிரியே ஹிட் ஆகும்னு எப்டி சொல்றே?

வேட்டைக்காரன்ல மகன் நடிச்சாரு, தெறில மகள். செண்ட்டிமெண்ட் படி ஹிட் தான்


=======================


16  அன்பே சொரூபா !
உன்னைக்கண்ணாலம் கட்டிக்கிட்டா
சோறு, ரூபா 2ம் இலவசமாக் கிடைக்குமாமே?நிஜமா?
 (  "SORU"BA)! ( SO"RUBA")


================


17 நிகழ்காலத்தில் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கினால் எதிர்காலத்தில் கரை வாழ் உயிரினங்களான மனிதர்க்கு ஏதோ கேடு  வரப்போகுது என்று பொருள்


===================

18 கூடன் குள அணு மின் நிலைய சோதச்னையால் வெளிப்பட்ட கதிரியக்க  பாதிப்பால் தான் கடல்வாழ் உயிரினங்கள் இறந்திருக்கும் என கணிக்கிறேன்


===============


19  பெற்றோர் தம் பிள்ளைகளுக்குக்கொடுக்கும் அழுத்தமானது விதை நெல்லின் மேல் இருக்கும் மண்ணின் அழுத்தத்துக்குச்சமம்

==========

20 தினசரி 3,வேளையும் இருக்கவேண்டும் உணவுக்கட்டுப்பாடு.
இருந்தால் வருடம் 365 1/4 நாளும் வராது உடல் ஆரோக்யத்தட்டுப்பாடு

=================

0 comments: