Thursday, February 11, 2016

நாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற்றம்

1  தலைவரே! எதுக்காக  அவரை கட்சில இருந்து நீக்குனீங்க?

 என்ன தைரியம் இருந்தா  என் எதிர்லயே கொட்டாவி விட வாயைத்திறந்திருப்பாரு?===============


2 ஜட்ஜ் = எதுக்காக சம்சாரம் தலைல இரும்புக்கம்பியால அடிச்சுக்கொலை செஞ்சீங்க?


கைதி = குடிச்சியா?ன்னு கேட்டு  டார்ச்சர், தலைல அடிச்சு சத்தியம் பண்ணச்சொன்னா,


==================


மிஸ்! 5 இண்ட் 6 =?
இது தெரியாதா?30 வீட்டை கூட்டலையா?னு கேட்டதுக்கு வேலைக்காரி வரனும் எனக்கு பெருக்க வராதுன்னீங்களே?


=============

4 தலைவரே! கருப்பையாவை நீக்கிட்டாங்களாம், என்ன பண்ண?
கருப்பு தான் எனக்குப்பிடிச்ச கலரு
கருப்பான கையால என்னைப்பிடிச்சான் ரிங்க்டோன் செட் பண்ணு


================

5  என்னய்யா அநியாயமா இருக்கு? சுகர் இருந்ததால தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா?


அவர் ஒளிச்சு வெச்சிருந்தது பிரவுன் சுகராம்


=================


6  காலைலயே குஷ்பூ என் கிட்டே பேசிட்டாங்க

 அடேங்கப்பா, பிரமாதம் என்ன பேசுனாங்க?

 குட் மார்னிங்க் மேடம்னேன், நன்றி-ன்னாங்க


===================


7  நாவல் பழம்  கிலோ  125 ரூபாதான், வாங்கிட்டுப்போங்க 

 வேணாங்க, ரொம்ப குறு நாவலா இருக்கு, வீட்ல திட்டு விழும்


=================


8  விஜய் - சார், நாயகன் ரீமேக் ல நடிக்கலாம்னு இருக்கேன், உங்களுக்கு ஏதும் அப்ஜெக்சன் இல்லையே?

கமல்- அப்போ தலைவா ல என்ன செஞ்சிருந்தீங்க?


================

டாக்டர்.டெய்லி பகல் டைம்ல ரெகுலரா வருது கனவு.அதுல யாரோ என்னை டச் பண்றாங்க.
மிஸ்! ஆபீஸ் ல தூங்காதீங்க.எவனோ தடவிட்டு இருக்கான்


============

10 டியர்.கண்ணைப்பாத்து பேசற ஆம்பளையைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்குமாம்.
உங்க ரசனைக்காக எங்க ரசனையை விட்டுத்தர முடியாது


=============

11 தலைவரே!,ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து எதுல போடுவீங்க?
போலீஸ் ஸ்டேசன் ல.கோர்ட் உத்தரவு.டெய்லி லோக்கல் ஸ்டேசன் ல சைன் பண்ணனுமாம்


===========


12 நான் ஃபேஸ்புக்  வந்து முதல்முதலா ஐ லவ் யூ சொன்ன 
பொண்ணு  இதுதான்


 ஓஹோ, அவரு யாரு?


 நான் முதன் முதலா அடி வாங்குனது அவர் கிட்டேதான், புருசனாம்

=================

13 டியர்! உன் சட்டை நானும் போட்டு அலைவேன்....

 தாராளமா அலைஞ்சுக்கோ, ஆனா அதே மாதிரி உன் ஜாக்கெட்டைப்போட்டுட்டு என்னை அலையச்சொல்லக்கூடாது


=================

14 தலைவரே! அவரை ஏன் கட்சியை விட்டு விரட்ட்டீட்டீங்க?


நேர்மையா, நாணயமா  இருக்கறவங்களை கட்சில வெச்சிருந்தா நாம சம்பாதிக்க முடியாது


================


15 DR,என் உடம்பு கூன் போட்ட மாதிரி எப்பவும் வளைஞ்சே இருக்க என்ன செய்யனும்?

ஏன் அப்டி இருக்கனும்?

 அப்போதான் MLA பதவி என் கிட்டே இருக்கும்


==================


16  தலைவரே! ஆட்சிக்கு வந்ததும் எதுக்கு 1 கோடி பேரை டிஸ்மிஸ் பண்றீங்க?

 1 கோடி பேருக்கு வேலை தருவோம்னு வாக்கு கொடுத்தமே? நிறைவேற்றவேணாமா?


================

17  விஜய்  ரசிகை = டியர், என்ன டிஃபன் பண்ண?
அஜித் ரசிகன் = எதோ 1, மேக் இட் சிம்ப்பிள்
வி ர = ஐ, அப்போ உப்புமா பண்ணவா?


================


18  அமைச்சரே! அரண்மனை-2 போஸ்டரை அந்தப்புரத்தில் ஒட்டிய கயவன் யார்?

 ஏன் மன்னா?

 மகாராணி கடுப்பாகி யார் அந்த சக்களத்தி? என்கிறார்


=====================19  நயன் தாரா - மம்முட்டி  நடிச்ச மலையாளப்படம் ரிலீஸ் ஆகுதாமே?

 யோவ், இது அந்த மாதிரி படம் இல்ல. டீசண்ட்டான படம்

====================20  நாங்க ஆட்சிக்கு வந்தா புதிய மாற்றம், புதிய முன்னேற்றம்


 தலைவா! இது எங்கேயோ கேட்ட மாதிரி  இருக்கே? 

 இல்லையே? புதிய  சேர்த்திருக்கனே?=================


0 comments: