Saturday, February 06, 2016

மிஸ்! ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்டர்ல ஆக்டிவ்வா இல்ல?

மிஸ் ஆரோக்ய மேரி.ஐ லவ் யூ.


ஓ.என் கிட்டே எது உங்களைக்கவர்ந்தது ?
எதும் இல்ல.யாராவது கேட்டா ஆரோக்யத்துடன் வாழறேன்னு சொல்லலாமே?===========

2 சிம்ப்ளிசிட்டி சினிமா ஹீரோ =,சார்.பாஸ்போர்ட் ஆபிசா? எனக்கு பாஸ்போர்ட் எடுக்கனும்.வீட்டுக்கு ஆபீசர்சை அனுப்ப முடியுமா?நான் வந்தா கூட்டம் கூடிடும்.

=============

3 ஜட்ஜ் = எதுக்காக சம்சாரத்தை தீர்த்துக்கட்டினீங்க?


சசி தரூர்.( கைதி)= பிடித்தவர்களை கொண்டாடி "தீர்ப்பதில் "தான் வாழ்க்கையின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி=============


4 ஹால் ல சாப்பிடற நீங்க சரக்கு அடிக்கும்போது மட்டும் ஏன் பெட் ரூம் போய்டறீங்க?


ஆல்ஹ"ஹால்" சாப்பிடக்கூடாதுன்னாங்க#SAY NO TO ALCO"HALL"


===========

5 எரும்பு ,எறுமை ன்னு தப்பு தப்பாஎழுதி இருக்கியே?


டீச்சர்
எறும்பு சின்னது.அப்போ சின்ன ரு தானே வரனும்? எருமை பெருசு.அப்போ பெரிய.று தானே?=============

6 டியர்! உன் சமையல் அறையில் நான் உப்பா?,சர்க்கரையா?


க்ளீனர்.& ஹெல்ப்பர்================

7 டியர்.உங்க சம்பளம் குறுந்தொகை யா இருக்குன்னு அப்பா சொல்றாரு.


8 மாசம் சேர்த்து வெச்சிருந்தா எட்டுத்தொகை யா பெருகிடும்னு சொல்லிப்பாரு================

8 டியர்! பொண்ணுங்களை  டி போட்டு கூப்பிட்டா தப்பில்லையா?

 அடியே! டீ போட்டு கூப்பிடலாம், சரக்குப்போட்டுட்டுதான் கூப்பிடக்கூடாது


===================9  விஜய் ரசிகை = அப்பா, இந்த மாப்ளை வேணாம், ரொம்ப சாத்வீகமா இருக்கார்

ஏம்மா! ”ஆத்வீக்”மா இருந்தாத்தானே உனக்குப்பிடிக்காது?


=================


10  எங்க அம்மா பக்கத்து ரூம்ல இருந்துட்டே, எனக்கு கால் பண்ணி காமடி பண்ணிட்டு இருக்காங்க
அது காமெடி இல்லை. உங்க ஃபோன் எங்கேஜ்டா?னு செக்கிங்


===================


11 எனக்கு தலைவலி வந்தா அவர் தான் அமுக்கி விடுவார்,பேன் இருந்தாலும் எடுத்து விடுவார்

ஓஹோ, பெய்ன் கில்லரும் அவர்தான், பேன் கில்லரும் அவர்தான்


===================


12 மாமா! உங்க பொண்ணு டெய்லி கோபத்துல "கதகளி" ஆடறா


மாப்ளை.அவ விஷால் ரசிகை."திமிரு" பிடிச்சவன்னு அப்பவே சொன்னேனே?

=============


13 மிஸ்!ஒரு லட்சம் ரூபா கடன் வேணும்


சாரி.இல்ல
.பொய்.பேர்லயே லட்சம் ரூபா இருக்கு.அப்போ அக்கவுன்ட்ல இருக்காதா? ("LAKSH"MI)


===========
14  நான் யார் கிட்டேயும் வாய் கொடுத்து மாட்டிக்க மாட்டேன்


ஓஹோ, அப்போ லவ்வருக்குக்கூட லிப் கிஸ் லேதா?


===================


15 டியர்!சண்டைப் போட்டு  பேசாம இருப்பது தப்பு.கௌரவமே பார்க்காம முதல்ல பேசுறது தான்  அன்பு


 அய்யய்யோ, நேத்துதான் கே டிவில கவுரம் பார்த்தேன்
====================16 மிஸ்! ஏதாவது சமையல் டிப்ஸ் ப்ளீஸ்!

 ஒரு டிப்ஸுக்கு 100 ரூபா சார்ஜ் ஆகும்

 ஏம்மா மின்னல்? 50 ரூபா இருந்தா ஹோட்டல்ல போயே சாப்ட்டுக்குவனே?=================


17 டியர்! என் பிள்ளைத்தமிழ்  எப்டி?


நீயே ஒரு வரிக்கு 10 ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் பண்ணுவே, உன் பிள்ளை எப்ப்டி இருப்பான்?அவன் தமிழ் எப்டி இருக்கும்?


===============18  டாக்டர்! ஸ்வீட்ஸ் சாப்பிடற மாதிரி  டெய்லி கனவு வருது.

ஓஹோ, ஃபேஸ்புக்ல எவனாவது ஸ்வீட் ட்ரீம்ஸ் -னு சொல்லி இருப்பான், அவனை அன்ஃபாலோ பண்ணவும்


==================

19  மிஸ்! ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்கற நீங்க ஏன் ட்விட்டர்ல ஆக்டிவ்வா இல்ல?

 இருக்கறது ஒரே ஒரு ஆக்டிவா. எல்லா இடத்துக்கும் ஒரே நேரத்துல?


===================


20 தலைவரே! உங்க பையன் சரக்கு அடிச்சா அதுக்கு துணை போவீங்களா?
 நோ
தமிழக மக்களை என் குழந்தைகளாகக்கருதுகிறேன்னு சொல்லிட்டு டாஸ்மாக் திறந்தது ஏன்?


===========================


===================

0 comments: