Thursday, February 18, 2016

பிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா? ஐ ஜாலி

விஜயகாந்தின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் திமுக கடுப்பு: சில நாட்களுக்கு 'தண்ணி' காட்டும்படி மு.க ரகசிய உத்தரவு # எந்தத்தண்ணினு சொல்லவே இல்ல



============



ராகுல் தமிழக முதல்வராக வேண்டும் : இளங்கோவன் ஆசை # எதுக்கு திடீர்னு இந்த ரா”குல்லா”?




==============



3  திமுகவை விஜயகாந்த், திருமாவளவன் விமர்சிக்காதது ஏன்?அன்புமணி ராமதாஸ் கேள்வி # நீங்க திமுக /அதிமுக கூட கூட்டணி வெச்சப்போ விமர்சிச்சீங்களா?




==============



4  2ஜி: மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தவில்லை:நீதிமன்றத்தில் ஆ.ராசா வாதம் # எது நடந்தாலும் வழக்கம்போல் கண்டுக்காதீங்கன்னு தான் சொன்னேன்?




================




5  தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது -"சோ”  #  துக்ளக் கலைஞருக்கு சொல்லும் சேதி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்




=============



6  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஷூ வாங்கிக் கொள்ள ரூ. 364-ஐ அனுப்பிய தொழிலதிபர் # ஷூ மந்திர காளி, உன் ஃபேக்டரி இன்னையோட காலி




=============




நடை பயணத்தை முடிப்பதற்குள் மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்: குமரி அனந்தன்

# நடையா நடந்தாலும் அது நடக்காது

========

8 ஜனநாயகம் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம்: சுப்ரீம் கோர்ட் ஆவேசம்.# ஷோல்டரை இறக்குங்க.90% கேஸ்ல அதானே நடக்குது?


===========

9 இந்தியாவில் 45 % குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு-பிரணாப் # குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ஊட்டனும்,பணிப்பெண் ஊட்டினா அப்டிதான்



============




10 2G உண்மையை மறைத்தது சிபிஐ-தில்லி நீதிமன்றத்தில் ஆ. ராசா குற்றச்சாட்டு # இப்பவெல்லாம் திருடர்கள் போலீஸ் மேல குற்றம் சொல்ல ஆரம்பிச்ட்ட்டாங்க




================




11 2வது முறையாக கொலை வழக்கில் சிறுவன் கைது: இளைஞராகக் கருதி தண்டனை வழங்க மனு# கொடூரக்குற்றம் செய்தது சிறார் எனினும் தண்டனையில் கறார் வேணும்




===============




12  என்னம்மா இப்படி பண்றீங்களேம்மான்னு யாரும் கேட்காதீங்க...: லட்சுமி ராமகிருஷ்ணன்# என்னம்மா?அப்படி செஞ்சுட்டீங்களேம்மா இப்டி கேட்கலாமா மேடம்?


===========

13 சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: கேரள அரசு் # குழந்தை பெற்ற ஒவ்வொரு பெண்ணும் தெய்வம் தானே? ஏன் அனுமதிக்கக்கூடாது?


=========

14 கருணாநிதிதான் திமுகவின் முதல்வர் வேட்பாளரா? திட்டவட்டமாக சொல்லாத மு.க. ஸ்டாலின் # சொல்லிட்டா திட்டு விழுமே?ன்னு யோசிக்கறார் போல

========

15 கூட்டணியை 15 நாட்களில் உறுதி செய்வோம்: பொன்.ராதாகிருஷ்ணன் # ஏன்னா 14 வது நாளில் தான் கேப்டன் முடிவு அறிவிக்கறார், ஆல் ஆர் வெய்ட்டிங்க்


================


16 ஒரே நாளில் 1,500 பேர் விருப்ப மனு: முகூர்த்த நாளில் குவிந்த திமுகவினர் # பகுத்தறிவுப்பட்டறைகளே இப்பவெல்லாம் நல்ல நேரம் பார்க்கறாங்களாம்


================

17 234தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்-ஜெ வின் அறிவிப்பால் சிறிய கட்சிகள் கலக்கம் # பெரிய பெரிய பாரம்பரியம் மிக்க கட்சிகளே கதி கலங்கிகிடக்கு


==================

18   முகநூலில் முதல்வரை விமர்சித்தவர் (நாகூர் கண்ணாடி நகரைச் சேர்ந்தவர்) கைது-செய்தி # அப்போ பிரதமரை விமர்சிச்சா ஃபாரீன் போலாமா?


=================


19 அதிகாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து; இளைஞர் பலி- அண்ணா சாலையில்  # வெறும் வயிற்றில்  தண்ணி குடிச்சா நல்லதுன்னாங்களாம்


=================


20 அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறாதீர்: இளைஞர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள் # வேலை கிடைச்சா விட்ட காசை பலமடங்கு லாபத்துடன்எடுத்துடலாம்னுதான்


====================

0 comments: