Friday, February 05, 2016

கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுனு எத்தனை டைம் சொல்லியாச்சு?

இன்னும் 100 நாளில் தமிழகத்துக்கு விடிவு வந்துவிடும்- குஷ்பு ஆரூடம் # அடேங்கப்பா, எல்லார்க்கும் ஒரு அரண்மனை சொந்தமா வந்துவிடுமா?


=======================ஊழல் பெருச்சாளிகளை வேரோடு ஒழிப்போம் -கலைஞர் # கழகத்துல இருக்கற முக்கிய ஆட்களை எல்லாம் ஒழிச்சுட்டா வேட்பாளர்களுக்கு என்ன பண்ணுவீங்க?


===================

உதயமாகிறது காங். (ஜெ.) அணி.ஜெ வை சந்தித்து மனு கொடுத்தார் விஜயதாரணி!! # அம்மா ஓக்கே சொல்லிட்டா  இனி வி”ஜெ”ய தாரணின்னு பேரை மாத்திக்குவாரா?


==================


4  பாமக கூட்டணிக்கு ஆதரவு 2.2 சதவிகிதம் மட்டுமே - செய்தி # அப்பாவுக்கு 4 , மகனுக்கு 2 இரண்டு பேருக்கும் சேர்த்தாலும் 6% தான் வருதே?


==================

5  தென்னிந்தியாவின் அமிதாப் பச்சன் எஸ்ஏசி! – கலைப்புலி தாணு # அப்போ தென்னிந்தியாவின் அபிஷேக் பச்சன் விஜய்-யா?ஏதோ பேசனும்னு பேசக்கூடாது


===================

ஊழலில் சுனாமி அதிமுக, கதாநாயகன் திமுக: ராமதாஸ் விமர்சனம் பினாமி காங்கிரஸ் அதையும் சேர்த்துக்குங்க டாக்டர்


===================


7 திமுக 154 இடங்களில் வெல்லும். - கருணாநிதி டிவி கருத்து கணிப்பு
தான் சொல்றீங்க.234 லிலும் வெல்லும்னு சொல்லிடுங்க.காசா?பணமா?


=============

8 தொடர்ந்து சட்டசபைக்கு வராதவர்கள் பட்டியளில் கருணாநிதி முதலிடம் # உயிருனும் மேலான உடன் பிறப்பே!பார்த்தாயா?கழகத்தின் சாதனையை?ஆட்சிக்கு வந்தாலும் வராவிட்டாலும் என் நிலை இதுதான்


===================
9 தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது: ஜெ# அது எப்பவும் போல் நடந்துட்டுதான் இருக்கு.போலீசோட புலனாய்வுத்திறன் குறைஞ்சிடுச்சு

===================


10 திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் காத்திருப்பு-ஸ்டாலின் # 2ஜி வழக்கு தீர்ப்பு பாதகமா வரப்போகுதுனு தெரிஞ்சும் அடிச்சு விடறாரேஇதான் கெத்து


==============


11 அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம்: ஜெ # மேடம்.அப்டினு யார் சொன்னாங்க?மக்களா?
இல்லை என் ஆணைப்படி நானே தான் சொன்னேன்


============

12 5 ஆண்டில் 1.08 கோடி பேருக்கு வேலை கொடுத்தோம்: ஜெ # வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமா இதை நிரூபிக்க முடியுமா ?

=============


13 திமுக சமூக நீதி காக்கப்பாடுபடும் இயக்கம்: துரைமுருகன் # கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணக்கூடாதுனு எத்தனை டைம் சொல்லியாச்சு?

=============

14 விரைவில் திமுக  தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் - ஸ்டாலின் # டாக்டர் ராம்தாஸ்க்கு தெரியாம ரிலீஸ் பண்ணனும், ஏன்னா நாம 75% காபி தானே அடிப்போம்?


================


15 கருத்துக்கணிப்பு திமுகவிற்கே சாதகம்
-கனிமொழி # தமிழனைப்பத்தி தெரியாதா மேடம்? தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் அன்னைக்கு தான் முடிவெடுப்பான்


=================


16  தேர்தலில்வெற்றிபெற திமுக வக்கீல்கள் உதவ வேண்டும்- துரைமுருகன் # எலக்சன் நடக்கும்போது உடன்பிறப்புகள் பூத்க்குள்ள தங்க ஸ்டே ஆர்டர் வாங்கனுமா?


=================

17 தமிழகத்தின் நலனை அடகு வைக்கிறார்  ஜெ - ஸ்டாலின்  # இனியும் உங்க கிட்டே ஆட்சிப்பொறுப்பைக்கொடுத்தா கூறு போட்டு வித்துடுவீங்களே?தலைவா!


================

18  மதுக்கடைகளை மூடினா கள்ளச்சாராயம் பெருகி உயிரிழப்பு ஏற்படும்-நத்தம்.விஸ்வநாதன் # இப்போ டாஸ்மாக்ல குடிச்சவன் மட்டும் 100 வருசமா வாழப்போறான்?


=================


19 மதிமுகவை அழிக்க நினைத்தால் தோல்விதான் கிடைக்கும்:- வைகோ  # யாருங்க அழிக்க நினைச்சா? ஓரமா உட்காருங்க 2 % ஓட்டுதான் கிடைக்கும் நமக்கு


==================20 திருட்டை தடுக்கவும், பெண் பயணிகளுக்கு பாதுகாப்பை மேம்படுத்தவும் மாநகர பஸ்களில் சிசிடிவி கேமரா    திருடு போகாம பார்த்துக்குங்க


=======================

0 comments: