Monday, February 08, 2016

ச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்வி ராதிகா?

இந்தியாவிலிருந்து வெளியேற விரும்பவில்லை.. இங்கேயே வாழ்ந்து சாக வேண்டும்! - ஆமிர்கான்  # என்ன? அரசியல்வாதி போல் மாத்திமாத்திப்பேசறீங்க?==================
சகிப்புத்தன்மை இந்திய மக்களுடைய டி.என்.ஏ-வில் கலந்துள்ளது-ஸ்ரீ ரவிசங்கர்# ஆமா, தாலி கட்ன சகி என்ன கொடுமை பண்ணாலும் ”சகி”ச்சுக்குவான்
====================
பள்ளி வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை- # எதுக்கு?கட் அடிச்ட்டு 4 ஷோ பார்க்கவா?4*3=12


=============


4 தமிழைக் காக்க வேண்டும் என்பதே தி.மு.க. நோக்கம்: கலைஞர் #-தெரியும் தலைவரே.சன் டிவி ,கே டிவி எல்லாம் தூய தமிழ் தானே?


==============

5 இந்தியாவை விட்டு வெளியேறுவதாக ஒருபோதும் கூறியது இல்லை’ நடிகர் அமீர்கான் விளக்கம் # அப்போ மீடியாக்கள் மக்கள் எல்லாரும் லூசுங்களா?


=============

6 DMKகூட்டணியில் தே.மு.தி.க. எப்போது சேரும்? மு.க.ஸ்டாலின் பதில் # பேரம் நடந்துட்டிருக்கறப்போ ஊடால் பூந்து ஊடகங்கள் குழப்பக்கூடாதுன்னாரா?


================

7 கேப்டன் 234 தொகுதியில் எங்கு வேணாலும் நிற்பார் - பிரேமலதா # என் கணிப்புப்படி "தூ"த்துக்"குடி" தான் கேப்டன் நிக்க மேட்சான இடம்


============

8  ச ம க தொண்டர்களுடன் கலந்தாலோசித்து யாருடன் கூட்டணி என முடிவு-சரத் குமார் # ராதிகா, வரலட்சுமி இந்த 2 பேர் தானே? சட்டுபுட்டுனு கேளுங்க


=====================


தமிழக ஆண்களில் பாதிப் பேர் மதுவுக்கு 
அடிமை:  - டாக்டர் ராம்தாஸ் # மீதிப்பேர் மாதுவுக்கு அடிமை,மொத்தத்துல தமிழன் யாருக்காவது அடிமையாவே


================


10  பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள ரஜினிக்கு கருணாநிதி வாழ்த்து.# இப்போ வாழ்த்தி வெச்சோம்னா தேர்தல் டைம்ல வாய்ஸ் கொடுங்கன்னு கேட்கலாம்


================11 என் திருப்திக்காகவே படமெடுக்கிறேன்- உதய நிதி ஸ்டாலின் # என் படத்தை ஹிட் ஆக்கலைன்னா அரசியலில் குதிப்பேன்னு மிரட்டுங்க தலைவா, செம ஹிட் ஆகிடும்


===============


12 என் திருப்திக்காகவே படமெடுக்கிறேன்- உதயநிதி # படம் எடுக்க எப்படி உங்களுக்கு உரிமை இருக்கோ அதே மாதிரி விமர்சனம் பண்ணவும் எமக்கு உரிமைஉண்டு


================


13  விளம்பரத்தை விரும்பாத நடிகர் "இளைய தளபதி" - இமான் அண்ணாச்சி # இல்லையே, அவர் நடிச்ச ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம் பிடிக்கும்னாரே?


================

14 கூட்டணி குறித்து விரைவில் முடிவு: இளங்கோவன் -செய்தி  # தனி ஒருவன் ஆக நின்றால் முதல்வர்தான்னு குஷ்பூ சொல்லீட்டாங்களே?எதுக்கு கூட்டணி?


===================

15 நாட்டில் கருத்துசுதந்திரம் இல்லை என்று கூறமுடியாது’ அத்வானி # இல்லைன்னு சொல்லிட முடியாது, ஆனா சொன்னாஆபத்தில்லைன்னும் சொல்லிட முடியாது,அதானே?


=======================


16 சென்னை மேயராக இருந்ததில் பெருமை: ஸ்டாலின் # சென்னை வெள்ள சேதத்துக்கு நீங்களும் ஒரு மறைமுக காரணிதானே?ஆக்ரமிப்புகளை அகற்றி இருக்கலாமே?


================


17 அதிமுக தொண்டர்கள் தம் வாழ்க்கையையே மக்கள் பணிக்காக அர்ப்பணித்துள்ளனர் -ஜெ # கூழைக்கும்பிடு போடுபவர்கள் எப்படி கர சேவை செய்யமுடியும்?


=================

18 சமூகப் பணியாற்றுவோம்: அரசியலுக்கு அழைத்த இளைஞர்களுக்கு சகாயம் விளக்கம்# அரசியலில் நுழைந்து தீய சக்திகளை விரட்டியடிப்பதும் ஒரு சமூகப்பணிதானே?


=================


19  

மக்கள் சக்தியால் அதிமுக, திமுகவை வீழ்த்துவோம்: மக்கள் நல கூட்டணி தலைவர்கள் நம்பிக்கை#இந்த டைம் மக்கள் சக்தியே குழம்பி இருக்கு


==================20 இந்தியாவின் மிக பிரபலமான தலைவர்  மோடி: கருத்துகணிப்பில் தகவல்    இருப்பவர்களில் யார் பிரபலம்?னு இன்னொரு கணிப்பு எடுங்க


=====================

0 comments: