Thursday, February 25, 2016

ஃபர்ஸ்ட் நைட் கம்பார்ட்மெண்ட் - ரயில்வே அமைச்சர் அதிர்ச்சி

1  விஜயதரணி ஒரு போராளி - சோனியா காந்தி # ஏம்மா, பிடிச்சு உள்ளே போட்டுடப்போறாங்க, எங்க ஊர்ல போராளின்னாலே ஜெயில்தான்


=============

வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும்-கட்சியினர் வலியுறுத்தல் # பின் தேதி இட்ட காசோலையா தந்துடனும், ஜெயிச்சா செக் பாஸ் ஆகும்


==============


அதிமுகவுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம்' - இல கணேசன் # இரட்டை இலை கணேசன் ஆகிடுவாரோ?


=============


இந்தியா - பாகிஸ்தான் உறவில் பதற்றம் - அமெரிக்கா # சுத்தம் , ரொம்ப லேட் பிக்கப்யா  நீங்க


==============

5   தமிழக அரசு மீது மக்களுக்கும், எங்களுக்கும் திருப்தியில்லை- இல கணேசன் # மாத்தி மாத்தி பேசாதீங்க. நீங்க "இரட்டை  இலை "  கணே”SUN"


===============


6  பாமக மாநில மாநாட்டுப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு # ஏ”மாற்றம்” , பின்னேற்றம்


=================


அவசரமாக பதவி ஏற்பவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பதில் சொல்ல வேண்டும்-கருணாநிதி # ஆட்சி மாற்றத்துக்கு இன்னும்  5 வருசம் இருக்கு தலைவா!


================

சட்டப்பேரவைக்கு செல்லதயங்கும்விஜயகாந்துக்குஅரசியல் நடத்ததகுதியில்லை-சுப.உதயகுமார் # அப்டிப்பார்த்தா கலைஞர், ஜெ 2 பேருமே தயங்கி இருக்காங்களே?

=============


9  தேனியில் சிறிய மலைக்குன்றைக் காணவில்லை: பதிலளிக்க தேனி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு # யாருய்யா அந்த மலை முழுங்கி மகாதேவன்?


======================


10  அ.தி.மு.க., பேனர்கள் வைக்க ஒரே நாளில் விண்ணப்பம்; அனுமதி # தனக்கு தனக்குன்னா டினுக்கு டினுக்குங்குமாம்


========================
  தேமுதிகவின் காஞ்சிபுரம் மாநாடு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும்- விஜயகாந்த் # சரவணன் மீனாட்சி மாற்றம் கூட ஏற்படாது.

11

===============

12   பிரதமர் மோடியின் பாஸ்போர்ட் விவரங்களை கேட்டு அவரது மனைவி மனு :#,எல்லா ஊர்லயும் பொண்டாட்டிங்க புருச.னை செக் பண்ணிட்டேதான் இருப்பாங்க போல


===========

13 கோஷ்டி பூசல் வேண்டாம்: ஒற்றுமையுடன் தேர்தலை சந்தியுங்கள்;- ராகுல் இல்லாத அரசியல் கட்சியும் ,சண்டை போடாத சக்களத்திகளும் உலகில் இல்லை


==============

14 என் வெற்றிக்கு பின்னால் என் மனைவி இருக்கிறார்-கேஜரிவால்
- என் வெற்றிக்குப்பின்னாலும் என் மனைவிதான் ஆனா.விலகி -மோடி

==============


15 அதிமுக அரசின் ஸ்டிக்கர் சாலைகள் 3 மாதங்கள் கூட தாக்குப்பிடிக்காது:-விஜயகாந்த் குற்றச்சாட்டு # எலக்சன் முடியும் வரை தாக்குப்பிடிக்கும்


================


16  எந்தப் பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்ப மாட்டார்.-கலைஞர் # ஸ்டாலினுக்கு சி எம் பதவி உண்டா? இல்லையா?


=============

17  இனி ரயில் டிக்கெட்டுடன் உணவு, போர்வை, தலையணையும் ரிசர்வ் செய்யலாம்!  # ஒரு டம்ளர் பால், ஒரு முழம் மல்லிகைப்பூ தான் பாக்கி


==============

18   ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் திமுகதான்: ஸ்டாலின்  #  சி எம்மா  ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவரா அழகிரி , யோசிச்சுப்பார்க்கவே நல்லாருக்கு 


=============

19  மதுரை, பழனி கோவில்களுக்கு சசிகலா திடீர்  விஜயம் # வேலை செய்யறவன் ஆஃபீஸ் போவான், பாவம் செஞ்சவன் கோயில் போவான்


===============


20  செல்பீக்காக சாகும் மக்களை கொண்ட டாப் 10 நாடுகள், இந்தியா ஆன் டாப்..! # சுத்தம், ஒரு செல்ஃப் தூ  பை  கேப்டன் ரசிகன்


===================

0 comments: