Friday, February 19, 2016

ட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்

1  தெறி என்பது தமிழ் தானே?வரி விலக்கு ஏன் தர்லை மேடம்?


ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் னு ஹீரோ இங்க்லீஷ்ல பேசுனதால அது கட்


==========

2 டியர்.எதுனா ஒரு கவிதை சொல்லுங்க.


ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார்
யோவ்.இது ரைம்ஸ்
பொயட்ரி ,ரைம்ஸ் எல்லாம் கவிதை தானே?


==========

3 டீசரைக்கூடவா பிளாக் பண்ணுவாங்க?


உஷ்.எல்லாம் நம்ம ஏற்பாடுதான்.ஒரு பரபரப்பைக்கிளப்புவோம்


============

4 வரி கட்னீங்களா?

இல்லீங்
வாடகை கட்னீங்களா
இல்லீங்க
நஷ்ட ஈடு கட்னீங்களா?
இல்லீங்க
எதுவுமே கட்டாம ஓசிலயே மங்களம். எப்டி?அதான் பிளாக்கிட்டாங்க்


=========

5 புதுப்படத்துல ஹீரோ பஞ்ச் டயலாக் கேட்டு அரண்டு ட்டேன்.



ஓ.என்ன டயலாக்?



நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடி வா
SJ சூர்யாக்கு டிமிக்கி கொடுத்து ஓடிவா

===========


6 முதல் இரவுக்குப்போகும்போது மாப்ளை ஏன் கைல கிளவுஸ் மாட்டிட்டு போறாரு.?


பொண்ணு E.B.ல ஒர்க் பண்ணுதாம்.ஷாக் அடிச்ட்டா?ஒரு முன் எச்சரிக்கை

===========

7 என் படம் எல்லார்க்கும் ஒரு படிப்பினையா இருக்கும்


யோவ்.அதுக்காக எல் கே ஜி ரைம்ஸ் ,எல்லாம்.சொல்லனுமா படத்துல



=============


8 எடிட்டர் சார், ஒரு கதை அனுப்பி இருக்கேன், எப்போ பரிசீலனைக்கு எடுத்துப்பீங்க?

10 மாசம் ஆகும்

அய்யோ, டெலிவரிக்கே  இப்போ 9 மாசம் தானே?



=================


சார், உங்களுக்குப்பிடிச்ச கில்மாப்படம் எது?

அநாகரீகம்


 வெளில சொன்னா அநாகரீகமா?


 யோவ், பட டைட்டிலே அநாகரீகம்தான்


===============

10  மண மேடைலயே மாப்ளை பொண்ணு கால்ல விழுந்து  ஆசீர்வாதம் வாங்கறாரே? ஏன்?

சும்மாவா? பொண்ணு தலைல அம்மா ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்களாம்



===============


11 போலீஸ் இண்ட்டர்வ்யூல  ஏன் செலக்ட் ஆகலை?ஜிம் பாடி பத்தலையா?



 நோ, ட்விங்க்கிள் ட்விங்க்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு பாடிக்காட்டச்சொன்னாங்க

==================


12  டியர், என்னை விட உங்களுக்கு பைக் தான் முக்கியமா?


 ஆமா,சர்வீஸ் செலவு மாசம் 500 தான் ஆகுது, உனக்கு தண்டச்செலவு 5000 ரூபா ஆகுதே?



==================


13 திருமணத்தை கோவிலில் நடத்துவது நல்லதா? திருமண மண்டபத்தில் நடத்துவது நல்லதா? 

கோவில் தான் பெஸ்ட், மண்டப வாடகை மிச்சம், பந்தி செலவும் இல்ல


===================


14  டாக்டர்! மேரேஜே பண்ணிக்காம சிங்கிளா வாழ்க்கை நடத்துவது நல்லதா?கெட்டதா?


சிங்கம் வேணா சிங்கிளா வந்தா கெத்து, மனுசன் ஜோடியோட இருந்தாத்தான்


=================


15  சயிண்ட்டிஸ்ட்டைத்தான் நான் மேரேஜ் பண்ணிக்குவேன்


 மிஸ்! அவன் டெய்லி லேப் ல ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பான், வீட்டுக்கே வர மாட்டான்,ஓக்கேவா?


==============


16 உங்களை என்ன சொல்லி உங்க வீட்ல திட்டுவாங்க?

 சாரி மேடம், குடும்ப ரகசியத்தை ஆம்பளை வெளில சொல்ல மாட்டான்



===============

17  டியர்! சல்ஃபூரிக் ஆசிட்டை எதுக்கு சாப்பாட்ல ஊத்துனே?

சாரி, ரசத்துக்குப்பதிலா மாத்தி ஊத்திட்டேன், லேப்ல குடும்பம் நடத்துனா இப்டித்தான் ஆகும்


==================

18  டாடி, இனிமே என்னை தண்டம்னு கூப்பிடாதீங்க. இன்சல்ட்டிங்கா இருக்கு

 சரி


 ஜிகிர்தண்டம்னு கூப்பிடுங்க, ஃபேஷனா இருக்கும்


================

19  கடவுளே! அடுத்த ஜென்மத்துலயாவது நான்
வெங்காயமா பொறக்கனும்


ஏம்மா, எந்த ஜென்மமா இருந்தாலும் யாரையாவது அழவெச்சுப்பார்க்கணுமா?


=================
  

20   ஒரு சரக்கு அடிப்பவனின் மப்பு வாழ்க்கை தான் படம்

ஓஹோ அப்போ பஞ்ச் டயலாக்கா ட்விங்க்கிள் ட்விங்க்கிள் பாட்டில் ஸ்டார்னு வைப்போமா?

===


=================





0 comments: