Saturday, February 13, 2016

“கெத்து காட்றீங்க ப்ரோ”

1  கேப்டன் நடிச்ச சபரி பட த்துல ஹீரோயின் இன்ட்ரோ சீன் ல ஒரு ரசிகன் அடிச்ச கமென்ட்


சபரியிலே தெரியுது பார் மகரஜோதி


==============

2 இளங்கலைப்பட்டம் னா யூத் படிப்பு
முதுகலைப்பட்டம்்னா வயசானவங்க படிப்புன்னு நான் சின்னப்பையனா இருக்கும்போது நினைச்சு படிக்காம விட்டுட்டேன்

=============

3 புனிதா வுடன் நீ மளிகைக்கடைக்குப்போனாலும் ,சினிமாக்குப்போனாலும் அது புனிதப்பயணமே!

==============

4 உன் சம்பளம் என்ன என்று உன் சொந்த சம்சாரத்திடம் சொல்லி விடு.எப்படியும் விசாரித்து தெரிந்து கொள்வாள்.ஆனால் இன்சென்ட்டிவ் பற்றி சொல்லாதே.

===============

5 மேக்கப் போடாத பொண்ணோட ஒரிஜினல் முகத்தைப்பார்க்க ஆசைப்பட்டால் பெண் பார்க்கும் படலத்தை திடுதிப் என ராத்திரியில் வைத்துக்கொள்.

==============

6 காதலி உப்பு சப்பு இல்லாத விஷயத்துக்கெல்லாம் அடிக்கடி் டூ விட்டால் இது டூ மச் என்று சொல்லிவிடு

==============


7 பெண்களைப்புகழும் எல்லாக்கவிதைகளுமே

வஞ்சிப்புகழ்ச்சி அணி
வஞ்சப்புகழ்ச்சி அணி யில் இயற்றப்பட்டவையே!============

8 எல்லோர் கண்களுக்கும் எருமையாய் தெரியும் நீ
என் கண்களுக்கு மட்டும் COT எருமையாய் தெரிகிறாய் நீ

===========

9 உனக்கு உள்ளே இருக்கும் திறமையை யார் முதல்ல அடையாளம் கண்டு பிடிச்சு பாராட்றாங்களோ அவங்களை மறக்காதே !


============

10 அன்பு வைத்தவருக்காக.விலை மதிக்க முடியாத தியாகத்தை செய்ய நேர்ந்தால் அதை அவரிடம் தெரியப்படுத்தத்தேவை இல்லை.அதுவும் இன்னொரு தியாகம்


============

11 சொந்த ஊருக்கு வருவதில் ஏற்படும் மகிழ்ச்சியை அனுபவிக்க ஒரு முறை தூர தேசம் சென்று வர வேண்டும்

============


12 பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்ட தி.மு.க. வி‌ல் ஜனநாயகம் இருக்கிறதா? அடுத்த தலைவராக யார் வரமுடியும்?"

ஸ்டாலின்
உதயநிதி
நயன் தாரா


=========


13 சந்திரா ன்னு பேர் வெச்ச பொண்ணுங்க எல்லாம் சந்திரிகா சோப் போட்டுதான் குளிப்பாங்கன்னு சொல்லிட முடியாது # கேள்வி அறிவு


=========


14 நிச்சயதார்த்தம் தான் உன் திருமண வாழ்க்கையில் நுழையும் முன் உனக்கு் தரப்படும் எச்சரிக்கைக்கான இறுதிச்சுற்று


===========


15 ஒரு லட்சிய வீரன் ,தனித்திறமை கொண்டவன் "ஊரோடு ஒத்து வாழ்"ந்து கொண்டிருக்க மாட்டான்.


===============


16 தினம் தினம் ஏதாவது புதிதாய் சாதிக்க நினைப்போம்
சாதி பற்றி ய வீண் பெருமைகளை தவிர்ப்போம் # தாலி கட்டிய பொஞ்சாதி பெருமை விதிவிலக்கு


==================


17 திண்டுக்கல் என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது பூட்டு எனில் நீங்கள் அப்பாவி
ரீட்டா எனில் அடப்பாவி!
ஐ லியோனி எனில் பட்டி மன்ற ரசிகர்


==================


18  உதயநிதி  ஸ்டாலின்  நடிச்ச  படம் ஓடும் தியேட்டரில் ஆபரேட்டரிடம்  போய் சொல்லலாம்  “கெத்து காட்றீங்க ப்ரோ”


=================


19    அதிகாலை 5 மணிக்கு எழுந்தால் நல்லது  என்பதையே  எல்லோரும் டைம் லைன் வரும் நேரமான காலை 8 மணிக்குத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது


====================


20   பனியால் உன் உடல் பாதிக்கப்படக்கூடாது எனில் அதிகாலைப்பனியில் நடைப்பயிற்சி மேற்கொண்டு பனிக்கும், குளிருக்கும் உடலைப்பழக்கப்படுத்து

0 comments: