Tuesday, February 16, 2016

கூட்ட்டுக்களவாணிகள்


1 டீச்சர்.போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்கு வந்திருக்கீங்க?
( தெறி படத்தில் )போலீஸ் ஆபீசர் ஸ்கூலுக்கு வந்து க்ளாஸ் எடுக்கறப்போ டீச்சர் ஸ்டேசன் வர்றது தப்பா?===========2 திங்கட்கிழமை ஆபீசுக்கு போக சோம்பலா இருக்குனு அடிக்கடி சொல்வீங்களே மாப்ளை?மாமா.அதுக்காக முதலிரவை செவ்வாய்க்கிழமை வைப்பதா?


==========


3 நான் காலேஜ்ல படிக்கிறேன் வீக்லீ ஒன்ஸ் டேட்டிங் போவேன்"


என்ன மிஸ்?,வாரா.வாரம் ஆனந்த விகடன் படிப்பேன் கற மாதிரி அசால்ட்டா.சொல்றீங்க?===========


4 சார்.குமார் அப்புறம் னு ஒரு ஊரு இருக்கா? தேடிட்டே இருக்கேன்.கிடைக்கல.
யோவ்.அது குமாரபுரம் (KUMARAPURAM)


==========


5 ஹாய் மிஸ்! சாப்ட்டீங்களா?

 இல்லைன்னா வந்து வாங்கியா தரப்போறே?


 என் கையாலயே சமைச்சே போடறேன் # FB சேட்டிங் அலம்பல்கள்


============


6 டேய், எத்தனை பேரைடா லவ் பண்ணுவீங்க?


மிஸ்! அதை எல்லாம் எண்ணிப்பார்க்கறதில்லைங்க.


===============


7  பெண்கள் முட்டாள்கள் இல்ல, தவறான நோக்கத்தோடு பழகினா கண்டுபிடிச்சுடுவாங்க

கண்டு”பிடிச்சுக்கிட்டா” சரி தான்


=============


8 டியர், நம்ம குழந்தைக்கு என்ன  பேர் வைக்கலாம்?


 பையன் பிறந்தா பிரபுதேவான்னு வைப்போம், பொண்ணு பிறந்தா ஐஸ்வர்யானு வைப்போம் 


==================

9  இல் பொருள் உவமை அணிக்கு உதாரணம் சொல்லு

 இலியானா டீச்சர்


================


10 மாப்ளை, பொண்ணைப்பார்த்தீங்களே? எப்டி?

பாத்த உடனே ஒரு ஃபுல் அடிச்ச மாதிரி இருக்கே


அவ்ளவ் செம ஃபிகரா?

 இல்லை, வாமிட் வர்ற மாதிரி இருக்கு


================

11 கில்லி ரிலீஸ் ஆன அதே நாள் ல நம்ம புதுப்படமும் ரிலீஸ் ஆகுது, படம் கில்லி மாதிரி இருக்கும்.

 அடடா, கில்லி தான் ஆல்ரெடி பார்த்தாச்சே?


==================


12 டாக்டர்! இப்பல்லாம் சீக்கிரமே பசிக்குது சீக்கிரமே தூக்கமும் வருது


 மிஸ்! விடிஞ்சிடுச்சு. சீக்கிரமே  எழுந்து வீடு போய்ச்சேருங்க


================

13  ட்விட்டர்ல, ஃபேஸ்புக்ல பொண்ணுங்க எது எழுதுனாலும்  அதை கவிதைன்னு கொண்டாடுறாங்களே, அது ஏன்?

 ஏன்னா பொண்ணுங்கன்னாலே கவிதை தானே?


=================14 கடவுளே! சண்டையே போடாத சம்சாரம் வேணும்

 வரம் கொடுத்தா எனக்கும் என் சம்சாரத்துக்கும் சண்டை வந்துடுமே?


================


15 அப்பா, சினிமாக்குப்போகனும், 2000 ரூபா குடுங்க

 அடப்பாவி, 100 ரூபாதானே டிக்கெட்?

 பெங்களூர் நாட்கள் படத்தை  பெங்களூர்லயே போய்ப்பார்க்கனும்


===================


16  மைக் டைசன் = நான் இறுதிச்சுற்று படம் பார்க்கனும்


மாதவன் = ம்ம்அரேஞ்ச் பண்றேன், அதுக்கு முன் பத்ரி, மான் கராத்தே பார்த்து ரிலாக்ஸ் ஆகிக்குங்க


================


17  தங்கச்சி. ஒரு 5 நிமிசம் வீட்டு வாசல்ல  போய் நில்லு

எதுக்குண்ணா?

வீட்டுக்குள்ளே பொண்ணை வெச்சுக்கிட்டே பொண்ணை கமெண்ட் அடிக்கக்கூடாதாம்===============


18 சார், என் பென்சில் டிராயிங்க் எப்படி இருக்கு?

 நல்லாருக்கு

 சரி, என்ன தேடறீங்க?


 அதுல பென்சிலையே காணோமே?

===============

19  தலைவரே! ஏன் தனியா வே நிக்கறீங்க இந்த டைம்?


 கூட்டணி அமைச்சா கூட்ட்டுக்களவாணிகள்னு கிண்டல் அடிப்பாய்ங்க


================


20  காலி ஃபிளவர் இருக்கா? 

சாரி, ஃபிளவர் காலி


====================0 comments: