Friday, February 12, 2016

புதிய நியமம் - சினிமா விமர்சனம் ( மலையாளம்)


த்ரிஷ்யம் அடித்த  மெகா ஹிட் மெகா ஸ்டார் மம்முட்டியை  நல்லாவே பாதிச்சிருக்கு. அதே சாயலில்  ஒரு படம் வேணும்னு  நினைச்சிருப்பார் போல. ஒர்க் அவுட் ஆகுதான்னு பார்ப்போம்

ஹீரோ ஒரு வக்கீல் , அவருக்கு ஒரே ஒரு சம்சாரம், ஒரு பொண்ணு. சம்சாரம் கதகளி டான்ஸர்.


 அமைதியாப்போய்ட்டிருக்கு  லைஃப்.திடீர்னு சம்சாரம் நடவடிக்கையில்  சில மாறுதல்கள். சைக்கோ  போல் நடந்துக்கறார். 


புருசன்  ஏதோ வேலையா  கொல்லம் போய் இருந்தப்போ மொட்டை மாடியில் 3 பேரால்  ரேப் பண்ணப்பட்டதால தான் அப்டி.

அந்த 3 பேரையும் தன் கையாலயே  கொல்லனும்னு ஒரு லேடி போலீஸ் ஆஃபீசர் கிட்டே உதவி கேட்கறா

போலீஸ் ஆஃபீசரும்  ஃபோன் மூலமாவே கிருஷ்ண பரமாத்மா போல் வழி நடத்தி  3 கொலைகளையும் இயற்கை மரணம் போல் நடத்த  உதவி  செய்யறார்

அப்போ இது  ஹீரோயின் சப்ஜெக்ட் ஆச்சே? மெகா ஸ்டார் மம்முட்டிக்கு என்ன வேலை? அங்க தான் ஒரு ட்விஸ்ட். அது க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தை அதுதான் காப்பாத்தப்போகுதுனு இயக்குநர் நம்பி இருக்கார். அவரது நம்பிக்கை  வீண் போகலை. மெகா ஹிட் ஆகாது என்றாலும்  கூட இது ஒரு ஹிட் ஃபிலிமே


 ஹீரோ வா  மம்முட்டி. அண்டர் ப்ளே ஆக்டிங்கில் விற்பன்னரான மம்முட்டி இதிலும் அடக்கியே வாசிச்சிருக்கார். வக்கீலா  ஓப்பனிங்க் சீனில் அவர் காட்டும் சில புத்திசாலித்தனங்கள் , வசன பஞ்ச் கள்  ரசிகர்களுக்கு விருந்து. பின் பாதியில்  ட்விஸ்ட்  வரும்போது சபாஷ் போட வைக்கிறார்

 ஹீரோயினா கோடி  ரூபா லேடி  நயன் தாரா ஐ மீன்  தமிழில்  கோடி ரூபாய் சம்பளம் வாங்கும்  முதல்  ஹீரோயின்.  ஓப்பனிங்க்  சீன்ல  இருந்தே  நல்ல நடிப்பு.கிளாமர்  ஹீரோயினான இவரை குடும்பப்பாங்காக சிடு சிடு மூஞ்சியாகப்பார்க்க மனசுக்கு கஷ்டமா இருக்கு ( உன்னை யார்யா அங்கன் எல்லாம் பார்க்கச்சொன்னது.?)


ரேப்  சீன்  என  ஜொள்ளு  விடும் ஆட்களுக்கு ஒரு எச்சரிக்கை. அந்த  மாதிரி சீன் எல்லாம்  கிடையாது. இது  ஃபேமிலி ஃபிலிம்

 வில்லன்களா வரும் 3 பேர்ல  அந்த  இஸ்திரி ஆள் மட்டும்  ஓக்கே . மற்ற 2ம் தண்டம்

 பின்னணி இசை  பக்கா . அந்த  தீம்  மியூசிக்  இன்னும் நல்லா  டெவலப் பண்ணி இருக்கலாம்


 போலீஸ் ஆஃபீசரா வரும்  லேடி கரெக்ட் நடிப்பு.  த்ரிஷ்யம்  ஆஃபீசரை  மனசில் வெச்சு அதே போல் வடிவமைக்க  முயற்சி  செஞ்சிருக்காங்க 


 திரைக்கதை  இயக்கம்  ஓக்கே ரகம்.மம்முட்டி  ரசிகர்கள்  எல்லாம்  இது என்ன  நயன்  க்கு அதிக ஸ்கோப் உள்ள படமா  இருக்கே என பம்மும்போது  பின் பாதியில்  வரும் ட்விஸ்ட்டில் அரங்கமே ஆர்ப்பரிக்கிறதுமனதைக் கவர்ந்த  வசனங்கள்

தண்ணி அடிச்சு ஒரு மலையாளியும் இது வரை மரிச்சதில்லை #,பு நி


2 தாம்பத்ய வாழ்க்கை நல்லா போகனும்னா யார் சாமார்த்தியசாலி?னு போட்டி போடக்கூடாது #,பு த

3 கல்யாணத்துக்கு லட்சக்கணக்கில் செலவு.செய்வாங்க.டைவர்ஸ்னா 10, பைசா செலவு பண்ண 10 மாசம் யோசிப்பாங்க. நி


4 ஒரு சராசரி சாதாரண மனிதனுக்கு தன் மனைவி சாந்த சொரூபினி யா இருந்தா போதும் #,பு நி5 ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனை் ஒரு ஹீரோ மாதிரி மனசுக்குள் சுவீகரிப்பாள் # பு நி

6 பெண் குழந்தை உள்ள அம்மா பதட்டமா இருப்பதும் பெண் குழந்தையின் அப்பா இயல்பா இருப்பதும் சகஜம் #,பு நி


7 புகார் கொடுக்கனும்னு நினைச்சா யாருக்கும் பயப்படாம யாருக்கும் சலுகை தராம உடனடியா அந்த புகாரை பதிவு செய்யனும் #,பு நி

8 மனசுக்குப்பிடிக்காதவன் தன் சம்மதம் இல்லாமல் தன்னை தொட்டா தன் உடம்பை ஒரு அழுக்குக்குப்பையா பார்ப்பா பெண்.# பு நி படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  புதிய நியமம் (மலையாளம்) - மம்முட்டி நயன்தாரா நடிப்பில் ஒரு வித்தியாசமான த்ரில்லர் மூவி மேட்னி 2 30 @ திருவனந்தபுரம் கைரளி

2 நயன் தாரா சொந்தக்குரல் போல.என்ட பகவதி அம்மே


3 மம்முட்டி அண்டர்ப்ளே ஆக்டிங்.நயன் மொட்டை மாடி ஆக்டிங்.செம பர்பார்மென்ஸ் #,புதிய நியமம்


4 ஓப்பனிங் ஷாட்.ல ஹீரோயின் சுடும் கல் தோசை தீய்ஞ்சிடுது.எதுனா குறியீடா?,#,பு நி


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   நயன் தாரா வின் ஆடை வடிவமைப்பு , பேக் நெக்  ஜாக்கெட் இஸ்பேட் டிசைன்  எல்லாம் பக்கா .பின்னால் உருவாஞ்சுருக்கு டிசைன்  ஜாக்கெட் ல இருப்பது  செம கிளுகிளு. கதகளி  மேக்கப்புடன்  பைக்கில் வரும் காட்சியில்  நயன் அழகு செல்லம் ( நாம எந்த  ஹீரோயினைத்தான் அழகில்லைனு தள்ளி இருக்கோம். எல்லாத்தையும் நல்ல ஃபிகர்னு அள்ளித்தானே வழக்கம் )

2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்   கரெக்டா  டீல் பண்ணிய விதம்


3  ரேப் சீனை காமா சோமா என படமாக்காமல்  டீசண்ட்டா  முடிச்சது 
இயக்குநரிடம்  சில கேள்விகள்

1  அந்தக்காலத்துல  எஸ்  ஏ சந்திரசேகர் + விஜய் காந்த்  காம்போ படங்கள் ல  பார்த்த பல படங்கள் ல இப்படி  3 வில்லன் களை  3 வெவ்வேற விதமா கொல்லும் காட்சிகள் வரும். அரதப்பழசான 25 வருசத்துக்கு முன்பே பார்த்த  ஐடியாவை சுட்டது  ஏனோ?


2  மொட்டை மாடியில்  எந்த மஞ்ச மாக்கான்களாவது  ரேப்புவாங்களா? அதுவும் பட்டப்பகலில் . அந்த  பில்டிங்கை விட உயரமான  பில்டிங்கில் அரு கில் இருக்கையில்  ?


3   ரேப் முடிச்சவன்  அந்த  ஏரியாவை  விட்டே  ஓடுவானா?  மீண்டும் அதே அபார்ட்மெண்ட்டுக்கு அதே வேலைக்கு தானா வந்து மாட்டிக்குவானா?4  அயர்ன்  பண்ற  லோ கிளாஸ் ஆள்   அபார்ட்மெண்ட்டில்  ஹை கிளாஸ்  ஆண்ட்டியை  ரேப் செய்வது , தெனாவெட்டாக  மீண்டும் அதே இடத்தில்  வந்து  மீண்டும் அயர்ன் பண்ணுவது  எல்லாம் நம்பும்படி இல்லை.


5  ஹீரோயின்    ரேப்  ஆகும்  சீனை  வில்லன்களே  கேமராவில்  படம் எடுத்து  அதை தந்து  விட்டுப்போவது  சாட்சி ஆகாதா? அது அபாயம்  தானே?

6  ஹீரோயின்  அந்த  ரேப்  சீனை  தன்  வீட்டிலேயே பார்த்துட்டு  இருக்கு, அருகில்  குழந்தை தூங்கிட்டு  இருக்கு.  12  வயசுப்பொண்ணு  அருகில்  தூங்கிட்டு இருக்கும்போது எந்த பொண்ணாவது   வீடியோவில்  தன் ரேப் சீனைப்பார்க்குமா?


7  ஹீரோ  சோபால படுத்து  தூங்கிட்டு  இருக்கார் ,  மனைவி  அவருக்குத்தெரியாமல்  அவர்  ஃபோனில்  இருந்து  ஒரு  ஃபோன் நெம்பர்  எடுக்கனும். அதை  அவர் அருகில்  நின்றே  செய்வாங்களா?  ஃபோனை  நைசா எடுத்துட்டு கிச்சன் பக்கம் போய்  நெம்பர்  பார்த்துட்டு அப்புறம் கொண்டு வந்து வெச்சிருக்கலாமே?

8   ஹீரோவுக்கு  வரும்  கேசில்  ஒருத்தன்  தன் சொந்த பெட்ரூமில்   கேமரா வெச்சு  தன் மனைவி  சோரம் போனதை கண்டு பிடிச்சேன்கறான். எந்த சம்சாரமாவது இப்டி  லூசு போல்  தன்  சொந்த  வீட்டிலேயே  கள்ளக்காதலனை  வரவெச்சு மாட்டிக்குமா? இந்த நவீன கால கட்டத்தில்?9  ரேப்பால  ஹீரோயின்  கைல மணிக்கட்டுக்கு மேல  பல் தடம் காயம். அதை மறைக்க  ஃபுல் ஸ்லீவ்  ஜாக்கெட் ஏன் அணியலை? புருசன் கில்மாக்கு கூப்பிடும்போது  உடம்பில்  இருக்கும் காயம்  பார்த்துடக்கூடாதுன்னு  விரதம் இருக்கேன்னு  தப்பிக்கும்  புத்திசாலி இப்டி  சாதாரணமா  கோட்டை விடலாமா?

10  மொட்டை மாடில  ஹீரோயின் . பட்டப்பகல் , வில்லன்கள் 3 பேர் . அய்யயோ  காப்பாத்துங்கன்னு ஒரு கூப்பாடு  கூட போடலையே  ஏன்?  யாரும்  அவர்  வாயைப்ப்பொத்தலை. ஒரு சவுண்ட்  கூடவா விட முடியல ?

11  ஹீரோயின் ஆஜானுபாவமா இருக்கார். வில்லன்ல ஒருத்தன் ஆஸ்த்மா பேஷண்ட். பூச்சி  மாதிரி ஒல்லி  உடல்வாகு. ஓங்கி  ஒரு அறை விட்டா அப்டியே  சுருண்டு  படுத்துக்குவான். ஆனா வாய்ப்பிருந்தும்  அப்டி  நாயகி  பண்ணலையே?

சி  பி  கமெண்ட்-புதிய நியமம் (மலையாளம் ) - ரேப் ,ரிவஞ்ச் த்ரில்லர்.அந்தக்கால எஸ் ஏ சந்திரசேகர் பார்முலா.க்ளைமாக்ஸ்.ட்விஸ்ட்.டாப் .ரேட்டிங் =2.75 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41குமுதம்  ரேங்க் ( கணிப்பு)=ஓக்கே ரேட்டிங் =2.75 / 50 comments: