Wednesday, February 24, 2016

150 நாடுகளில் கட்சி ஆளுங்க இருக்காங்களா? கலைஞர் அதிர்ச்சி, வை கோ சவால்

1  நிலக்கரிச் சுரங்க முறைகேடு: எச்.சி.குப்தா உள்பட 6 பேருக்கு சம்மன் # நம்பினவங்க முகத்தில் கரி பூசிட்டாங்களா?==============2 அதிகாரத்திற்காக கொள்கைகளை பலியிட்டு விட்டார்" - கருணாநிதி மீது வைகோ குற்றச்சாட்டு.# எப்டியாவது பணம் சம்பாதிக்கனும் என்பதுதானே தலைவர் கொள்கை?
===========3 தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 5.ரூ வரை உயர்த்துகின்றன "பால்" னு இவ்ளோவ் ஏத்துனா எப்டி? 1 ரூபா.2,ரூபா ஏத்துனா தெரியாது
===========
4 'வேட்பாளர்களை நானே தேர்வு செய்வேன்': ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கு கருணாநிதி 'செக் # வாக்குகளையாவது எங்களைப்போட விடுவீங்களா?கள்ள ஓட்டு?
==============5  பா.ஜ.,வுக்கு விஜயகாந்த் 10 கேள்வி: பதில் தந்தால் கூட்டணி என நிபந்தனை -செய்தி # தா”மரை” கழண்ட மாதிரி கடுப்பு ஆகி இருக்குமே?

=============
6  ஆங்கில படம் இயக்குகிறார் கமல் - செய்தி # இவரு  தமிழ்ப்படம் இயக்குனாலே புரியாது, இதுல ஆங்கிலப்படம்? விளங்கிடும்
================சட்டப்பேரவையை ஆளுநரால் தன்னிச்சையாக கூட்ட முடியாது- உச்ச நீதிமன்றம் # கூட்ட, பெருக்க தனி ஆளுங்க இருப்பாங்கள்ல?

=============
8  சத்தீஸ்கரில்  நீதிபதி வீட்டுத் தோட்டத்துக்குள் புகுந்து செடிகளைத் தின்ற ஆடு கைது: # லாக்கப்ல வெச்சு விசாரணை எல்லாம் பண்ணுவாங்களா?
=============9  சூரிய மின்தகடு முறைகேடு: ஆதாரங்களை அளித்தார் சரிதா நாயர்-செய்தி # “சன்” மார்க்க நெறிகளை முதல்வர் மீறிட்டாராமே?
=============
10 மோடி அரசு ஏழைகள், மாணவர்களுக்கு எதிரானது: ராகுல் குற்றச்சாட்டு # மோடியும் ராகுல் போலவே குடிசைல புகுந்து கூழ் குடிச்சாரா?
===========
11 பாமக ஜாதிக் கட்சி அல்ல, சமூக நீதிக் கட்சி: அன்புமணி ராமதாஸ் # அதாவது வன்னியர் சமூக நீதிக்கட்சி?
============
12  "சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் மக்கள் நலக் கூட்டணி தொடரும் -செய்தி # ஜெயிச்சாதானே  பதவிச்சண்டை வந்து பிரிய?எப்டியும் தோற்கப்போறோம்

=============
13 தனித்துப் போட்டியிட்டால் கூட 12% வாக்குகளை ச.ம.க பெறும்-சரத்குமார்# ஹலோ, தேமுதிக வுக்கே இப்போ 12% கிடையாது, உங்களுக்கு எல்லாம் 0.1% தான்
===============


14 தேர்தல் நிதியை கட்டு; இல்லையேல் மூட்டைய கட்டு!: தி.மு.க., தலைமை கறார் #  கலைஞர் கருணா”நிதி”யை சந்திக்கையில் நிதி இல்லாம போனா எப்டி?

===============


15 மது விலக்கு நடைப்பயணத்தில் மயங்கி விழுந்தார் குமரி அனந்தன் #  தண்ணி  அடிச்சு எழுப்பி விட்டிருப்பாங்களே?


==============

16 காங்கிரஸ்-திமுக கூட்டணிக்காகப் பேசவில்லை: ஃபரூக் அப்துல்லா # மரியாதை நிமித்தமான  தேர்தல் கால சிறப்பு சந்திப்பு?


===============

17 ஸ்ரீவில்லிப்புத்தூர் -9-ம் வகுப்பு மாணவிக்குபாலியல்தொல்லை: 16 வயது இளைஞர் கைது # சிறார்  என்பதால் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி அனுப்பிடாதீர்===========


18 மதிமுகவினர் உலகில் 150 நாடுகளில் உள்ளனர் - வைகோ #,தமிழ் நாட்ல 150 பேர் இருப்பாங்களா? அதான் கணக்கு.பாரீன் ல இருப்பதெல்லாம் போங்காட்டம்


============


19 கேரளாவில் பா.ஜனதாவால் கால் ஊன்றவே முடியாது: ராகுல்காந்தி கடும் தாக்கு
# கை ஊன்றி சமாளிச்சுடுவாங்க============


20 அ.தி.மு.க. சார்பில் போட்டியிட மனு: 2 போலீஸ் உதவி கமிஷனர்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்கள் # அரசனை(அரியணை) நம்பி புருசனை (பணி) கை விட்ட கதை


===========

0 comments: