Sunday, February 07, 2016

அம்மா அடகுக்கடை

தமிழகத்தின் நலனை அடகு வைக்கிறார் ஜெயலலிதா - ஸ்டாலின் குற்றச்சாட்டு.# விரைவில் அம்மா அடகுக்கடையும் திறந்து வைக்கப்போறாங்களாம் தலைவரே!


==============2 ரஜினி ரசிகர்கள் மாநாடு.. அரசியல் பேசக் கூடாது... போலீஸ் கண்டிப்பு! ஆட்சி வாழ்க னு சொல்லிக்கலாமா?
=============
3 பத்மஸ்ரீவிருதை பெற மறுத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்!# ரொம்ப சின்னப்பேரா இருக்காம்.ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பத்மஸ்ரீ விருது னு குடுங்க.வாங்கிக்குவார்
=============4 தி.மு.க. வெற்றி பெற மகளிர் அணியினர் உழைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.# பெண் பாவம் பொல்லாதது.பாவம்.ஏன் வேஸ்ட்டா உழைப்பை வீணடிக்கறீங்க?
===============
5 3மாணவிகள்மரணம் - உடனடியாக மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடமுடியாது - உயர்நீதிமன்றம்.. # சல்மான்கான்க்கு மட்டும் உடனடி ஜாமீன் கிடைச்சுதே,எப்டி?
===============மக்கள் விரும்பினால் மீண்டும் திருவாரூரில் போட்டி- மு.க # இந்த இடத்தில் மக்கள் என்பதை ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என கொள்க
==============7  கூட்டணி கதவு திறந்துள்ளது : கருணாநிதி # மெல்லத்திறந்தது கதவு,35% வாக்குப்பதிவாவது நிகழ நீ உதவு

===============

ஐஸ்வர்யாராய் குடியரசு தின விழாவில் பிரெஞ்சு அதிபருடன் விருந்து சாப்பிடுகிறார்!- செய்தி # அபிஷேக் பச்சன் ஓரமா உக்காந்து டீ, பன், மிக்சர்?
===============

ரஜினி'காந்த்க்கு பத்ம விபூஷண் விருது- மத்திய அரசு அறிவிப்பு  #  கமலுக்கு தந்த பத்ம பூஷன் விருதை விட இது உயர்ந்ததா? இல்லையா?னு விவாதம் வர்ல?


=================


10 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில்  அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா போட்டி? - செய்தி # இதுக்குப்போட்டியாக ஸ்டாலின் மனைவியும் களம் இறங்குவாரா?


==============


11 திமுக வென்றால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் : கனிமொழி# வழக்கில் ஆஜராக கட் அடிக்காதீங்க, தேர்தல் வாக்குறுதியில் பிட் அடிக்காதீங்க


=================


12 கருத்துக்கணிப்புகளை பொருட்படுத்துவதில்லை: மு.க.ஸ்டாலின் # குரல் நல்லா கணீர்னு ஒலிக்குது, கை காலெல்லாம் ஏன் தலைவரே கிடு கிடுன்னு நடுங்குது?


================

13 தெறி vs 24: தமிழ்ப் புத்தாண்டில் சூர்யாவுடன் மோதும் விஜய்-செய்தி # தேர்தல் களை கட்டும் முன்னே சினிமா களை கட்டப்போகுது, இரண்டும் ஹிட் ஆகிடும்


==================

14 தனுஷுக்கு அடித்த லக்... ஹாலிவுட்டின்  நடிகையுடன் நடிக்கிறார்!# ஹாலிவுட்டில் தங்க(ற) மகன்,ஒரே உம்மா மயம்தான் படத்துல


===============


15  இலக்கியங்களை கலாச்சாரங்களைக் காக்க தமிழனுடைய பொற்காலம் மீண்டும் உருவாகப் பாடுபடுவோம்!- கலைஞர் # மானாட மயிலாட டான்ஸ் கலாச்சாரம்தானே தலைவரே?


===================


16  குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை: பிரணாப் முகர்ஜி # புல்லட் ப்ரூஃப் குடை பிடிச்ட்டே பேசலாமில்ல?


=================


17 தனித்து வாழும் பெண்களுக்கு வரிச் சலுகை அளிக்க பரிந்துரை # இதான் சாக்குன்னு தனிக்குடித்தனம் போய்டப்போறாங்க இந்த பொண்டாட்டிங்க 


===================

18  எந்தக்கட்சி வந்தாலும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் - கருணாநிதி.. # தகுதி தராதரம் ஏதும்  தேவை இல்லை, நமக்கு தேவை ஓட்டு, அப்டித்தானே தலைவரே?=====================


19  சூரிய மின் தகடு ஊழல் விவகாரம்: விசாரணை ஆணையம் முன்பு உம்மன் சாண்டி ஆஜர் # சூரியன் என்றாலே  ஊழல் உதயம் ஆகிடுதே எப்டி?


===================

20  கல்வியறிவோடு தலைமைப் பண்பும் அவசியம்: மாணவர்களுக்கு மும்பை பல்கலை. துணைவேந்தர் அறிவுரை# தலைமுடிக்கு கலரிங்க் டை அடிப்பது தலை மை பண்பு அல்ல


=========================

0 comments: