Tuesday, February 09, 2016

ஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி மூவரும் விவசாய குடும்பமா? ஜெ அதிர்ச்சி

ச(மத்துவ) ம(க்கள்) க(ட்சி) தொண்டர்களுடன்ஆலோசித்து கூட்டணிபற்றி முடிவு-சரத்# ச ம க தொண்டர்கள் = சரத் ,மகள் வரலட்சுமி ,கலைச்செல்வி ராதிகா?===============
2 ரஜினிக்கு, பத்ம விபூஷன் விருது தாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது- இளங்கோவன் # ரஜினி ஸ்பீடுக்கு விருதுக்குழுவும் இருக்க முடியுமா?
================எல்லோரையும் விரட்டிவிட்டு இளங்கோவன்–குஷ்பு மட்டும்தான் காங்கிரசில் இருப்பார்கள்- விஜயதாரணி #  நக்மாவும் இருப்பாங்க மேடம், போட்டி க்கு
===================
4  ஹாலிவுட் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது: தனுஷ் # நாம தமிழ்ப்படத்துலயே 18 கிஸ் சீன் வெச்சோம், ஹாலிவுட்ல ம்ம்
====================5   தேர்தலில் யாருடன் கூட்டணி?: காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் முடிவை அறிவிக்கிறார்# மாநாட்டில் மஞ்சள் துண்டு போட்டு இடத்தைப்பிடிச்சிடனும்
================6  SVS மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது-ஜெ

# ஏன் இப்படி?உங்க ஆணைப்படிதானே எல்லாம் நடக்கும்?எங்கேயும் எப்போதும்?


============

7 கேப்டன் 234 தொகுதியில் எங்கு வேணாலும் நிற்பார் - பிரேமலதா # எங்கே நின்னாலும் ஸ்டெடியா நிப்பாரா?னு எதிர்க்கட்சிக்காரங்க கேட்பாங்க

=============

8 ஓட்டுக்கு பணம் தருவது தடுக்கப்படவேண்டும்: கலைஞர் - பிள்ளையார் சுழி போட்டவங்களே நாம தானே தலைவரே?

============


9 நானும் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், அதனால் விவசாயிகளுக்கு நன்மை செய்வேன்:கலைஞர் -எப்டி? ஸ்டாலின் ,கனிமொழி ,அழகிரி போன்ற விவசாயிகளுக்கா?


==============

10 யாரும் ஓட்டுக்கு பணம் தராமல் தடுக்க வேண்டும்: கலைஞர் - நம்மைத்தவிர வேற யாரும் னு தெளிவா சொல்லுங்க.உடன் பிறப்புகள் குழம்பிடுவாங்க இல்ல?


=================


11 தனித்துப் போட்டியிடவும் தயார்- சரத்குமார்# தாரை தப்பட்டை கிழியப்போகுது.தனி ஆவர்த்தனமா?ரைட்டு

===============


12 மக்கள் நலக் கூட்டணி ஆட்சி அமைந்தால் ஊழல்வாதி சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்-வைகோ# இவருக்கு கலைஞர் மேல ரொம்ப.நாளா ஒரு கண்ணு

==============

13 என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? அன்புமணி ராமதாஸ் மீண்டும் சவால் # எங்க அப்பா கூட வாதிட உங்க அப்பா தயாரா?னு கேட்டு சமாளிங்க தலை


==============

14 DMKஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளை தீர்க்க முடியும்;- கலைஞர் # தமிழகத்தோட ஒட்டுமொத்த பிரச்னையே திமுக அதிமுகதான்


=============

15 தெறி படம் அருமையாக வந்துள்ளது - அட்லி
# வந்துடுச்சா?ஏப்ரல் 14 தான் வரும்னாங்க?


==============

16 சரத்குமார் கட்சியை உடைத்தது பாஜக.பொன். ராதா முன்னிலையில் பாஜகவில் இணைந்த 7 நிர்வாகிகள் # தனியா போட்டியிடத்தயார்னு சரத் சொன்னது இதனாலதானா?


=================

17  அதிமுக, திமுகவை தேர்தலில் தோற்கடிப்போம்: மதுரை மாநாட்டில் வைகோ சபதம்# 234 தொகுதி ல எந்தத்தொகுதில தோற்கடிப்பீங்க?ன்னு கரெக்டா சொல்லுங்க 


===================


18  கூட்டணி பற்றி திமுகதலைமை முடிவு எடுக்கவில்லை-அன்பழகன் # கேப்டன் சைடில் இருந்து இன்னும் சிக்னல் கிடைக்கலைன்னு ஓப்பனா சொல்லுங்க, என்ன கூச்சம்?=====================


19  அதிமுக அரசு மீது பெண்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது-கனிமொழி # ஆமா, தயாளு அம்மாள், ராசாத்தி, கனிமொழி, துர்காஸ்டாலின், காந்திஅழகிரி இவங்கதானே==================


20  பிரதமர் மோடியின்  கோவை வருகை திருப்புமுனையை ஏற்படுத்தும்: தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை # மோடி இந்தியா வந்ததே பெரிய டர்னிங்க் பாயிண்ட்தான்


========================

0 comments: