Saturday, July 25, 2015

கலைஞர் பவர்

1

ஒரு அபார்ட்மென்ட் ல 6 வது மாடில இருந்து ஒரு ஹை க்ளாஸ் லேடி ஜல்லடை வழியா தண்ணி ஊத்துது. என்னம்மா?ன்னா வாசல் தெளிக்குதாம்


============

2 BSNL DATA139 பிளான் ல 21 நாள் வேலிடிட்டியை 15 நாளா குறைச்ட்டாங்க.அதை சொல்றதும் இல்லை.ஒரு மெசேஜும் அனுப்பறதில்லை


================


3 ராஜாஜி யின் ஆன்மா = முதல் முதலா சாராயத்தை தமிழ் நாட்டுக்குக்கொண்டுவந்ததே நீங்க தானே?
கலை ஞர் = பாவத்துக்கு பரிகாரம் .ஆட்சி அதிகாரம்்


============


4 பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.உதா
ராதிகா 1 சென்னை அமிர்தா 2 மாரி தயாரிப்பு


============

5 மை டாப் 5 பாலோயர்ஸ்
1 மேல் மாடி மேகலா 2 ரெண்டாவது மாடி மாலினி 3 மூணாவது மாடி லதா 4 நாலாவது மாடி நான்சி 5 மொட்டை மாடி கல்பனா

===========


6 ஒரு நெட் தமிழன் 6 பொண்ணுங்களை ரயில்ல ஏத்தி 8 மணி நேரமா கடலை போட்டுட்டு இருக்கான்.டேய்.இறக்கி விடுங்கப்பா.அடுத்தவன் எல்லாம் வெய்ட்டிங்


================


7 வி"ஷால்" ரசிகைகள் எல்லோரும் சுடி க்கு அவசியம் ஷால் போட்டிருப்பாங்க என எதிர்பார்ப்பது ஒரு வித நப்பாசையே


===========


8 டெய்லி குழாப்புட்டு செய் என்றேன்.
நல்லா வெச்சு செஞ்சுட்டா. என் லவ் புட்டு க்கிச்சு

===============

9 தோப்புக்கரணம் போடு ன்னு டீச்சர் சொன்னப்ப மாந்தோப்புக்கரணமா? தென்னந்தோப்புக்கரணமா?னு கேட்ட பயலுகய்யா நாம எல்லாம்


================


10 30 நாட்களில் ஓவியம் வரைவது எப்படி? கோர்ஸ் ல நாமும் சேர்றோம்.வரையறோம்


=================

11 ஓமக்குச்சி மாதிரி ஒல்லி புருசனுக்கு நமீதா மாதிரி சம்சாரம் அமைஞ்சா அவருக்குக்கிடைக்கும் தூக்கு தண்டனை தான் மிகக்கொடுமையானது


================


12 நெட் தமிழன் வீட்டில் தன் சம்சாரத்திடம்
சனியனே இன்னுமா எந்திரிக்கலை? FBல குட்டிமா புட்டிமா எந்திரிடா செல்லம்.ஐ ஆம் வெய்ட்டிங் பார் யூ


===============

13

ராமநாதபுரம் தனுஷ் ரசிகர்கள் செம அட்டகாசம்.மாரி யம்மன் கோவில் ல மாரி பட போஸ்டர் ஒட்டி மாரி யம்மன் னு எழுதிட்டாங்க.#தமிழேண்டா

==================


14  பூனைக்குட்டி போல் சவுந்தர்யமான காதலி அமைந்தால் சவு"மியாவ்"னு கூப்பிடலாம்


============


15 ட்விட்டர்ல இருக்கற 387 பொண்ணுங்க ஹேண்டில்ஸ் கவனிங்க.பேருக்கு முன்னால 1 இதயம் ,பின்னால 1 இதயம் படம் இருக்கு.எதுனா குறியீடா?#2மனம்


===================


16 

ஒரு 10 பேரை லவ் பண்ணு தம்பி, ஒன்னுகூடவா பிக்கப் ஆகாம போய்ரும்?னுஅட்வைஸ் பண்ணும் ஆள் மினிமம் 20 பேரை லவ் பண்ணி இருப்பார்


==============


17

சாலையில் வெட்கப்பட்டபடி போ கும் பெண்ணை "ஷை"ல ஜா என சொல்லலாம்


================


18

சம்சாரம் பாத்ரூம் ல முதுகு தேய்க்கக்கூப்பிட்டா முதுகை மட்டும் தேய்ச்ட்டு வெளில வருபவன் எந்திரன் என எள்ளி நகையாடப்படுவான்


===============


19 மதுவிலக்கு பற்றி பல வருடங்களாக முனைப்பு காட்டி வரும் முனைவர் ராம்தாஸ் அய்யாவை யாரும் மதிக்கலை.ஆனா கலைஞர் ஆதரிச்சதும் பரபரப்பு தொத்திக்கிச்சு .இது தான் கலைஞர் பவர்


================


20

நெட் தமிழன் காலைல காலண்டரைக்கூடப்பார்க்காம இங்கன வந்து இன்னிக்கு புதன் னா வியாழன் னா ?"னு டவுட் கேட்கறான்

==================

0 comments: