Monday, July 27, 2015

வாணிராணி சீரியல்ல வருவது போல் சேவலை பலி கொடுத்தா அந்த வீட்டில் குழந்தைப்பிறப்பைத்தடுக்கலாமாமே நிஜமா?

1


ஜட்ஜ் = பக்கத்து மனை (வீடு)ல தான் கொலை நடந்திருக்கு.ஆனா நீ பாக்கலையா?எப்டி?
பிறன் மனை நோக்கா பேராண்மை வேணும்னு வள்ளுவர் சொல்லி இருக்காரே===================

2 யுவர் ஆனர்.என் சம்சாரத்தை டைவர்ஸ் பண்ண்க்காரணமே மதுவிலக்கு க்க்கு ஆதரவாத்தான்

எப்டி?
அவ பேரே மது மிதா================

3 தலைவரே! மதுவிலக்கை ஆதரிப்பதில் மகிழ்ச்சி.அப்போ குடிகாரன் ஓட்டு தேவையில்லைனு அறிக்கை விடுங்க பார்ப்போம்
அய்யோ.நமக்கு ஓட்டுதான் முக்கியம்


===========

4 ஆபீஸ் டைம்ல நெட் யூஸ் பண்ணாதீங்க.
சரி சார்.ரிப்போர்ட்டை மெயில் பண்ணு .வாட்சப்ல அனுப்பு னு சொல்லுவீங்க இல்ல.அப்போ வெச்சுக்கறேன் கச்சேரியை


==============


5 சார்.3 மாசமா ஏன் சம்பளம் தர்லை?
சம்பளம் சேர்த்துக்கொடுத்தாதான் வேலை செய்வேன்னீங்க்ளே.4,மாசம் சேர்த்து வெச்சு மொத்தமாத்தரேன்்


================
6 சார்.நியூஸ் ஓடிட்டிருக்கும்போது ஊடால மின்மினிப்பூச்சியைப்பறக்க விடறீங்களே?எதுக்கு?
FLASH NEWS.குறியீடு


=============

7 சார்.உங்க பேரை கெஜட் ல டார்லிங் குமார் னு ஏன் மாத்திக்கிட்டீங்க?
ஆளாளுக்கு அண்ணானு கூப்ட்டாக.இனி டார்லிங் னுதானே கூப்ட்டாகனும்?


===================

8 ஜெயிலர்.சார்.நான் சின்ன வயசுல கோ எட் ல தான் படிச்சேன்.

சோ வாட்?
என்னை தனி ஜெயில்ல போடாதீங்க.லேடீசும் இருக்கற ஜெயில்ல போடுங்க


=================

9 டியர்.நான் எங்க அம்மா அப்பா வை வா போ னு ஒருமை ல தான் கூப்பிடுவேன்.
எருமை.என்னை அப்டிக்கூப்ட்ராதே.கடுப்பாகிடுவேன்


==================


10 பொண்ணுக்கு பரத நாட்டியம் தெரியுமா?
ராம நாட்டியம் ,லட்சுமண நாட்டியம் எதும் தெரியாது .பைட் வந்தா மட்டும் ஆட்டமா ஆடுவா


==================


11 மேடம்.உங்க கிட்டே ஒரு பர்சனல் மேட்டர் பேசனும்.

அய்யோ.என்ன?சொல்லுங்க.
உங்க பேங்க் ல பர்சனல் லோன் வேணும்


================

12 தலைவரே!,திடீர்னு திருந்தீட்டீங்களே!,எப்டி?
DRஅய்யாவைக்கூட்டணிக்குள் இழுத்தாச்சு.ஜெ வுக்கு நெருக்கடி கொடுத்தாச்சு.ஒரே கல்லில் 2 மாங்கா


===============


13 சார்.என் போட்டோ மெயில் பண்ணி இருக்கேன்.உங்க ஓவியத்திறமையைக்காட்ட முடியுமா?
சாரி சார்.ஓவியாக்களுக்கு மட்டுமே ஓவியம்

==============

14 டாக்டர்.சேவலை பலி கொடுத்தா குழந்தை பிறக்கும்னு வாணிராணி சீரியல்ல வருதே
சேவலை பலி கொடுத்தா பாவம் தான் கிடைக்கும்.குழந்தை எப்டி கிடைக்கும்?


==================


15


சுவாமி! சேவலை பலி கொடுத்தா அந்த வீட்டில் குழந்தைப்பிறப்பைத்தடுக்கலாமாமே நிஜமா?
ஆமா! அந்த சேவல் சம்சாரம் கோழிக்கு குழந்தை பிறக்காது


====================

16 டியர்.உங்க ஊர் பொண்ணுங்க எப்டி வெட்கப்படுவாங்க?

எங்க ஊர் சென்னை.ஐ டி கேர்ள்ஸ்
எப்டி வெட்கப்படுவாங்க?==============

17 தலைவரே! திடீர்னு மதுவிலக்குக்கு ஆதரவு தர்றீங்களே?உங்க மனசில் நல்ல எண்ணம் வந்துடுச்சா?
ச்சே ச்சே தேர்தல் கிட்டே வந்துடுச்சு


===============


18


டியர்: எப்படி காலைலயே லவ் மோட்ல இருக்கீங்க 😰"
படுக்கும்போது லவ் மோட் ல படுத்தா காலைல எந்திரிக்கும்போது லவ் மோடுல யே இருக்கலாம்===================


19


ராம்தாஸ்க்கும் கலைஞருக்கும் என்ன வித்யாசம்?
என் மகன் தான் அடுத்த CMனா அது ராம்தாஸ்
என் மகன் தான் என் காலத்துக்குப்பின் CMனா அது கலைஞர்
=========


20 டாக்டர்.அடிக்கடி பசி வயித்தைக்கிள்ளுது.

என்னம்மா போன வாரம் தான் புருசன் அடிக்கடி இடுப்பைக்கிள்றாருனு மருந்து போட்டுட்டுப்போனே?


====================

1 comments:

Umesh Srinivasan said...

சான்ஸே இல்ல சார், உங்க காமெடி சென்ஸ் பிரமிக்க வைக்கிறது. நண்பர்களுடன் பகிர்கிறேன். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.