Tuesday, July 14, 2015

நெட்டில் மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பதுஎப்படி?

சார்.டான்ஸ் சப்ஜெக்ட்னா டான்ஸ் க்ளாஸ்ல சேர்ந்து ட்ரெய்னிங் எடுப்பது போல் கம்ப்யூட்டர் சப்ஜெக்ட்னா 6 மாச கோர்ஸ் படிக்கனுமா?


===========
2 ஜில்லா செம ஹிட் ஆகி ஓடிட்டிருக்கு இப்போக்கூட.


எப்டி மிஸ் சொல்றீங்க?
பாபநாசம் ஹிட்.அதுல ஜில்லா சீன் வருது.அப்போ ஜில்லா ஹிட்தானே?==============


3 ஒரு பெண் குழந்தையை பாதுகாப்பா வளர்த்து ஆளாக்குவது என்பது ஆண் குழந்தை வளர்ப்பை விட 1000 மடங்கு சிரமமான ,கண்காணிப்பு தேவைப்படுகிற பொறுப்பு

=============


4 வயதுக்கு வந்த பெண்ணிடம்் அம்மா,அப்பா யாராவது ஒருவர் அவரிடம் மனம் விட்டு பேசுங்கள்.பல விபரீதங்களுக்கு முன் கூட்டியே முற்றுப்புள்ளி வைக்கலாம்

============

5

ஏ சென்ட்டர் ஆடியன்சோட படம் பார்க்கறதுல என்ன ஒரு மைனஸ்னா அமைதியா படம் பார்ப்பாங்க.விசில் கைதட்டல் இருக்காது


============

6 ஆரியதமிழன் ஆர்யா ரசிகன்

ஆதி தமிழன் விஜய் ரசிகன்
திராவிடத்தமிழன் ராகுல் ட்ராவிட் ரசிகன்
என்று சொல்ல முடியாது


============


7 பொண்ணுங்க ஏன் ஷைனிங்கா இருக்காங்க?ரகசியத்தை கண்டுபிடிச்ட்டேன்.வாட்டர்கேன்ல டெய்லி ஜூஸ் கொண்டுவந்து ஆபீஸ் டீ டைம்ல குடிச்சுக்கறாங்க


===========

8 உலக முத்த தினத்தை முன்னிட்டு நேரிலோ, தபாலிலோ,கூரியரிலோ,டி எம்மிலோ கன்னிப்பெண்கள் யாராவது ஏதாவது கொடுப்பாங்க என எண்ணி ஏமாந்து போனேன் ;-(


============


9 இப்ப இருக்கற யூத்ங்க எல்லாம் பொண்ணுங்க சைக்காலஜி தெரிஞ்சு வெச்சுக்கிட்டு கண்ணீர் ,தனிமை,ஆறுதல் ,துயரம் னு எதுனா எழுதி கரெக்ட் பண்ணிடறாங்க

===============


10 மொள்ளமாரிங்களை அடையாளம் கண்டுபிடிப்பது ஈஸி.எனக்குன்னு யாருமே இல்லை
தனியாதான் இருக்கேன்.அன்புக்காக ஏங்கறேன் னு அடிக்கடி பிட் ஓட்டுவாங்க


============


11 தூய்மையான அன்பு செலுத்தும் பவித்ரமான பொண்ணு வேணும்னு தமிழன் எதிர்பார்க்கறான்.ஆனா ஆம்பூர் பவித்ரா மாதிரி பொண்ணு கிட்டே மாட்டிக்கறாம்


============

12 காதலில் பெண்களின் அன்பு த்ரிஷ்யம் மோகன்லால் நடிப்பு போல் எனில் ஆண்களின் அன்பு பாபநாசம் கமல் போல் முந்திவிடக்கூடியது


=============

13 திருவிளையாடல் வசனகர்த்தா ஒரு தீர்க்கதரிசி.பிரபு தேவா விஜய் காம்போ பத்தி அப்பவே சொல்லிட்டாரு
வில்லு க்கு விஜய் யன்

=============


14 காரைக்குடி அருகே தொண்டி டூ ராம்நாடு வழியில் கலங்காப்புலி னு ஒரு ஊரு இருக்கு.அப்போ கலங்கிய புலி விழுப்புரத்தில் இருக்குமோ?

==============


15 எந்த மா(தி)ரி ஆண்களை ( மாடர்ன்) பெண்களுக்கு பிடிக்குது?

1 மொள்ளமாரி
2 கேப்பமாரி
3 சோமாறி


===============

16 காலை வணக்கம் னு பொண்ணுங்க FBல தெளிவா ஒரு ஸ்டேட்டஸ் போட்டாக்கூட மேடம் என்ன சொல்லவர்றீங்க?புரியலையேனு டவுட் கேட்பான் நெட் தமிழன்


=================


17 கண்ணம்மாவை செல்லமா கண்ணு னு கூப்பிடும் தமிழன் பொன்னம்மாவைப்பொண்ணு னு கூப்பிட மாட்டான்.மக முறை ஆகிடுமில்ல?


==============

18 ஆம்பளை தலைல இடியே விழுந்தாலும் கண்டுக்காத தமிழன் பொண்ணுங்க இமைக்குக்கீழே மை வைக்கும்போது விரல்பட்டு கண் கலங்கினாக்கூட அப்டியே பதறிடறான்


============


19 பசங்க பொண்ணுங்களை  லவ் பண்றது  மேரேஜ் பண்ணிக்கத்தான்னு இன்னும் பொண்ணுங்க சிலர்   நம்பிக்கிட்டு இருக்காங்க , அய்யோ ஹய்யோஆ================


20  பாமக போல் ஒரு பச்சோந்திக்கட்சியை பார்த்ததில்லை, இங்க ஒரு வாட்டி அங்கே ஒரு வாட்டி, அப்புறம 2 பேரையும் திட்டுவது. தேர்தல் வந்தால் பல் இளிப்பது===================

0 comments: