Thursday, July 23, 2015

ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இருக்குமே?

மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் 234 தொகுதிகளில் போட்டி - டிராபிக் ராமசாமி: # ஒரு தொகுதில நின்னப்பவே 15 கேஸ் புக் பண்ணி நல்லா செஞ்சாங்க


==============

2 5,900 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியை திருப்பி அனுப்பியது ஏன்? - தமிழக அரசுக்கு கலைஞர் கேள்வி இருந்தா கமுக்கமா அமுக்கி இருப்பாரு


===========

3 இந்தியாவிலேயே தற்கொலையில் 2-வது இடம்: சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடம் # எமனுக்கு ஏத்த இடம் தான் போல


==========

4 தமிழகத்தில் 2016-ல் காங்கிரஸ் தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது - குஷ்பு # பல்லக்குத்தூக்கி யின் பல்லேலக்கா பாடுவது குஷ்பூக்கா


============


5 என்னை பேசக்கூடாது என்று OPS் எச்சரிக்கை செய்வதா? கருணாநிதி கண்டனம் # பேசக்கூடாதுனு சொல்லலை.பேசாம அமைதியா இருந்தா நல்லதுனுதான் சொன்னாரு


===============

6 அஜித் + கே வி ஆனந்த் புதிய கூட்டனியில் புதுப்படம் # அனேகன் பண்ணினதும் அடுத்து ஏகன் கிட்டே வந்துட்டாரா?


============


7 சட்டமன்றதேர்தலில் BJPஅங்கம் வகிக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும்-தமிழிசை# தமிழனைப்பத்தி தெரியலை.பச்சக் பச்சக் னு ரெட்டை இலைக்கு குத்தப்போறான்

===============


8 குஷ்பு வை
அமைச்சராக்குவோம் -இளங்கோவன் # காமராஜர் ஆட்சி அமைப்போம்னீங்களே?அது கேன்சலா?


==========


9 தொடர் மின்வெட்டு எதிரொலி - எம்எல்ஏ, கவுன்சிலரை கட்டிவைத்த கிராம மக்கள்.. உபியில் பரபரப்பு -# அந்நியனா மாறிட்டாங்களா?சபாஷ் பொது ஜனம்


=============


10 நடிகர் சங்கத்தேர்தலில் ஓட்டுப்போட முதல்வரையும் அழைப்போம்-விஷால் # பாயும் புலிக்கு(ம்)நேரம் சரி இல்லை.ஏதாவது வழக்கு பாயும்===============


11 சினிமாவில்சிகரெட்பிடித்துரஜினி புகழை கெடுக்காதீர்-அன்புமணி  டூ தனுஷ் # வெரிகுட், மாமனாருக்கும், மாப்ளைக்கும் அப்பாவும் மகனும் மாறி மாரி செக்


==================


12  தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு #  அம்மாவால் சாத்தியம் ஆகாததே இல்லைனு சொன்னது சும்மாவா?============13 மோடியின் வெளிநாட்டு பயணங்களால் இந்தியாவுக்கு மதிப்பு- சசிதரூர் பாராட்டு #  காரியம் ஆகனும்னா காலைப்பிடி, கொலைக்கேசில் இருந்து தப்பனும்னாலும்==================


14 இந்திய குடிநீர் திட்ட ஒப்பந்தங்களைப் பெற அமைச்சர், அதிகாரிகளுக்கு ரூ.6 கோடி லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்# ரொம்ப கம்மியா இருக்கே?


===================


15  ரஜினி - ரஞ்சித் படத்தின் நாயகி ராதிகா ”ஆப்”தே # ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் அடிச்சா மாதிரி கிக்கா இருக்குமே?


===============


16   ஜெயம் ரவி யின் 'அப்பாடக்கர்' தற்போது 'சகலகலா வல்லவன்' என மாற்றம் # இதுக்கு கமல், ஏவிஎம் கிட்டே அனுமதி வாங்கி இருக்க மாட்டாங்களே?


================


17  தமிழகம் முன்னேற்றம் காண அரசியல் மாற்றம் அவசியம்’’ டாக்டர் ராமதாஸ் பேச்சு # ஆமாங்க அய்யா.கண்ட கண்ட ஜாதிக்கட்சிகள் உருவாகிட்டே இருக்குங்க


====================\\

18 துன்புறுத்துவதாக கணவர் மீதுிர பெண் MLAபுகார் # வீட்டுக்கு வந்தப்ப புருசன் மரியாதை குடுத்து எந்திரிச்சு நிக்கலையாம்.சம்சாரம் செம கடுப்பாகி

=====================


19 டெல்லி போலீஸ் அதிகாரத்தை எங்களிடம் கொடுங்கள்’’ பிரதமருக்கு, கெஜ்ரிவால் வேண்டுகோள் # கவர்னருக்கு காப்புக்கட்ட கங்கணம் கட்டிட்டாரு போல


===================


20 திருப்பதி லட்டு 3 வாரம் வரை கெடாமல் இருக்க புதிய தொழில் நுட்பம் # ஏதாவது கெமிக்கல் தடவி ருசியை நாஸ்தி பண்ணிடாதீங்கயா


======================

0 comments: