Sunday, July 12, 2015

கில்லி ஹீரோ விஜய் அல்ல, கமல் தான் எப்படி?

1  தாவூத் இப்ராஹிம் சரணடைய விருப்பம் - ராம் ஜெத்மலானி# வெளியே இருந்தா நோன்பு இருக்கனும்.உள்ளே போனா கட்டு கட்டலாம்னு நினைச்ட்டார் போல


=============


2 விஜய் படத்தில் நடிக்க மறுத்தார் சத்யராஜ்!! # பாகுபலி ல செஞ்ச அதே கேரக்டரை புலியிலயும் பண்ணச்சொல்லிட்டாங்களா?


==============

3 மெட்ரோ ரயில் திட்டத்தில் பாஜகவிற்கும் பங்கு உண்டு -தமிழிசை#பொண்ணுக்கு தாலி கட்ன பின் 4 பசங்க வந்து இது என் முறைப்பொண்ணுன்னாங்களாம்


==============


4 முத்தக் காட்சியில் முக்கி முக்கி 36 டேக் - ஜி.வி.பிரகாஷ் .@த்ரிஷா இல்லனா நயன் தாரா #சரியா கிஸ் அடிச்ட்டா 1 டைம் தான்.தப்பா அடிச்சா 36 டைம்.


============


5 ஹெல்மெட் அணிவதை கட்டாயப்படுத்தக் கூடாது: ஜி.கே.வாசன் கருத்து # கட்டாயப்படுத்தியே 50% தமிழன் தான் ஃபாலோ பண்றான்

==============

6 நடிகர் சங்கத் தேர்தல் தடையை நீக்க முடியாது – ராதாரவி தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி # ராதா இல்லாத சங்கம் சாதா னு சொல்லிட முடியாது.?!

===============

7 பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் அவசியம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு! # இது இனிஷியல் தீர்ப்பு தான்.மாறலாம்

=============

8 முல்லைப் பெரியாறு அணைக்கு புலி ஆதரவாளர்களால் ஆபத்து இல்லை -
ஓ.பி.எஸ்."# விஜய் ரசிகர்கள் எல்லாம் பச்சை மண்ணுங்க சார்.

============

9 சரியாக பதில் அளிக்கவில்லை: தயாநிதி மாறனை மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறது சிபிஐ!!# திரும்ப திரும்பக்கூப்டறே நீ?னு கோவிச்சுக்கப்போறாரு


==============


10 சீங்கீதம் சீனிவாசராவ் படத்தில் கமல்...#,உலகமே வியந்து நோக்கி ஆச்சரியப்பட்டு அதைப்பற்றியே "பேசும் படம்" ஆக அமைய வாழ்த்து


============

11 முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார்: வைகோ # இரட்டை இலைன்னா இரட்டை நிலை எடுப்பது சகஜம் தானே?னு சமாளிப்பாரோ?


==============

12 பொருளாதார ரீதியாக இந்தியா முன்னேறும்போது இந்தி மொழியும் வளரும்:-் மோடி..# விவசாயம் தழைத்தோங்க வழி செய்ங்க.மொழி தானா வளரும்


============

13 தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை- காட்சிதான் நடக்கிறது: கருணாநிதி # அதுவும் தினசரி 4 காட்சிகள் ,வெள்ளி ன்னா 5


============


14 பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் தமிழ்நாடு முன்னணியில்- மத்திய மந்திரி நிர்மலா. # நார்மலா இருப்பது நல்லது நிர்மலா.அதி காரம் னா அல்சர் தான்


=============


15 மேகி நூடுல்சை அழிப்பதற்கு அம்புஜா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு 20 கோடி வழங்கிய நெஸ்லே...# தண்டம் வேற முட்டுக்கோல் வேற


==================

16 நுழைவுத்தேர்வு ஊழல் சாதாரண பிரச்சினை: மத்திய சட்ட மந்திரி .# வசதி படைச்சவன் எந்த தப்பு செஞ்சாலும் சாதா தப்புதான்னு குமாரசாமியே சொல்லியாச்சே?


===============


17 மலேசிய பிரதமர் மீது ரூ.4,500 கோடி ஊழல் குற்றசாட்டுடன் தொடர்புடைய 6 வங்கி கணக்குகள் முடக்கம்..# கலைஞரை விடப்பெரும் பார்ட்டி போல


==============

18 ராணுவ வீரரை கொன்று குளியலறைக்குள் பிணத்தை புதைத்த மனைவிக்கு ஆயுள் தண்டனை..# நூறாவது நாள் படம் பார்த்து அடுத்த நாள் இப்டி பண்ணிடுச்சு போல


==================

19 ஆபாச படம் வெளியானதால் ஓடி ஒளியவில்லை: வசுந்தரா..# எல்லாம் த்ரிஷா டெக்னிக்தான்.மார்க்கெட்டிங் பரபரப்புக்காக


================


20 திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்..# மோகன் லாலை விட உருவத்தில் கமல் ஒல்லி ,நடிப்பில் அவரை விட கில்லினு நிரூபிச்ட்டார்


=============

0 comments: