Saturday, July 18, 2015

தமிழனும் புரோட்டாவும்

1  அன்பே பியூட்டி! பைக்கில் பெட்ரோல் இல்லை.உன் ஸ்கூட்டியில் என்னைக்கூட்டிப்போ என்பதன் சுருக் தமிழ் =,ஸ்"கூட்டிப்போ"


===============
2 எனக்கும் பொண்ணுங்களுக்கும் ராசியே இல்லை.ஆகவே ஆகாதுனு நெட் தமிழன் சொல்றான்.ஆனா எப்போப்பாரு கன்னிப்பொண்ணுங்க கிட்ட தான் கடலை போடறான்
============3 ஆபீசில் ஒரு பொண்ணு பெரிய நெல்லிக்கா கொண்டு வந்து அதைக்கடைவாய்ப்பல்லில் கடிச்சு கடிச்சு 2 சைடும் வண்டி போல். ஷேப் பண்ணி விளையாடிட்டிருக்கு
===========

4 இந்த பொண்டாட்டிங்களை (1) பாகுபலி படத்துக்குக்கூட்டிட்டுப்போனாக்கூட ரம்யா கிருஷ்ணன் புடவை டிசைன் தமனா டாட்டு டிசைனைத்தான் சிலாகிக்கறாங்க============5 தமிழ் நாட்டில் 2 தளபதிகளுக்கும் அப்பாவால பிரச்னை


1,சிஎம் சேரை விட்டுக்கொடுக்க மாட்டேன்றாரு (மு க)

2 சிஎம் சேருக்கு டார்கெட் பண்றாரு (SAC)===========

6 தளவாய்புரம் ,சேத்தூர் ஏரியாக்களில் சைவ ஹோட்டலே கண்ணுக்கு தட்டுப்படலை.எல்லாரும் நான் வெஜ் பார்ட்டீசா?


===========


7 உலகம் பூரா குருமாவை தொட்டு புரோட்டா சாப்பிடறாங்க.தமிழன் மட்டும் தான் புரோட்டாவை பீஸ் பீஸா பிச்சுப்போட்டு குருமாவில் ஊற வெச்சு வெட்றான்


===========


8 மிடில் கிளாஸ் பொண்ணுங்க லட்சாதி"பதி" ,ஹை க்ளாஸ் பொண்ணுங்க கோடீஸ் "வரன்" ,நடிகைகள் மிக்சர் பேக்டரி தொழில் அதி"பதி' வேணும்னும் நினைக்கறாங்க்


===================


9 அதிகாலைல ஆள்நடமாட்டம் இருக்காதுன்னு தெரிஞ்சு வெச்சுக்கிட்டு  சுவாதீனமா (( சுதந்திரமா) கடலை போட்டுட்டு இருக்கான் நெட் தமிழன்


==================


10  வழக்கமா  ஏழரைக்கு எந்திரிக்கும் பொண்டாட்டி(ங்க )அதிகாலைல அஞ்சரைக்கே எந்திரிச்சுட்டா புருஷனுக்கு ஏதோ ஏழரை காத்திருக்குன்னு அர்த்தம்


=====================


11  இந்த பொண்டாட்டிங்களுக்கு மனசுக்குள்ளே ஜேம்ஸ்பாண்ட்னு  நினைப்பு, நாம இல்லாதப்ப நம்ம செல்லை சர்ச் பண்றது,ஆஃபீஸ்ல பர்சனல்  ஃபோன்.# யாருகிட்டே


================\\\12


12  தன் எதிர்காலத்தைப்பத்தி எண்ணிப்பார்க்காம  நெட்தமிழன்  தன் அபிமான ஹீரோவின் பட டீசர் /ட்ரெய்லர் எத்தனை வ்யூஸ்னு  எண்ணிப்பார்த்துட்டு இருக்கான்


=========================13  தனுஷும் , சிம்புவும்  ட்விட்டர்ல நட்பா பேசிட்டு இருப்பதைப்பார்க்கும்போது  இருவர்  படத்துல   கலைஞர் , MGR  கேரக்டர்கள் பேசுவது போல் இருக்கு========================14  பொண்ணுங்க ஏதாவது அழகான பேபி ஃபோட்டோ போட்டா நெட் தமிழன் பாய்ஞ்சு வந்து  சோ  க்யூட், நாகேஷ் க்யூட், அப்டியே உன்னைப்போலனு பிட்டுப்போடறான்==================

15  முத்தம்  கேட்டா   நல்லா மொத்தப்போறேன் எனும் காதலியே!உதட்டால் கன்னத்தில் மொத்தினால் என்ன?


======================


16 ஷங்கர் ராஜ்மவுலியை பாராட்றாரு.
விஷால் விஜயைப்பாரட்றாரு
சிம்பு தனுஷைப்பாராட்றாரு.ஆளாளுக்கு நடிகர் திலகமா மாறிட்டு வர்றாங்க==================17 காதலிங்க எப்பவும் வெட்டியா சும்மாவேதான் இருப்பாங்க.நாம எங்காவது (எதுக்காவது) கூப்ட்டா ம்ட்டும் வேலை இருக்குனு ரீல் சுத்துவாங்க


==================

18 அன்பே! நீ ஒரு கஞ்சப்பிசினாரி! ஒத்தை முத்தம் கேட்டதுக்கு மொத்த சொத்தையே க்கேட்்டது போல் பதறுகிறாயே!(உன்னிடம் சொத்து எதும் இல்லைன்னாலும்)


=================

19 பேரம் பேசாதீர் = NO BARGAIN


தமிழகத்தில் எந்த டாஸ்மாக்கும் நட்டத்தில் இயங்கவில்லை.= NO BAR LOSS


================

20 நம்ம நாட்டில் 85% ஆண்கள் குடிகாரனாத்தான் இருக்கான்.மதுவிலக்கு கொண்டு வருவோம்னா எவன் ஓட்டுப்போடுவான்?

===============

0 comments: