Thursday, July 23, 2015

கனவுகளைத் தகர்த்ததால் கருணாநிதி மீது ராமதாஸ் கோபம்: மதுவிலக்கு வியூகத்தில் திமுக பதிலடி

ராமதாஸ், கருணாநிதி | கோப்புப் படம்
ராமதாஸ், கருணாநிதி | கோப்புப் படம்
தன் மகனை தமிழக முதல்வராக்கி, மதுவிலக்கு கோப்புகளில் கையெழுத்திடச் செய்யும் கனவு தகர்ந்ததே ராமதாஸின் கோபத்துக்கு காரணம் என திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமுல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அறிவித்து ஓர் அறிக்கையை கருணாநிதி கடந்த 20-7-2015 அன்று வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினை பல்வேறு கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பல ஊடகங்களும் வரவேற்று கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த நற்செய்தி ஊடகங்கள் மூலமாக உடனடியாக நாடு முழுவதும் பரவிவிட்டது.
செய்தியறிந்த தாய்மார்களும், பெரியவர்களும் கருணாநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனால், பாமக நிறுவனர் ராமதாசுக்கு மட்டும் இந்த நற்செய்தி வேம்பென கசந்திருக்கிறது. கோபம் கொப்பளிக்க அவைகள் எல்லாம் வார்த்தைகளாக வடிவெடுத்து அவர் பெயரில் ஓர் அறிக்கையாக வெளி வந்திருக்கிறது.
"கருணாநிதி பாவ மன்னிப்பு கோருகிறார்", "ராஜாஜியை எள்ளி நகையாடினார்", "ஏமாற்றுகிறவர்", "கருணாநிதிக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது", "மதுவிலக்கைக் கொண்டு வர கருணாநிதி ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை" "கருணாநிதியின் வாக்குறுதிகள் காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்", "கருணாநிதியை, மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள்"... இப்படிப்பட்ட அவதூறு அர்ச்சனைகளையெல்லாம் ராமதாஸ் தான் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தலைவர் கருணாநிதி மீது வாரி இறைத்திருக்கிறார்.
1971ஆம் ஆண்டு வாக்கில் தமிழக அரசுக்கு ஏற்பட்ட கடுமையான நிதி நிலையைச் சமாளிப்பதற்காக தவிர்க்க முடியாத நிலையில் மதுவிலக்கை ஒத்தி வைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதை அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் உருக்கமாகப் பேசியதையும், 1971இல் கழக அரசு மதுவிலக்கை தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்றாலும், 1974ஆம் ஆண்டில் மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்தியதையும், 1981ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். கள்ளுக்கடைகளைத் திறந்ததையும், 1982-83இல் அதிமுக அரசு தனியார்களுக்கு ஐ.எம்.எப்.எல்., சாராய ஆலைகள் துவக்க தனியார் களுக்கு உரிமம் வழங்கியதையும், 2003இல் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா "டாஸ்மாக்" கடைகளையும், பக்கத்திலேயே "சாக்னா" கடைகளையும் திறந்ததையும் அப்படியே மூடி மறைத்து விட்டு, கருணாநிதி மீது மட்டும் பழியையும், பாவத்தையும் சுமத்தப் பார்க்கிறார் ராமதாஸ்.
மதுவிலக்குக் கொள்கைக்கு ராமதாஸ் தான் தான் "பிதாமகர்" போலவும், மதுவிலக்குக் கொள்கை அவருடைய "பிதுரார்ஜித" சொத்து போலவும், அவர் கருதிக் கொண்டிருப்பதால் தான், கருணாநிதியின் அறிவிப்பு, அவருடைய பட்டா நிலத்தில் பிரவேசித்து விட்டதைப் போல - கோபப்பட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
1974இல் தலைவர் கலைஞர் மீண்டும் மதுவிலக்கை அமுல்படுத்தியது - 2006இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகம் முழுவதும் 1300 மதுக் கூடங்களை (பார்கள்) மூடியது, 128 சில்லறை மது விற்பனைக் கடைகளை மூடியது, ஆலயங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், மசூதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் மதுக் கடைகள் அமையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தது, மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் குறைத்தது - இவையெல்லாம் கருணாநிதி செய்தவை அல்லவா?
மதுவிலக்குப் பிரச்சினையில், இவையெல்லாம் கருணாநிதி செய்த சாதனைகளாக ராமதாசுக்கு தெரியவில்லையா? இவைகள் எல்லாம் துரும்பைக் கிள்ளிப் போட்ட காரியங்களாகத்தான் அவருக்குத் தோன்றுகிறதா?
ஏமாற்றுகிறவர் கருணாநிதி என்று கொஞ்சம் கூட கூச்சம் இல்லாது கூறுகிற ராமதாசுக்கு, ஞாபகப்படுத்துகிறேன் - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்காக 20 சதவிகித இட ஒதுக்கீட்டினை தங்களை தைலாபுரத்திலிருந்து அழைத்து வந்து கொடுத்தாரே, அவரா ஏமாற்றுகிறவர்!
கடைசியாக ஒன்று! காந்திக்குப் பிறகு ராமதாஸ் தான் மதுவிலக்குக் கொள்கைக்கு "கார்டியன்" என்ற நினைப்பு அவருக்கு!
இந்த கொள்கையைப் பிடித்துக் கொண்டே, எப்படியாவது ஆட்சிக்கு வந்து விடலாமா என்ற நப்பாசை வேறு அவருக்கு!
பா.ம.க. ஆட்சிக்கு வந்து விட்டால், அவருடைய திருக்குமாரன், முதலமைச்சராகி, மதுவிலக்குக் குறித்து முதல் கையெழுத்திடுவார் என்கின்ற கற்பனை உலக சஞ்சாரம் அவருக்கு.
இத்தனை கனவுகளையும் ஒரே நொடியில் தவிடுபொடி ஆக்கி விட்டாரே கருணாநிதி என்ற கோபத்தின் வெளிப்பாடு தான், ராமதாஸின் கடுமையான அறிக்கை" என்று கூறியுள்ளார்.


நன்றி- த இந்து

 • வரலாறு அறியாமல் ராமதாஸ் பேசுவது சரியல்ல.மரம் வெட்டி அரசுக்கு இவர் கட்சி மக்கள் நஷ்டம் என்ன.இன்று தமிழ்நாட்டில் முன்னேற்றம்.ராமதாஸ் பேச இடம் இல்லி .
  Points
  505
  12 minutes ago
   (0) ·  (0)
   
  • MAM. Anbalagan  
   தமிழகத்தில் சாராயக்கடைகளை திறந்து வைத்து தமிழர்களை பாழாக்க முதல் அடி எடுத்து வைத்த புண்ணியவான் கருணாநிதி அதை விரிவு படுத்திய சாதனையாளர்கள் எம்ஜியாரும் அம்மாவும் இதை எத்தனை துரைமுருகன்கள் வந்தாலும் மறைக்கமுடியாது. இந்த அயோக்கிய சிகாமணிகளை ஆட்சிக்கு கொண்டுவந்ததில் ராஜாஜியின் பங்கையும் மறைக்கமுடியாது.
   Points
   1210
   about 5 hours ago
    (0) ·  (0)
    
   • CChandra_USA  
    மது விளக்கு வரபோவதும் இல்லை அப்படியே வந்தாலும், கள்ள சாராயம் ஆறாக ஓட போகிறது.
    Points
    23845
    about 7 hours ago
     (0) ·  (0)
     
    • PPk,Shiva  
     மரம் வெட்டி வளர்த்த ஒரு சாதி கட்சி , பச்சோந்தி கோட்பாடு , பணம் வந்தவுடன் நாட்டை வெட்ட துடிக்குது பா மா க .
     about 7 hours ago
      (0) ·  (0)
      
     • JJEY  
      தவறு அனைவரிடமும் உள்ளது. எனவே அனைவரும் அமைதி காருங்கள். அதே சமயம், நான் தான் வருவேன், அவர் வர மாட்டார், கனவு தவிடு பொடியாகி விட்டது என்ற பேச்சும் எடுபடாது. மக்கள் மனதில் இறைவன் பேசினால் மட்டுமே யாரும் ஒரு நிலைக்கு வுயர முடியும், ஆளுகைக்கு வர முடியும். கனவு யாராகிலும் காணலாம். அது நனவு ஆவது, இறைவன் கரத்தில் மட்டுமே என்பது உண்மை. வாழ்க அனைவரும். ஜெயப்ரகாஷ், சிவகாசி.
      Points
      5705
      about 7 hours ago
       (0) ·  (0)
       
      • Suresh Ganth  
       2016 ல் இவர்கள் யாரும் வரபோவதும் இல்லை மதுவிலகை அமல் படுத்துவதும் இல்லை இதுஎல்ல வாக்கு வாங்கிக்க நடுதும் நாடகம் 2016 ல் admk ஆச்சிதான் ஜெயவபார்து மதுவிலக்கை கொண்டுவன்தால் உண்டு இல்லை என்றான் அடுத்து 5 ஆண்டு முடியும் பட்சத்தில் கருணாவோ இல்லை ராமதாசோ ஆளலாம் அப்பொழுது மதுவிலக்கை கொண்டுவரலாம்
       Points
       1470
       about 8 hours ago
        (0) ·  (0)
        
       • TST. Siva  
        சபாஷ். சரியான போட்டி.!
        Points
        65765
        about 9 hours ago
         (0) ·  (0)
         
        • Bbalasundaram  
         எனக்கு புரிந்து விட்டது. இப்போது பிரச்சினை மது விலக்கல்ல., யாருடைய மகன் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து மது விலக்கிற்கான முதல் கையழுத்தை போடுவார் என்பது தான். இதற்காகத்தான் இவ்வளவு அடித்து கொள்கிறார்களா? நடுவில் யாராவது புகுந்து கேப்பில் கிடா வெட்டி விட போகிறார்கள். அப்போது தான் இருக்கிறது தமாஷு...
         about 9 hours ago
          (0) ·  (1)
          
         dave Down Voted
         • MMM.UMA MAHESH  
          தி மு க வின் தோல்வி பயத்தை துரைமுருகன் அவர்களின் அறிக்கையில் தெளிவாக பார்க்க முடிகிறது . மது விலக்கு கொள்கையில் பா ம க வை தவிர வேறு எந்த கட்சியும் உறுததியாக இருந்ததில்லை. நான் எந்த கட்சி யையும் சேர்ந்தவன் அல்ல. சென்ற தேர்தல்களில் தி மு க , அ தி மு க என இரண்டு திராவிட கட்சிகளுக்கு வோட்டு போட்டவன். இம்முறை நான் பா ம க விற்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறேன். என்னைபோலவே இளைஞர்களின் மனநிலையும் மாற்றத்தை நோக்கியே உள்ளது. அவர்கள் பா ம க விற்கு வாக்களிப்பார்லா என்று தெரியாது. ஆனால் உறுதியாக திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது .
          about 10 hours ago
           (0) ·  (0)
           
          • கொ.அன்புகுமார்  
           மது இல்லாத ஊர் எப்படியிருக்குமென்று கனவு காணுகிறேன்… உள்ளூர் சாராய விற்பனை கொடிகட்டி பறக்கும்… அரசியல் வாதிகள் எல்லாம் கள்ளுக்கடையை திறக்க போராடுவார்கள்… கார்களில் அணிவகுத்து இளைஞர்கள் ஊர் ஊராக சாராயம் தேடுவார்கள் … டாஸ்மாக் கடைகளில் வேலைப்பார்த்தவரெல்லாம் கொடிபிடித்து அரசு வேலை கேட்பார்கள்… மாநிலம் விட்டு மாநிலம் சென்று குடிப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்படும்… ஏதோ ஒரு போதைப்பொருள் புதிதாக முளைவிடும்… எதையோ பரிகொடுத்தவனைப்போல் சில காலம் திரிவான்... பூட்டிக்கிடக்கும் கடைகளை கண்டு கண்ணீர் சிந்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை சிலர்… புன்னகை தொலைப்பவர்கள் அதிகம் இருப்பர்… குடித்துப்பழகியவனால் மறக்க முடியாதெனினும் வேறு வழிகளில் போதை தேடுவான்… இப்படி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் ஆனாலும் எல்லாமே சிலகாலம் தான் … மாறும் மாற்றுவோம்… வரும் சந்ததியினராவது மதுபோதையிலிருந்து தப்பிக்கட்டும்… மதுவிலக்கை யார் கொண்டுவந்தாலும் ஆதரிப்போம்…எப்படியும் அதிமுக திமுகவை தவிர வேறு ஒரு கட்சி ஆட்சியை பிடித்து வரப்போவது தற்போதைக்கு சாத்தியமில்லாத ஒன்று ஆகையால் கருணாநிதி சொல்வதை வரவேற்போம்.
           about 10 hours ago
            (0) ·  (0)
            
           • JJay  
            என்னமோ தி.மு.கவும் பா.ம.கவும் அடுத்து ஆட்சியை பிடித்து விட்டது போலவே சண்டை போட்டுகொள்வது வேடிக்கையாக உள்ளது.
            Points
            4880
            about 11 hours ago
             (1) ·  (0)
             
            tamilvanan Up Voted
            • Ssuresh  
             Ramathas solvathu correct
             about 12 hours ago
              (1) ·  (0)
              
             Sivasankaran Up Voted
             • Kkumar  
              rendu par காண்பதும் கனவு தான்... அனைவருக்கும் கனவு காண உரிமை உண்டு...
              Points
              9365
              about 12 hours ago
               (0) ·  (0)
               
              • Ssamy  
               இவ்வளவு நாள் தாசு மது, சிகரட்டு என்று அரசியல் பண்ணி கொண்டு இருந்தார்... இப்ப திடிர்னு கருணாநிதி அவர்கள் மது விலக்கு என்றால் கோபம் வாராத? அதான் அப்பாவும் பையனும் குதிக்கிறாங்க... இனிமே தாசு எதை வைத்து அரசியல் வண்டி ஓட்டுவார்? பாவம் இனிமே ஜாதி அரசியல் தான் கை கொடுக்கும்..
               Points
               24990
               about 12 hours ago
                (0) ·  (0)
                
               • தமிழ்  
                2006ல் இருந்து, 2011 வரை தி.மு.க. தானே பதவியில் இருந்தது?1974ல் மதுவிலக்கை அமுல்படுத்தியவர்கள் தி.மு.க. தான்,-- "மது" மக்களை சீரழித்துவிடும் ஆகவே இப்போதும் மதுவிலக்கை கொண்டு வருகிறோம், என்று கொண்டு வர வேண்டியது தானே? இந்த 41/2 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மதுவால் தமிழ் நாடே சீரழிந்ததே, அப்பொழுதெல்லாம் கண்டும் காணாமல் இருந்தது ஏன்? அனைத்து ஊடங்கங்களும், எதிர்க்கட்சிகளும் மதுவிற்கு எதிராக குரல் கொடுத்து, வரும் 2016 தேர்தலில் "மது ஒழிப்பு" ஒரு முக்கிய பிரச்சனையாக உருவெடுத்த பிறகு , கடைசியாக "கருணாநிதிக்கு திடீரென்று தமிழக மக்கள் மீது அக்கறை வந்துவிட்டது, ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்பாராம், மக்கள் அதை நம்பவேண்டுமாம் ,இவரிடம் ஆட்சியை கொடுக்க வேண்டுமாம். மீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதிக்கு கிடைத்த கடைசி அஸ்திரம்தான் இது. தமிழக மக்கள் இந்த கபட நாடகத்தை அறியாதவர்களா என்ன?
                Points
                145
                about 12 hours ago
                 (0) ·  (0)
                 
                • KKkappikulam kannan  
                 யார் வத்தலும் மதுவிலக்குக் கொண்டுவந்த நல்லதுதான் . அரசியல் வாதிகளும் , அதிகாரிகளும் , தங்கள் கடமைகளை செய்யவேண்டும் .
                 about 12 hours ago
                  (2) ·  (0)
                  
                 S · Sivasankaran Up Voted
                 • Kkingpearl  
                  மருத்துவர் கூறிய கருத்துக்களுக்கு தலிவர் நேரடியாக பதில் அளிக்காமல் முதன்மைச் செயலர் மூலம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் என்ன?
                  Points
                  3395
                  about 13 hours ago
                   (3) ·  (0)
                   
                  • SS.Udayabalan  
                   சண்ட போடதாங்க ஏடைய
                   about 13 hours ago
                    (0) ·  (0)
                    
                   • GGGandhi Gandhi  
                    கருணாநிதி உருக்கமாகப் பேசி சாராயத்தை அறிமுகம் செய்து தமிழனை குடிகாரர்களாகவும் தமிழச்சிகளை இலவச மயக்கத்தில் பிச்சை எடுக்க வைத்து வாழ்க்கையை அழித்தவர்.
                    Points
                    2195
                    about 13 hours ago
                     (1) ·  (0)
                     
                    Sivasankaran Up Voted
                    • Aanitha  
                     பாமக ஆட்சியமைக்கப்போவதுமில்லை! .மருத்துவர் வழங்கிய பேனாவுக்கு வேலை வரப்போவதுமில்லை! அட்டைக் கத்தியை வைத்துக் கொண்டு போருக்கு அழைக்கும் அன்பு மணியை நினைத்தால் பாவமாக உள்ளது!
                     Points
                     3310
                     about 13 hours ago
                      (0) ·  (0)
                      
                     • TT.  
                      அப்படி போடுங்க அரிவாளை !! எங்க தலைவரிடமேவா ??? சரி இப்ப சொல்லுங்க உண்மையிலேயே மூடப்போறிங்களா ?? இல்ல தேர்தலுக்காக சொல்கிறீர்களா., அம்மா வுக்கு இத பற்றி பேச தகுதி இல்லை அதனால் சும்மா இருக்கிறார் .,ம்ம்ம்ம்.., ப ம க இப்பொழுது சொல்கிறது., ஆனால் நம்ப முடியாது.., முயற்சி செய்யுங்கள் நிதானமாக. - இரவி
                      Points
                      1825
                      about 13 hours ago
                       (0) ·  (0)
                       
                      • Bbabu  
                       ஜாதி போைதக் . மது போைத பரவாயில்லை
                       about 13 hours ago
                        (0) ·  (0)
                        
                       • Kkathirvelu  
                        கலைஞர் வென்று முதல்வராவதை விடுங்கள் . கருணாநிதியின் பினாமிக்கள் நடத்தும் மது ஆலையை முதலில் மூடிவிட்டு பின்பு மதுவிலக்கை பற்றி பொய் சொல்லட்டும்.குறைந்தபட்சம் சுடாலினாவது நம்புவார்.
                        Points
                        1440
                        about 13 hours ago
                         (0) ·  (0)
                         
                        • ARAr ramanathan  
                         100 சதவிகிதம் உண்மை அவர் மகன் முதல்வர் ஆசைக்கு இப்படி ஒரு ஆப்பு கலைஞர் வைப்பார் என எண்ணி இருக்கமாட்டார்

                        0 comments: