Monday, July 27, 2015

குடிகாரர்கள் ஓட்டு பூரா யாருக்குக்கிடைக்கும்?

2016–ம் ஆண்டு தமிழ்நாட்டில் பா.ம.க. ஆட்சி அமைக்கும் ஜி.கே. மணி பேட்டி # பேராசை ,நப்பாசை.ஆசை தோசை அப்பள வடை=============
2 ரஜினிக்கு ஜோடி நிர்வாண சர்ச்சை ராதிகா ஆப்தேவா? சர்ச்சை # யோவ்.அது டூப்ளிகேட் பார்ட்டி.ஒரிஜினல்னா ஆதாரம் காட்டுங்கய்யா பார்ப்போம்
=============3 நமக்கு காதல் கல்யாணம் தான் பாஸ் – ஆர்யா # காதல் தான் டெய்லி ந்டக்கு.கல்யாணம் நடக்கற மாதிரி தெரியல்.
=============4திருமணத்திற்குப் பிறகும் சினிமா வில் லிப் லாக் பண்ணலாமே, தப்பில்லை- அனுஷ்கா சர்மா # எல்லாருக்கும். பேக்கரி ஓனரே புருசனா கிடைக்காதே மேடம்===============

5 DMK ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்-கலைஞர் # தலைவா! காப்பி அடிக்காதீங்க.இது டாக்டர் அய்யா வாக்குறுதி

====================


6

DMK ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்."-கலைஞர் # ஆல்ரெடி ஆட்சில இருந்தப்போ இதை ஏன் செய்யலை ?

===============


7 தனது செல்ல நாயை இரண்டாம் திருமணம் செய்யும் பெண்... # இதுக்கு முதல் புருசன் நாய்/மனுசன் சம்மதிச்சாச்சா?


==============


8

மதுவிலக்கை அமல்படுத்தும் சாத்தியக் கூறுகளை உருவாக்க வேண்டும்: கருணாநிதி # இவரு நிஜமாவே நல்லவர் ஆகிட்டாரா?கமல் ஆகிட்டாரா?


===============


9 மது மூலமாக

வரும் வருமானம்
முக்கியமல்ல
முக்கியம்-ஸ்டாலின்
சமூகநலன்
#என்னய்யா திடீர் திடீர்னு எல்லாரும் திருந்தீட்டாங்களா?


============

10

இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க ஆசை: வித்யாபாலன்...# டிஸ்கோ சாந்தி கேரக்டர்னா கிளாமர் காட்டலாம்.இதுல அது முடியாதே


===============11

நடத்தையில் சந்தேகம்.. மனைவியுடன், மாமியாரையும் சேர்த்து கொன்ற ஹோட்டல் அதிபர் # குட்டி பகை ஆடும் பகை போல


===============


12 ஹேமமாலினிக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”- வழங்கியது பேங்க் ஆப் பரோடா # அப்பப்ப ஆம்பளைங்களுக்கும் ஏதாவது விருது தந்தா தேவலை


==============


13

விஜய்யின் உருவில் நடிகர் சிவாஜி வாழ்ந்து கொண்டிருக்கிறார்-விஷால் # நல்ல வேளை .சங்கவி பிரபுக்கு சித்தி முறை னு சொல்லலை

==============


14 சட்டசபை நிகழ்வுகளை கேப்டன் டிவியில் இலவசமாக ஒளிபரப்ப தயார்: ஐகோர்ட்டில் விஜயகாந்த் மனு தாக்கல்...#இதை விட அவமானம் ஜெயா டிவி க்கு வேற இல்லை


===============


15 மதுவை கொண்டு வந்ததற்காக கருணாநிதி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்.# தனுஷ் நடிச்ச படம் மாரி.சாராயம் கொண்டுவந்ததுக்கு சாரி"


==============

16

79 வயதில் முதல்முறையாக ஹார்ட்டின் டாட்டூ போட்டுக்கொண்ட பாட்டி..# த்ரிசா ரசிகையா இருக்குமோ?


=============


17 ராகுல் போதைப்பொருளுடன் அமெரிக்காவில் சிக்கியபோது வாஜ்பாய் காப்பாற்றினார்: சுசாமி ்.# இவருக்கு மட்டும் ராஜாங்க ரகசியங்கள் கசிஞ்சிடுதே எப்டி?


=============


18

விஜய் நடித்த குஷி 2–ம் பாகம் தயாராகிறது...# இதுல ஜோடி ஜோதிகான்னா வில்லன் ரோல் ல சூர்யா வைப்போட்டா செமயா இருக்கும்ல?


============


19 நான் பிரதமரையேகேள்விகேட்டவன்- ஈவிகேஎஸ்
# எங்க அண்ணன் பிரசாந்த் கூடத்தான் ஒபாமாகிட்டே யே கேள்வி கேட்டாரு.அவரு பதில் சொல்லனுமில்ல?

==============


20 தமிழகம் முழுவதும் எலைட் மது பான கடைகளை திறக்க அதிகாரிகள் தீவிரம் - செய்தி # குடிகாரர்கள் ஓட்டு பூரா நம்ம தலைவிக்குத்தான்.ஸ்டெடியான ஆட்சி


===============


0 comments: