Friday, July 31, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 31/7/ 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


1 ஆரஞ்சு மிட்டாய்
2 இது என்ன மாயம்
3 சகலகலாவல்லவன் அப்பாட்டக்கர்
4 நிராயுதம்
5 SPECIAL ID #31/7/2015 ரிலீஸ்


A classical film from Vijay sethupathi
1 ஆரஞ்சு மிட்டாய்


தனுஷ், விஷால், ஆர்யாவை தொடர்ந்து தயாரிப்பு உலகில் புதிதாக களமிறங்குகிறார் விஜய் சேதுபதி.
விறுவிறுவென உச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிற விஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்கிற கனவு நிறையவே இருக்கிறது. அதனாலதான் சங்குதேவன் என்ற படத்தை இன்னொரு தயாரிப்பாளரின் உதவியோடு ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் பாதியில் நிற்கிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி ”ஆரஞ்சு மிட்டாய்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த முறை அவர் வேறு யாருடைய தயவையும் நாடாமல் தனியார் வங்கி ஒன்றில் கடன் வாங்கி தானே நேரடி தயாரிப்பாளராக களமிறங்குகிறாராம்.
இப்போதைக்கு விஜய் சேதுபதியின் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி ஆகிய படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இது தவிர இடம் பொருள் ஏவல், புறம்போக்கு ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது. இது முடிந்த பிறகு “ஆரஞ்சு மிட்டாய்” படத்தில் நடிப்பார் என்று தெரிய வருகிறது.


A amala paal vaseekaran film
2 இது என்ன மாயம்


தலைவா, சைவம் என தொடர் தோல்விகளை கொடுத்த விஜய் சிறிது கால ஓய்வுக்கு பிறகு விக்ரம் பிரபுவை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டமாருதம் வெற்றிப்படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் படம் இது.
படம் பற்றி இயக்குனர் விஜயிடம் கேட்டோம்..”இது காதல் சம்மந்தப்பட்ட படம் தான்..காதலுங்கிறது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். அது யாருக்கு வருகிறது, அவர்களுக்கு அது எந்த கால கட்டத்தில் வருகிறது என்பது தான் காதலின் மகத்துவம். ஒருவருக்கு அது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதல் பூக்கிற தருணம் இனிமையானது. அதை தான் இது என்ன மாயம் பிரதிபலிக்கும். இதில் இரண்டு காலகட்டங்கள்! ஒன்று ஜாலியாகத் திரிந்த கல்லூரி வாழ்க்கை… இன்னொன்று கல்லூரி காம்பவுண்டை விட்டு வந்து நிகழ்கால வாழ்க்கையில் கடந்த கால இனிமையை நினைத்து பார்க்கும் காலகட்டம்! எனக்கு எல்லாம் மறந்து போச்சு என்று சொல்கிறவன் கூட  தனது காதலை மறக்க முடியவில்லை என்றே சொல்வான். 
அழகான காதலனாக அருண் பாத்திரத்தில் விக்ரம் பிரபு வாழ்ந்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். நான் ,நீரவ் ஷா, ஜி.வி.பிரகாஷ்குமார், நா.முத்துக்குமார் என்கிற ஒரே சிந்தனையாளர்கள் இதிலும் கை கோர்க்கிறோம் ஜெயிப்பதற்காக. இந்த வெற்றியில் மேஜிக் பிரேம்ஸ் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் மூவரும் கூட இணைந்திருக்கிறார்கள் ஜெயிப்பதற்காக”என்றார் இயக்குநர் விஜய். இப்படம் வரும் மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மே 1ம் தேதி சூர்யாவின் மாஸ்' ரிலீஸாகவுள்ள நிலையில் தற்போது அந்த படத்துடன் விக்ரம் பிரபுவின் படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Jeyam ravi's masaala film
3 சகலகலாவல்லவன் அப்பாட்டக்கர்


அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 31-ந் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் சுராஜ் பேசும்போது, அஞ்சலி பற்றிய ரகசியங்கள் அவிழ்த்து விட்டார்.
அவர் பேசும்போது, அஞ்சலிக்கு இந்த படத்தில் அமைதியான கதாபாத்திரம். ஆனால், படப்பிடிப்பு முடிந்து 6 மணிக்கு மேல் இவரது அட்டகாசத்தை ஆரம்பித்துவிடுவார். அவருக்கென்று ஒரு சில உதவியாளர்கள் வைத்திருப்பார். அவர்களுடன் சேர்ந்து 9 மணி வரை கிரிக்கெட் விளையாடுவார்.
நாளை படப்பிடிப்பு இருக்கிறது, தற்போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் கேட்க மாட்டார். ஒருமுறை சூரி, அவரிடம் கோபமாக பேச, அவரது ஐபோனை அஞ்சலி உடைத்துவிட்டார். இப்போது அஞ்சலியிடம் அதற்கான பணம் கேட்டு கெஞ்சி வருகிறார் சூரி என்று பேசினார்
Look like gilma film
4 நிராயுதம்


 ’நிராயுதம்’ படத்திற்காக அரை நிர்வாணமாக நடித்த சாரிகா
சென்னை,ஏப்.27 (டி.என்.எஸ்) எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படம் ‘நிராயுதம்’. சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ’ஒரு காதல் செய்வீர்’, ’காதல் செய்ய விரும்பு’, ’ரங்கா’ ’மிட்டாய்’ உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘கதம் கதம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் வெங்கட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.


கனி இசையமைக்கும் இப்படத்திற்கு சரவணகுமார் ஒளிப்பதிவு செய்க்கிறார். ஆர்.ஜி.ஆனந்த் படத்தொகுப்பு செய்ய, மோகனமகேந்திரன் கலையை கவனிக்கிறார். தயாரிப்பு நிர்வாகத்தை சி.ஜெயராஜ் கவனிக்கிறார்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.பி.ராஜதுரை இயக்குகிறார். படம் குறித்து கூறிய இயக்குநர் ராஜதுரை,   ”கதாநாயகன் சந்தோஷ் அமெரிக்காவிலிருந்து வரும் பந்தா பேர் வழி. சாப்ட்வேரில் பணிபுரிபவர் சாரிகா. அறிமுக நடிகரான வெங்கட் கால் டாக்சி டிரைவர். சரிகா வேலை முடிந்து நடு இரவில் வெங்கட்டின் கால் டாக்சியில் பயணிக்கிறார். அவருக்கு மயக்க மருந்து ஸ்பிரே செய்து அவளை கடத்துகிறான். கண்விழித்து பார்க்கும் போது அரை குறை ஆடையுடன் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறாள். அரை குறை ஆடையுடன், தனது ஆடைகளையும், தப்பிக்க வழியையும் தேடி ஒவ்வொரு அறையாக கடந்து வரும் போது ஒரு அறையில் ஹீரோ சந்தோஷும் அரை குறை ஆடையுடன் அடைத்து வைக்கப் பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள்.அரைகுறை ஆடையுடன் இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை! ஊட்டியில் பங்களா போன்று அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.” என்றார்.5 SPECIAL ID


Chan Chi-Lung has been an infiltrator in Cheung Mo-Hung's Hong Kong triad gang for many years. After a failure of a recent negotiation by Lung with the other three local triad gangs on behalf of Hung makes the latter suspicious of Lung's identity. Hung sets to wipe out every undercover cop in his gang and as a result many cops are caught and wiped out. Sensing the danger, Lung requests to put an end to his undercover career from his captain, Cheung. However, Cheung sends Lung to Mainland China to infiltrate a business of "Special Identity" trading instead. The business is run by Hung's best protégé, Sunny, who was Lung's previous buddy in the gang. Cheung promises to reinstate Lung's police identity in conclusion of the mission once Sunny's business breaks down. Lung agrees, and joining him are local police officer Fang Jing and her chief Lei Peng from the Mainland Chinese police force. But before they can get to Sunny, the latter suddenly vanishes leaving Lung exposed and in great ..


நன்றி - மாலைமலர் , தினமணி , ஆல் சினி வெப்சைட்

0 comments: