Thursday, July 09, 2015

எமி ஜாக்சன், ஸ்ருதி கமல் , அக்சரா , தனுஷ் = பொருத்துக

1  விஜய் நடிக்கும் படம் மாஸாக இருக்கும் - அட்லி
# மாஸ்.ஆக இருந்துடப்போகுது.அது தான் ஊத்திக்கிச்சே ?


============


2 விஜய்59" துப்பாக்கியின் பத்துமடங்கு பவர்-கலைப்புலிதானு!
# அடேங்கப்பா.அப்போ 10*100 கோடி =1000 கோடி?


==========


3 ஒரு விஜய் ரசிகர், விஜய் படம் பண்ணினால் எப்படி இருக்கும்? இயக்குநர் அட்லீ பேட்டி # பில்டப் பிரமாதமா , பஞ்ச் டயலாக் தாறுமாறா இருக்கும்


==========


4 ஆவின் பால் கெடுவதற்கு வாய்ப்பில்லை-தமிழக அரசு #,கெடாதுனு நீங்களா மனப்பால் குடிச்ட்டு அள்ளி விடக்கூடாது


===============

5 குடிபோதையில் தவளைக்கு முத்தமிட்ட குடிகார வாலிபர்...# இவரோட செல்போன் ரிங் டோன் அந்த மஞ்சள் நிறத்"தவளை" ,என் நெஞ்சில் நிலைத்"தவளை?


=================


6 தேர்தலில் ஜெயித்தால் நடிகர் சங்கத்துக்கு புது கட்டிடம் கட்டுவோம்: விஷால்.. # தோத்தா வரலட்சுமியையாவது கட்டுங்க


==============

7 ஓட்டுப் போட தூக்கி வந்த பாட்டியை வாசலோடு போட்டு விட்டுப் போன அதிமுகவினர்! #,பூத் வரை பாட்டி !,விட்டுட்டுப்போய்ட்டான் பார்ட்டி


==============


8 பிரதமர் மோடி பேட் செய்தால் பந்து மைதானத்திற்கு வெளியே பறக்கும்.
-லலித் மோடி #,அவரும் வெளில,அவர் அடிச்ச பந்தும் வெளில


===========


9 காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது-குஷ்பு.
# ஒரு வருசம் முன் இதே டயலாக்கை திமுக வை வெச்சு சொன்னீங்க


==============


10 ராஜாதிராஜா ,ரஜினி முருகன் 2க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு- சிவகார்த்திகேயன்#அய்யய்யோ.அப்போ ராதா,நதியா தான் ஜோடியா?==============

11 என்னுடைய உயரம் என்னன்னு நான் தான் நிர்ணயிக்கணும் - கமல்#அப்பு வாக நடிக்க யார் ட்ரை பண்ணாலும் யாராலும் எட்ட முடியாத உயரம் ஆச்சே?


==============

12 என்னை முதலில் நைட்டியில் பார்த்தது என் கணவர் அல்ல சல்மான் கான்: நடிகை கரீனா # நல்ல நேட்டிவிட்டியான நைட்டிவிட்டி கேர்ள்


===============


13 தனுஷ் என்னை மாற்றிவிட்டார் – எமி ஜாக்சன் #உங்களையுமா?-ஸ்ருதி ,அக்சரா மைண்ட்வாய்ஸ்


==============


14 மகளுடன் செல்பி எடுத்து பகிருங்கள்: மோடி வலியுறுத்தல்! # அத்தை மகளுடனா?


================


15 மோடியின் ஓராண்டு ஆட்சியில் ஊழலே இல்லை -அருண் ஜெட்லி
# காதலியை நேரில் பார்த்தாதான் காதல் பண்ண முடியும்.ஊரில் இருந்தாதான் ஊழல் பண்ண முடியும்.


============


16 பாபநாசம் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு..# ஜூலை 3 பாபநாசம் ரிலீஸ் ஆகுதுல்ல


=============


17 மெட்ரோ ரெயில் தொடக்க விழா: மத்திய மந்திரிகளை அழைத்திருக்கலாம் - தமிழிசை.#மம்மி இருக்கும் இடத்தில் யார் வந்தாலும் டம்மிதான்


============


18 தமிழ்நாட்டில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து விட்டது: கனிமொழிு..# ஆம்பளை கிட்டே வேட்டி சட்டை மட்டும் தான் இருக்கும்.


=============


19 சென்னை மக்களின் கனவு திட்டம் மெட்ரோ ரெயில்: ஜெ தொடங்கி வைக்கிறார் # விதைச்சவர் ஒருவர் அறுவடை செய்பவர் ஒருவர்.இதுதான் உலகம்

=============


20 மதுகடைகளை அதிகரித்ததுதான் அதிமுக அரசின் சாதனை - கனிமொழி
# நாம நம்ம ஆட்சில என்ன செஞ்சோம்?டாஸ்மாக்கை இடிச்சுட்டோமா?


==============


0 comments: