Wednesday, July 15, 2015

ரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகேயன்.

1  தமிழக மக்களின் மோசமான வாழ்வாதாரத்துக்கு திராவிட கட்சிகளே காரணம்: அன்புமணி # அது தெரிஞ்சும் மாறி மாறி 2 கழகத்துக்கும் கட்னீங்களே தோரணம்?


=============2 நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலி ரூ.160 ஆக உயர்த்தப்பட்டது ்# மினிமம் ஊழல் அரசியல்வாதிக்கு இவ்ளவ்னு சொல்லிடுங்க
================
3 DMK ,ADMK் மனநிலை மாறாததால் தமிழகம் முன்னேறவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு.# அப்பாவோட ஜாதி வெறி மாறாததால் பா ம க முன்னேறலை
===========
4 மதுவால் மூன்று தலைமுறை பாதிப்பு.-ஜெ எக்கேடோ கெட்டுப்போறான்.நமக்குகஜானா நிரம்புனா சரி
============
5 டாஸ்மாக் சரக்கை தர நிர்ணயம் செய்யனும்-அரசு # எப்படியும் குடிகாரன் குடிச்சு நாசமாதான் போகப்போறான்.அதுக்கு தரம் இருந்தா என்ன?இல்லாட்டி என்ன?
===========
6 மக்கள் என்ன பேசுகிறார்கள் என அறியத்தான் மெட்ரோவில் சென்றேன் - ஸ்டாலின் #  ஓஹோ! ஒண்ணா ஓட்டு கேட்க வருவீங்க, இல்லன்னா ஒட்டு கேட்க வருவீங்க?
===============
7  டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு # பிரமாதம் போங்க,செத்தாலும் நல்ல சரக்கா குடிச்சு சாகட்டும்னா?
=================8  மதுவை கொண்டு வந்ததுதான் அதிமுக, திமுக ஆட்சிகளின் சாதனை: அன்புமணி ராமதாஸ் கிண்டல் # அப்படிப்பட்ட கேடு கெட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது ஏனோ?
================
9  மின் வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழலா?- ஜெ. விளக்கம் அளிக்க கருணாநிதி வலியுறுத்தல் # 4 வருசத்தில் அவர் அவ்ளவ்னா 5 வருசத்தில் இவர் எவ்ளவோ?

=================

10 பாபநாசத்துக்கு என்னைப் பரிந்துரைத்த மோகன்லாலுக்கு நன்றி - கமல்" என்னைப்பரிந்துரைத்த ஜெயமோகனுக்கு நன்றி - கவுதமி

==================


11 4 ஆண்டு கால வேதனை... அதிமுக அரசு வாய்ஜாலத்தில் காலம் கடத்துகிறது: விஜயகாந்த் # வாய் உள்ளபிள்ளை பிழைக்கும் .ஜாமீன் கிடைச்ச அரசு நிலைக்கும்


===============

12 பல நடிகைகள் என்னைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள்: கங்கனா ரனாவத் # இருக்கு ஆனா இல்ல குழப்பம் தான் மேடம்


=============

13 பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை குழந்தைகளுக்கு செல்போன்தராதீர்-ராமதாஸ் # செல் வாங்கிக்குடுத்தாத்தான் பள்ளிக்குப்போவேன்னு அடம் பிடிக்குதுங்களே


=============


14 அணுகுண்டு வீசத் தயங்கமாட்டோம்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை.. பிரபாகரன் ல வர்ற மாதிரி அதை பிடிச்சு திருப்பி வீசிடுவோம்==============


15 படத்தை முடித்துக் கொடுக்காவிடில் தற்கொலை... செல்வராகவனை மிரட்டும் தயாரிப்பாளர் ஒர்ரி ."முடிச்சுடறேன் சீக்கிரமே - செல்வராகவன்


===============

16 நாலு சுவற்றுக்குள் ஆபாச படம் பார்ப்பதை கோர்ட் தடுக்க முடியாது: தலைமை நீதிபதி # எங்க வீட்ல 3,சுவர்தான் இருக்கு.நான் பார்க்கலாமா யுவர் ஆனர்


==============


17 ரஜினி விஜய்க்கு அப்பறம் நான் தான் - சிவகார்த்திகேயன். # ஓஹோ.படம் ஓடலைன்னா நட்ட ஈடு தர்ற ஹீரோ வரிசையா?ம்ம்ம்


=============

18 புதிய படத்தில் 3 கெட்டப்களில் தோன்ற இருக்கிறார் சிவகார்த்திகேயன்.# இளைய தளபதியையே மிஞ்சிட்டாரு போல


=============

19 வாலு' படம் வெளியாகாமல் இருக்க சதி நடக்கிறது-டி.ராஜேந்தர்#.3 வருசமாவா நடக்குது? கால் வலிக்காது?உக்காரச்சொல்லிட்டு ரிலீஸ் பண்ணிடுங்க

=============

20 காங்கிரஸ் திமுக இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் -
கனிமொழி # அதெப்டிங்க தேர்தல் கிட்டே வந்தா ஒட்டிக்கறீங்க?


================

0 comments: