Saturday, July 18, 2015

மாரி - ரோபோ சங்கரைப்புகழ்ந்து தள்ளிய ட்வீட்டர்கள்

ரம்ஜான் பண்டிகை, வார இறுதியை குறிவைத்து வெளியான படம் 'மாரி'. 'தர லோக்கல்' படம் என்ற அறிவிக்கப்பட்ட இந்தப் படம் தனுஷ் ரசிகர்களிடையே பெரிய அளவில் எதிர்பார்ப்பைப் பெற்றது. முதன்முறையாக தனுஷுடன் காஜல் அகர்வால், காமெடிக்கு ரோபோ ஷங்கர் என நல்ல கலவை.
'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் மூன்றாவது படம். 'தர லோக்கல்' கெட்டப்பில் 'மாரி' தனுஷை ஆவலுடன் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது வாழ்த்தையும் சில பல திட்டுகளையும் கருத்துக் கலவையாக 'தர லோக்கல்' ஆக அள்ளி வீசுகின்றனர். ரசிகர்களின் ட்விட்டர் பதிவுகளிலிருந்து சில, இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...
மதுரை தல சண்டியர் ‏@arunsachin237 - ரோபோ சங்கருக்காக படம் பார்க்கலாம்னு தான் நிறைய பேரு ட்வீட் போடுறாங்க.
எமதர்மன் ‏@Emadharman - சித்ரகுப்தா, மாரி...மாரினு என்ன பேச்சு? ஏதோ ரவுடி கதையாம் பிரபு. கடைசி வரைக்கும் திருந்த மாட்டானாம். தனுஷ்காக அந்த இயக்குநர் எழுதின கதையாம்.
Ramesh ‏@rnil45 - எல்லாரும் ரோபோ சங்கர் ஆக்டிங் பத்தியே பேசுறாங்க. அவர் இருக்கறதால தனுஷ் சரியா தெரியல போல ஸ்கிரீன்ல.
கேப்டன் வேலு ‏@Thalapathy_8787 - டியர் தனுஷ், இயக்குனர்களின் வேலையில் நீங்க மூக்க நொழைக்காம இருந்தா படம் நல்லா வரும்.. தலையீடுகளை குறைக்கவும் # நையாண்டி # மாரி.
கார்த்திக் ‏@KarthikLawrence - டங்காமாரி ஊதாரி புட்டுக்கின நீ நாரி.
திரு.முட்டாள் ‏@imuttaal - செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஃபாஸ்ட்டா போயிருச்சு. அண்ட் செகண்ட் ஹாஃப் ல சில சீன் தனுஷ்க்கு கெத்து நல்லா இருந்துச்சு. படம் ஒருதடவ பாக்கலாம்..!#மாரி.
M M Krishnan ‏@MMkrishnandmk - மாரி பாத்தா வாழ்கையே போனமாரி. இதுக்கு பவர்ஸ்டார் படம் லத்திகா பாக்கலாம்.
கானகந்தர்வன் © ‏@LSMKumresh - தட் மொமென்ட், டான்னு ஆகிட்டா சும்மா நாலு எடத்துக்கு போகணும் #மாரி டான் டான் டான்.
Vaishenaav Suresh ‏@vaishenaav - இனி பெரிய நடிகர்கள் படம் தோற்றால் ஹீரோக்கள் 20 சதவீத சம்பளத்தை திருப்பித் தரணும்! அப்ப மாரி எவ்வளவு தரணும்?! சாரி பெரிய நடிகர் படமா! மாரி எஸ்கேப்.
ஆசான் 3.0 ‏@iAasaan - மாரி படத்துல வர்ற அந்த கொசு பஞ்ச் எல்லாம் சூர மொக்கை. அதையே ஓயாம போட்டு போட்டு படத்தை இவங்களே காலி பண்ணிருவாங்க போலருக்கு! #மாரி.
டுவிட்டர் அரசன் ‏@thamizhinii - ரோபோ சங்கர் இல்லாமல் ஒரே ஒரு காட்சியை கூட பார்க்க முடியவில்லை..
kobikashok ‏@kobikashok - ரோபோ சங்கர் தனுஷுக்கு ஆட்டோவில் ஆள் ஏத்தும் காட்சிகள் தியேட்டரே கதி கலங்குகிறது! செம காமெடி!!
Achu Ajith✨ ‏@achuthabalan - #மாரி Music மட்டும் நல்லா இருந்தா படம் ஒடிடுமா என்ன....? ரோபோ சங்கர் ரொம்ப அழகா பண்ணியிருக்கீங்க....கிழி கிழி Mass scenes 150rs waste.
Raju N ‏@naaraju - ஜெயில்லருந்து வெளிய வர்றப்ப மட்டும் தனுஷோட ஹேர்ஸ்டைல் வழக்கத்துக்கு மாறா வகிடெடுத்து சீவியிருக்கும்! எதுக்கான குறியீடா அது.... #மாரி.
வாலிதாசன் ‏@Biyyalo - மாரி படம் அவ்ளோ மொக்கைலாம் இல்ல ஒரு வாட்டி பாக்கலாம். சும்மா மரண மொக்கைனு மொக்கையா பேசிக்கிட்டு திரியிறாங்க.

0 comments: