Thursday, February 06, 2014

விஜய் சங்கவியுடன் ஜோடி சேர்வாரா?

1. உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்த பீஜிங்கை பின்னுக்கு தள்ளிய டெல்லி..# அதான் விளக்குமாறு ஆட்சிக்கு வந்தாச்சில்ல? சுத்தம் பண்ணிடும்===================


2 அழகிரியை சந்தித்த திமுக எம்.பி.க்கள். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக அறிவிப்பு.# அவருக்கே கட்சில முடிவுகாலம் வந்தாச்சு====================


3 பாராளுமன்ற தேர்தல்: தர்மபுரி தொகுதியில் அன்புமணி போட்டி# தர்ம அடி நிச்சயம்======================


பாமக ஆட்சிக்கு வந்தால் காடுவெட்டி குருவுக்கு காவல்துறை - ராமதாஸ்.
# குன்றத்திலே திருடனுக்கு கொண்டாட்டம்.
================================5 காங்கிரஸ் தனித்துவிடப்படவில்லை.. 275 இடங்கள் இலக்கு:- ஜி.கே.வாசன் !# பொண்ணுக்கு டைவர்ஸ் ஆகிடுச்சு.ஆனா புகுந்த வீட்டில்தான் இருக்கு

=========================6 கோவையில் வீட்டில் பாலியல் தொழில்: புரோக்கர் கைது- 3 பெண்கள் மீட்பு # இதெல்லாம் தப்பு ப்ரோ னு போலீஸ் நொங்கெடுத்திருக்குமே ?
===============================7 நடிகர் 'விஜய்'யின் நாயகி பிரியங்கா சோப்ராவுக்கு காலில் காயம் # ஷூட்டிங்னா ஆளுக்கு அடிபடறதும் ,ரிலீஸ்னா படம் அடி வாங்கறதும் சகஜம் தானே?
===============================8 கூட்டணி குழப்பத்தால் விஜயகாந்த் செல்வாக்கு சரிவு- அதிமுகவுக்கே வெற்றி: பண்ருட்டி ராமச்சந்திரன் # அண்ணனுக்கு ஒரு அண்ணா விருது பார்சல்===========================9 திருவள்ளுவரே தமிழ்நாட்டில் திணறிப்போயிருக்கிறார் அதிமுக ஆட்சியில்-கலைஞர் # என் பேரு அழகிரி.எனக்கு இன்னொரு பேர் இருக்கு.திருவள்ளுவர்
=============================10 ஹாலிவுட் நடிகைகளை 'காப்பி'யடித்து டிரஸ் போடும் தீபிகா படுகோனே # ஏதோ கொஞ்சமே கொஞ்சமாவது டிரஸ் போடறாங்க்ளே?
=============================


11 அம்மா பிரதமர் ஆக வேண்டும் - தா பா ,,
#தா.பாண்டியன் # உங்கம்மாவா? நம்ம அம்மாவா? ்=======================12 இலங்கை அரசு தன் கடற்படையை அடக்கி வைக்க வேண்டும்-வாசன்# எங்கேங்க , இப்பவெல்லாம் சொந்தப்பையனையே தலைவர்களால அடக்க முடியறதில்லை
===========================13 திமுகவை எந்த சக்தியாலும் அழிக்கமுடியாது - ஸ்டாலின் # கருவேல மரமா இருந்தாலும் ஆணி வேர் பலமா இருந்துட்டா ஏதும் செய்ய முடியாது
====================================14 காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்து ஊழலை ஒழிக்க வேண்டும்- விஜயகாந்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்க அழைப்பு # மிஷின் இம்ப்பாசிபிள் 2=========================
15 விஜயகாந்த் வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் மேல்முறையீடு- சட்டசபைக்கு செல்ல தடை விதிக்க கோரிக்கை# இப்ப மட்டும் போய்க்கிட்டா இருக்காரு?============================
16 மனைவியை கணவர் அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம் # ஆனா மனைவி திருப்பி அடிப்பாளே.தாங்க முடியாதே? :-(
=======================17 ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரும் - சோனியா காந்தி # ஓட்டு வேணும்னா இந்தியன் / இத்தாலியன் எது வேணாலும் செய்வான்
============================18 ரூ.5 லட்சத்தில் குடும்பத்தில் எல்லோரையும் அழைத்துச் செல்லும் டட்சன் எம்பிவி கார் # தமிழ் இனத்தலைவர் குடும்பத்துல 92 பேர் இருக்காங்க=======================19 தன் முதல் ஹீரோ விஜய்க்கு மீண்டும் ஜோடியானார் ப்ரியங்கா சோப்ரா! # தானிக்கு தீனி.விஜய் சங்கவியுடன் ஜோடி சேர்வாரா? ரசிகர்கள் ஆவல்============================20 இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பண்ண வேண்டாம் : ராஜ்கிரண் அதிரடி # ராஜபக்சே மட்டும் தான் பாக்கி.எல்லாரும் இதை சொல்லியாச்
=================================

0 comments: