Wednesday, February 19, 2014

மச்ச ராசி பலன் சொல்லத்தெரியாத மக்கு vs மச்சக்கன்னி கள்ளி

1.பொதினா இலைகளை நீர் உள்ள பாத்திரத்தில் போட்டு கழுவியதும் வீடெல்லாம் அதன் வாசம் நிரம்புவது போலே நீ வந்ததுமே காற்றெல்லாம் உன் வாசம்
===============


2 பல மைல்கள் நான் நடந்து ஒத்திகை பார்த்தும் மயில் நீ அருகில் வந்ததும் என் நடையில் ஒரு செயற்கைத்தன்மை வந்து விடுகிறது=================


3 திருமணம் நிச்சயம் ஆன பின் பெண்ணுக்கு முகத்தில் கல்யாணக்களை வந்துவிடும்.ஆணுக்கு வாழ்க்கை பயம் வந்து விடும்===================


4 இசையை ரசிப்பவர்கள் ட்விட்டர் வந்தால் இன்னும் நுணுக்கமாக ரசிப்பார்கள்====================

5  பாயாசத்தைப்பார்த்ததும் அதில் உள்ள முந்திரியை முதலில் சாப்பிடுவது போல உன் விழிகளில் இருந்து எனக்கான காதலை முதலில் எடுத்துக்கொள்கிறேன்====================

6  உன் விழி இமையின் ஒரு முடியைத்தனியாகக்காட்டினாலும் அடையாளம் சொல்லி விடும் அளவுக்கு நீ எனக்கு பரிச்சயம்===================


7  சிம்புவுக்கு அனிரூத் கண்டா ஆகாது # நல்லா யோசிச்சுப்பாருங்க புரியும்


==================


8 பொறுமை ,அன்பு ,நளினம் ,தாய்மை உணர்வு ,குடும்ப நலன் என 5 குணம் கொண்டு தன்னை திரியாக்கி ஒளிர்தல் # "குடும்ப குத்துவிளக்கு"?"
===================


9 கேப்டன் = தாமரை மலரனும்னா தண்ணி ரொம்ப முக்கியம்.மறந்துடாதீங்க! 19 சீட் க்கு கணக்கு பாக்காதீங்க===================


10 உடன் பிறப்பே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள்ளக்காதலர் தினம் ஒன்றை ஒதுக்கி கொண்டாட ஆவன செய்வோம்.சிந்தி ப் பீர்! செயல் படு வீர்!===================


11 பிங்க் கலர் டிரஸ் போட்டிருந்தா பொண்ணுக்கு மாப்ளை ஸெட்.ஆகிடுச்சு னு அர்த்தம்.அதனால பசங்க வேற யார்ட்டயாவது கடலை போடவும் # பொது நலன் கருதி======================


12  அண்ணா என என்னை அழைக்க நினைக்கும் பிகர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது பேசிக்கலி நான் ஒரு மொள்ளமாரி .எனவே பேர் சொல்லியே கூப்பிடலாம்====================


13 பஸ்ல ஒரு பிகரு 5 ரூபாயைக்கீழே போட்டுடுச்சு.சீட்டுக்கு அடில பாஞ்சு போய் 15 பேரு தேடிட்டிருக்காங்க.நான் ்பாக்கெட்ல இருந்து குடுத்துட்டேன்


=====================


14  மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலை முறை நாம்==================


15   யாரையாவது நக்கல் அடிக்கனும்னா நீ பெரிய கலா ரசிகன் யா னு சொல்லிடுங்க # மானாட மயிலாட====================


16   ஒரு அட்டுக்குழந்தையை எப்படித்தூக்க வேண்டும் என்பதை பெண் இயற்கையாகவே உணர்ந்திருப்பாள்.. ஆண் முனைப்புடன் கற்றுக்கொள்வான்
=====================


17   அம்மா செல்லமாக எல்லோர் முன்னாலும் காட்டிக்கொண்டாலும் எல்லாப்பெண் குழந்தைகளும் உள்ளூர அப்பா செல்லமாகத்தான் இருக்கும்======================


18   பஸ் ல பின்னால பசங்க இருக்காங்கனு தெரிஞ்சா போதும் .இந்த காலேஜ் பொண்ணுங்க எல்லாம் ஜோதிகாவா மாறி ஓவர் ஆக்டிங்.ஏகப்பட்ட முகபாவனை மாற்றங்கள்


======================


19   உன் சிரிப்புக்கு எது காரணமாய் இருந்தாலும் எனக்குக்கவலை இல்லை.் உன் கண்ணீர்த்திவலைக்கு நான் காரணமாய் ஒருபோதும் இருந்து விடக்கூடாது====================


20  மச்ச ராசி பலன் சொல்லத்தெரியாத மக்கு நான் எனத்தெரிந்தும் ஒவ்வொரு மச்சமாகக்காட்டி பலன் கேட்கும் மச்சக்கன்னி கள்ளி நீ!=======================

0 comments: