1.பிரம்மன் - படத்தில் சசிக்குமார் நண்பராக சுதீப்!
ராஜமௌலி இயக்கிய, ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து பாராட்டு பெற்றவர் சுதீப்.
கன்னட நடிகரான இவர் தற்போது புதிதாக நேரடித் தமிழ் படம் ஒன்றில் நடிக்க
ஒப்பந்தமாகி இருக்கிறார். கமல்ஹாசன் உதவியானர் சாக்ரடீஸ் இயக்குனராக
அறிமுகமாகும் இந்தப் படத்துக்கு பிரம்மன் என பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார்
நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து லாவண்யா திரிபாதி,
சந்தானம், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
கே.மஞ்சு தயாரிக்கிறார். தேவி
ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு
கோவையில் 17 நாட்கள் நடைபெற்றது. படத்தில் முக்கிய வேடத்தில் சுதீப்
நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தனர். இதனை படத்தின்
இயக்குனர், தயாரிப்பாளர் கே. மஞ்சுவிடம் கூறியிருக்கிறார். மஞ்சுவும்
சுதீப்பும் நண்பர்கள் என்பதால் கதையை கேட்ட சுதீப் உடனே நடிக்க சம்மதம்
தெரிவித்திருக்கிறார்.
‘நான் ஈ படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்த போதிலும் தமிழில்
நடிக்க மறுத்து வந்தவர், இக்கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதித்திருப்பது
கதையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இப்படத்தில் சசிக்குமார் நண்பராக சுதீப் நடிப்பதால் ரொம்பவே உற்சாகமாக
இருக்கிறாராம். சென்னையில் இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கத்
திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் முதல் முறையாக தமிழில்
தயாரிக்கும் படத்துக்கு பிரம்மன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். சந்தானம் அவருடன் முதல்
முறையாக இணைகிறார்.
தயாரிப்பாளராக லட்சுமி மஞ்சு இதுதான் முதல் தமிழ்ப் படம் என்றாலும், அவர்
பல்வேறு வெற்றிப் படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். தெலுங்கில் லட்சுமி
மஞ்சு தயாரித்துள்ள குண்டெல்லோ கோடாரி என்ற படம் பெரும் வரவேற்பை பெற்று
இருக்கிறது.
ஆதி, டாப்ஸி, லட்சுமி மஞ்சு நடித்துள்ள இப்படம் தமிழில் 'மறந்தேன்
மன்னித்தேன்' என்ற பெயரில் விரைவில் வரவிருக்கிறது. இளையராஜா
இசையமைத்துள்ளார்.
இந்த வெற்றி களிப்போடு தமிழில் நேரடிப் படம் பண்ணுகிறார் லட்சுமி. பிரம்மன்
என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தினை கமல்ஹாஸன், மெளலி ஆகியோரிடம் உதவி
இயக்குனராக பணிபுரிந்த சாக்ரடீஸ் இயக்குகிறார்.
ஈரோடு ராயல், ஆனூர், அன்னபூரணி யில் ரிலீஸ்
பிரம்மன் - சினிமா விமர்சனம்- http://www.adrasaka.com/2014/ 02/blog-post_3664.html
பிரம்மன் - சினிமா விமர்சனம்- http://www.adrasaka.com/2014/

2 ஆஹா கல்யாணம் பிரபல இந்திப்பட நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் 'ஆஹா கல்யாணம்'.


