Friday, February 07, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (7 2 .2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1,பண்ணையாரும் பத்மினியும் -தமிழ் சினிமாவில் ரசிகர்களை படம் பார்க்க தியேட்டர்களுக்கு அழைக்க படத்தில் கதை மட்டும் இருந்தால் போதாது வித்தியாசமான தலைப்பும் இருக்க வேண்டும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளனர் இன்றைய இயக்குனர்கள். அந்தவகையில் வித்தியாசமான கதையுடனும், வித்தியாசமான தலைப்புடனும் ஒரு புதிய படம் உருவாகி வருகிறது. படத்தின் பெயர் பண்ணையாரும் பத்மினியும்...! தலைப்பை பார்த்ததும் ஏத‌ோ பண்ணையாருக்கும், பத்மினி என்ற பெண்ணுக்கும் தொடர்பான கதை ‌என்று எண்ணிவிடாதீர்கள். ஒரு பண்ணையாரும் அவர் வாங்கும் காரான பத்மினி என்பதையும் தான் படத்தின் தலைப்பாக்கி இருக்கிறார்கள். குறும்பட தயாரிப்பில் நாளைய இயக்குனர் பார்ட்-2 வில் வெற்றி பெற்ற இயக்குனர் அருண் குமார் தான் இப்படத்தை இயக்க உள்ளார். படத்தின் கதை 1995-ல் மதுரை பக்கம் உள்ள ஒரு சிறு கிராமத்தில் துவங்குகிறது.

இந்த படத்தில் பண்ணையாரான ஜெய்பிரகாஷ் ஒரு கார் வாங்குகிறார். அவருக்கு கார் ஓட்ட தெரியாததால் அவருக்கு டிரைவராக விஜயசேதுபதி வருகிறார். படத்தின் திரைக்கதை மொத்தமும் இந்த கார் உடனே நகருகிறது. அதோடு விஜய் சேதுபதிக்கும், ஹீரோயினுக்கும் இடையேயான காதலும் கலந்து கட்டி இப்படத்தை இயக்குகிறார் அருண். முதல்படமே கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் தான் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சாகும், அதனால் தான் இந்த புதுகளத்தை படமாக்கி வருகிறேன் என்கிறார் டைரக்டர்


ஈரோடு வி எஸ் பி , அண்ணா வில்  ரிலீஸ் 


 

2.  புலிவால் -சென்னையில் ஒரு நாள் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் - தயாரிப்பாளர் லிஸ்டின் இணைந்து தயாரிக்கும் புதிய படம் புலிவால். இந்தப் படத்தில் விமல், பிரசன்னா, அனன்யா, இனியா, ஓவியா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. 
 
மலையாளத்தில் வெளியான ட்ராபிக் படத்தை தமிழில் சென்னையில் ஒரு நாள் என எடுத்து வெற்றி கண்டது ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ். இந்தப் படத்தை ராதிராவுடன் இணைந்து தயாரித்தவர் லிஸ்டின். இப்போது மீண்டும் அதே கூட்டணி தொடர்கிறது. 
 
இந்தப் படத்துக்கு புலிவால் என பெயர் சூட்டியுள்ளனர். மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சப்பா குரிசு படத்தைத்தான் புலிவால் என ரீமேக் செய்கின்றனர். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் கூறுகையில், "சப்பா குரிசு கதையை அப்படியே காட்சிக்கு காட்சி எடுக்கவில்லை. அடிப்படை கதைக் கருவை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம்," என்றார். இந்தப் படத்தை மாரிமுத்து இயக்குகிறார்.
 
 
ஈரோடு அபிராமி , சண்டிகா , அன்னபூரணி, சீனிவாசா வில்  ரிலீஸ் 
 
 
3. -தம்பி ராமையா வடிவேலைவிட பெட்டராக நடிப்பார், வடிவேலைவிட குணச்சித்திர வேடத்தில் வெளுத்து வாங்குவார் என்றெல்லாம் ஆஷிக் என்ற இயக்குனர் தம்பி ராமையாவின் பிஆர்ஓ வாக பேசியதை நினைவிருக்கிறதா? இந்த ஆஷிக் இயக்கும் உ என்ற படத்தில் தம்பி ராமையாதான் கதை நாயகன். ஆஷிக் என்ற பூனைக்குட்டி மியாவ் என்று கத்தியதற்கு காரணம் கிடைத்ததா? கொடைக்கானலில் உ படப்பிடிப்பை நடத்திய போது நாயகி டிமிக்கிக் கொடுத்திருக்கிறார். எப்படி என்பதன் திரைக்கதை விளக்கத்தை அவர்களே தந்திருக்கிறார்கள்.


பீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரைப்படக் கல்லுரி மாணவர் ஆஷிக் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வரும் படம் “உ”. தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க 25க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது.


இயக்குநர் ஆஷிக் விரும்பிய கதாநாயகி கிடைக்காமல் தாமதப்பட்டு வந்தது இப்படத்தின் படப்பிடிப்பு. இறுதியில் கேரளாவில் இருந்து ஒரு புதுமுக கதாநாயகியை தேர்வு செய்துவிட்டு, படப்பிடிப்பு தேதியையும் உறுதி செய்து விட்டு ஒருநாள் முன்னதாகவே கொடைக்கானல் கிளம்பி சென்றனர் உ படக்குழுவினர்.


மறுநாள் கதாநாயகி வந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று இருந்த படக்குழுவுக்கு போனில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி. தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் கொடைக்கானல் வரமுடியவில்லை என கூலாக சொன்னார் அந்த புதுமுக கதாநாயகி.


படத்தில் தான் கதாநாயகிகள் தவிக்க விடுவார்கள் என்று பார்த்தால் நிஜத்தில் உ படக்குழுவினரை தவிக்க விட்டார் அந்தக் கதாநாயகி.


அதன்பின் புது‌ச்ச்சேரியில் “மிஸ் தமிழச்சி”யாக தேர்வு செய்யப்பட்ட நேகா ஒரே நாளில் உ படத்திற்கு திடீர் கதாநாயகி ஆனார். படக்குழுவில் உள்ள அனைவருமே நண்பர்கள் தான். அந்த நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு தோழியாக இருந்த நேகா நடிக்க ஆர்வமாக இருப்பது தெரிந்து, நேகா போட்டோவை மெயிலில் அனுப்பச்சொல்லி, பார்த்து உடனடியாக ஓகே சொன்னார் இயக்குநர் ஆஷிக். அன்று மாலையே கொடைக்கானல் கிளம்பி வரச்சொல்லி படப்பிடிப்பு நடத்தி சென்னை திரும்பி இருக்கிறார்கள். நேகா கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்து புது‌ச்சேரியில் படித்து‌க் கொண்டிருக்கும் தமிழ் யுவதி. தமிழ் சினிமாவில் தமிழ் பேசத் தெரிந்த தமிழ் கதாநாயகிகள் வரிசையில் நேகா புதுவரவு.


ஈரோடு சங்கீதா வில்  ரிலீஸ் . இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் எழுதியவர் எனது நெருங்கிய நண்பர்  முருகன் மந்திரம் . இவர் பல படங்களில் பாடல் எழுதி இருக்கிறார். எஸ் எஸ் குமரனின் தேநீர் விடுதி , பூ படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறார்

 

 4. கோவலனின் காதலி -காதல் என்றால் என்ன படத்தை இயக்கியவர் காளிமுத்து. அவர் தற்போது தனது பெயரை அர்ஜூன ராஜா என்று மாற்றி வைத்து இயக்கியுள்ள படம் கோவலனின் காதலி. இப்படத்தில் கிரண்மை, நவ்நீத்கபூர் என்ற இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். முதலில் கிரண்மைதான் படத்தின் முக்கிய நாயகி என்று கமிட் பண்ணிய இயக்குனர் பின்னர் நவ்நீத் கபூரின் கேரக்டரை பெருசுபடுத்தி அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டாராம்.

இதனால் கொதித்துப்போன கிரண்மை, படப்பிடிப்பு தளத்தில் மற்ற நடிகைகள் போல் இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்து பேசத் தெரியாத நடிகை நான். ஆனால் நவ்நீத் கபூர் அப்படியல்ல. யாரை எப்படி கவுக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்தவர். அதனால் பேச வேண்டியவர்களிடத்தில் கச்சிதமாக பேசி அவரே படத்தில் முக்கிய நாயகியாகி விட்டார். அந்த வகையில், அந்த நடிகையுடன் சேர்ந்து கொண்டு என்னை மோசம் செய்து விட்டார் அந்த இயக்குனர் என்று சரமாரியாக இயக்குனரை சாடுகிறார் கிரண்மை.


ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை 

 
5 ENDER'S GAME  -ஏலியனிடமிருந்து மனிதர்களை காக்கும் கதைதான் இதுவும். ஆனால் படத்தை இயக்கியவர் கவின் ஹுட். அமீரும், சுப்பிரமணியம் சிவாவும் சேர்ந்து யோகிக்காக ஒரு படத்தை காப்பியடித்தார்களே... Tsotsi. அந்தப் படத்தை இயக்கியவர் இவர்தான். X-Men Origins: Wolverine படமும் இவரது கைவண்ணமே.

சென்ற வாரம் வெளியான என்டர்ஸ் கேம் முதல் மூன்று தினங்களில் 28 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை கைப்பற்றியிருக்கிறது. 110 மில்லியன் டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட படத்தின் ஓபனிங் 28 மில்லியன் என்பது ஆவரே‌ஜ்தான்.


ஈரோடு ராயல் , ஸ்ரீ கிருஷ்ணா  வில்  ரிலிஸ். ஈரோட்டில் ஜில்லா  நேற்றே கடைசி @  ராயல் 

0 comments: