Thursday, February 27, 2014

நம்ப வெச்சு கழுத்தறுப்பதில் முன்னிலை.??

1. இரண்டு வருடம் கழித்து எங்கள் ஆட்டம் தான் - அன்புமணி # இவரு பெரிய இளைய தளபதி! அப்டியே ஆடிட்டாலும்===================


2 மோடி அலையில்லை;கடல் அலைதான் அடிக்கிறது ‍- GKவாசன்.# கேப்டன் கூட நின்னு பாண்டிச்சேரி பீச் ல இருந்து பார்க்கறார் போல====================3 பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் போட்டி: பிரதமர் வேட்பாளர் அரவிந்த்# அப்டிப்போடு அரிவாளை.அரசியலுக்கு மரியாதை==========================4   காங்கிரஸ் தலைமையில் தே.மு.தி.க. உடன் கூட்டணி: சுதர்சன நாச்சியப்பன் # கேப்டன் பிரபாகரன் கூட கூட்டணி னு சொல்லும்போது உள்ளூர கூச்சமா இல்ல?=======================5   120 நாய்களை கொண்டு தனது மாமாவை கடித்து குதற வைத்து கொன்ற வடகொரிய அதிபரின் கோரமுகம்..# மாமனாரா இருக்கும்.பாவம்.=======================6  3 கட்சிகள் அழைப்பு: விஜயகாந்த் எந்தப் பக்கம் சாய்வார்? தே.மு.தி.க. பொதுக்குழுவில் நாளை முடிவு..# பிரேமலதா ,சதீஷ் ,கேப்டன் கூடி முடிவு ?=======================7    மோடி பிரதமரானால் நாடு பேரழிவை சந்திக்கும்- மன்மோகன் சிங்/ # நீங்க பிரதமரா இருந்தப்ப தமிழன் சந்திச்சதுதான் பேரழிவின் உச்சம்.===================8   திமுகவுக்கு புதியதமிழகம் ஆதரவு - செய்தி # தலைவா! பின்னிட்டோம்.லதிமுக டி ஆர் க்கு அடுத்து பிரம்மாண்ட.மான இன்னொரு ஆதரவு=======================9    ஜெயலலிதா நிர்வாக திறமையற்றவர்-ராமதாஸ்# அய்யாவுக்கு கட்டம் சரி இல்லை.வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கப்போறாரு
===================10   பிரதமர் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்-அருண்ஜெட்லி# இது அவருக்கு சோதனைக்காலம்.எந்த டெஸ்ட் வெச்சாலும் பெயில்தான்=====================
11  பொங்கல் ரேஸில் குதித்தது சத்யராஜின் 'கலவரம்'! # இருக்கற நிலவரம் தெரியாம களம் இறங்கிடுச்சு போல கலவரம்
=======================12  மீனவர்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன் # எல்லாரும் சுடு மாறன் கள் ஆகிடுவாங்ளே?========================13 கூட்டணி குறித்து தேமுதிக தான் முடிவெடுக்க வேண்டும்: ஸ்டாலின் # எப்டி இருந்த நான் இப்டி ஆகிட்டேன்========================


14  பணம் பெற்று வாக்களிக்க வேண்டாம்: ராமதாஸ் # அய்யா.செக்காவோ ,டி டி யாவோ வாங்கினா அது ஒரு ஆதாரமா ஆகிடுமே========================15  வெற்றி, தோல்வி கருதாமல் நாட்டு மக்களுக்கு உழைக்கும் கட்சி திமுக: மு.க.ஸ்டாலின்" # காமெடியில் கலக்கப்போவது யாரு? தளபதியா? தமிழ் இனத்தலைவரா?========================16   நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு அதிக வெற்றி வாய்ப்பு:- கனிமொழி # பிறந்த நாள் அன்னைக்காவது உண்மையைப்பேசுங்க மேடம்===========================17  பத்து தொகுதிகள் லட்சியம்...எட்டுத் தொகுதிகள் நிச்சயம் : வைகோ # 1 ஜெயிச்சாலே ஒளி மயம்.2 ஜெயிச்சுட்டா ஜோதிமயம்========================18  மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - டாக்டர் ராமதாஸ் பேச்சு..# அய்யா.அதுனால தான் வாரா வாரம் வெள்ளிக்கிழமை படம் மாத்திடறாங்க===========================19   விஜயகாந்த்தை அரசியல் தலைவராக நான் மதிக்கவில்லை-மு.க.அழகிரி # நீங்க மதிக்கல.உங்க தம்பி மதிக்கறாரு.மதுரை கலைப்புக்கே அதான் காரணம்===========================20 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஜெ.-மு.க.ஸ்டாலின்# நம்ப வெச்சு கழுத்தறுப்பதில் திமுக தான் முன்னிலை.=======================21 தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும்: சு சுவாமி# கூட்டமாப்போனாலே படம் ஓட்ட முடியாதுனு சொல்ற ஆபரேட்டர் கிட்டே தனியாப்போய் ?==========================


0 comments: