Tuesday, February 18, 2014

இழுக்க இழுக்க இன்பம் தருவது இதானா? ஈஸ்வரா!

1, வங்கிகள் 2 நாள் வேலை நிறுத்தம்: நாட்டுக்கு ரூ.30,000 கோடி இழப்பு # ஊழியர்கள் சம்பளத்தில் பிடிங்க==================
2 விஜயகாந்த் 400 கோடி கேட்கிறார் வைகோ பரபரப்பு புகார்-செய்தி # கூந்தல் உள்ள மகராசி அள்ளி முடிவா.நமக்கு ஏன் இந்த அங்கலாய்ப்பு?

======================3 ஒட்டு மொத்த தமிழ் பெண்களுக்காக பா.ம.க. குரல் கொடுக்கிறது: ராமதாஸ்..# ஒல்லியா இருக்கும் பொண்ணுங்களுக்கு குரல் கொடுக்க மாட்டீங்களா அய்யா?
===================
4 3-வது அணி என்பது காங்கிரசை காப்பாற்றும் வேலை: நரேந்திரமோடி பேச்சு.# காங் எதிர்ப்பு ஓட்டுக்களை காங் க்கு சாதகமாக பிரிக்கும் ராஜ தந்திரம்
==================

5 நேர்மையான அதிகாரிகளை சாதாரண தவறுகளுக்காக துன்புறுத்தக்கூடாது: பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு# ஸ்பெசல் தவறு ன்னா 1 3/4 லட்சம் கோடி ஊழல்?

===================
6 ஒபாமாவுக்கும் பாப் பாடகிக்கும் தொடர்பு? # ஏ பாப் பா நீ கொஞ்சம் நில்லு .எத்தனை நாளா இந்த கனெக்சன் சொல்லு

===================
7 கருப்புபணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுப் படை அமைக்கப்படும் - மோடி # கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியாது.ஒளிப்பதைத்தடுக்க முடியாது
=============================8 டாப்சிக்கு ஒ.கே சொல்லிவிட்டு கழற்றி விட்ட ஆர்யா # காதல் இளவரசன் ஆர்யா ,கரெக்ட் பண்ண பிகர்கள் எண்ணிக்கையும் ஆறுய்யா============================9 விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் ஜிகே வாசன்# என்னமோ ஷங்கர் + ரஜினி காம்போ ரிலீஸ் மாதிரி பில்டப் தராரே?==============================


10 ரஜினியின் கோச்சடையானுடன் மோதும் விஷாலின் நான் சிகப்பு மனிதன் # ஓப்பனிங் ல ரஜினி கலக்கிடுவார்.அதுக்கு அப்புறம் விஷால் தான் வின்னர்
==========================11 மோடியுடன் ஒரு கப் டீ... +அகமதாபாத்தில் இன்று அதிரடி தொடக்கம்.. 1000 டீக் கடைகளில் ஒளிபரப்பு # அரசியல் டீவிரதவாதி==========================


12 நடிகை நமீதாவை தங்கள் பக்கம் இழுக்க போட்டி போடும் கட்சிகள் # இழுக்க இழுக்க இன்பம் தருவது இதானா? ஈஸ்வரா!
=========================13 பாக். தியேட்டடில் குண்டுவெடிப்பு: ‘பலான’படம் பார்க்க வந்த 10 பேர்் பலி # சொர்க்கம் பாக்க வந்தவங்க சொர்க்கத்துக்கே போய்ட்டாங்க அடடே!==========================


14 திமுக - காங் கூட்டணியை மக்கள் ஏற்பார்கள் - திருமா.# ஏகப்பட்ட.வாக்குகள் வித்தியாசத்தில் தோற்பார்கள்========================15 பாராளுமன்றத்தில் ரகளை: என் இதயத்தில் ரத்தம் கசிந்து விட்டது- மன்மோகன்சிங்். # அப்போ தீவிர சிகிச்சை தேவைப்படும்.ராஜினாமா செஞ்சு ஓய்வெடுங்க
==========================


16 வடமாநில மக்களும் ஜெ பிரதமராக விரும்புகிறார்கள்: செல்லூர் ராஜூ பேச்சு.# ஜெயப்ரதாவை சொல்லி இருப்பாங்களோ?
=============================17 ரித்திஷ் எம்பி விளக்கம்: உள்கட்சி தேர்தலை நடத்தாவிட்டால் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.# நடத்துனா குடும்பத்துல குழப்பம் வரும்.
=====================================
18 காதலர் தினத்தில் காதல் ஜோடிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்: போலீஸ் நிலையத்தில் மாணவர்கள் மனு.# ஏய்யா நீங்க கில்மா பண்ண காவல் துறை காவல்?
===================================


19 ராமாயணம் படத்தில் சீதையாக நயன் நடித்தார். காதலர் தினத்தில் காதலுக்கே கவுரம் ( கவுரவங்கள்?) சேர்த்த நயன் ன் படம் ரிலீஸ் # நகை முரண்
===========================20 மணி ரத்னம் ,பாலா இணைகிறார்கள் - செய்தி # மணி - ஹீரோயினை அழகா காட்டனும் . பாலா - சரி உங்க விருப்பம்.ஆனா ஹீரோ வுக்கு மொட்டை அடிச்சுடனும்
===========================

0 comments: