Sunday, February 09, 2014

அய்யய்யோ.பிஸ்கோத்து மேட்டர் இது னு அசால்ட்டா விட முடியாதே?

1. தோழி நயன்தாராவுடன் த்ரிஷா பார்ட்டியோ பார்ட்டி # சக்களத்தி சண்டை போடுவாங்கனு எதிர்பார்த்தேன்.சுமூக உடன்படிக்கை ஏற்பட்டுடுச்சு போல=======================2  என் தொண்டர்கள் 10 கிமீ என்றாலும் நடந்து வருவார்கள் - கேப்டன் # அவங்க என்ன அஜித் ரசிகர்களா?,அசராம நடக்க?


=======================


3 அடிச்சுச்சொல்றேன்.2016ல் நான் சி எம் ஆவேன் - கேப்டன் # அப்போக்கூட அடிக்கறதை மறக்கலை


=======================


4  நா மாத்தி மாத்தி பேசுவேன், நீங்க கோர்வையா போட்டுக்கோங்க.- கேப்டன் # நீங்க கோர்வையாப்பேசுனாலே நம்மாளுங்க மாத்தி மாத்தித்தான் போடுவாங்க=======================


5 கேப்டனின் முடிவை நாடே எதிர்பார்க்கிறது! - பிரேமலதா # பூணம் பாண்டே ஸ்டேட்டஸைக்கூட ட்விட்டர்ல நாடே பாக்குது.அதுக்கு?========================


6 நீருக்கு அடியில் திருமணம்: கின்னஸ் சாதனை படைத்த 'டைவிங்' தம்பதி # நல்ல வேளை .கல்யாணமுகூர்த்தம் மட்டும் தண்ணிக்கடில வெச்சாங்க
==========================7 ஆண்ட்ரியா - சிம்பு போன் நெம்பர் என் கிட்டே இல்லை. # அவர் போனே உங்க கிட்டே தான் இருக்காம்.நேத்து வீட்ல வெச்ட்டு போய்ட்டாராம்


======================


8 த்ரிஷயம் ரீமேக்கில் நடிக்க மறுத்த ரஜினி, ஓகே சொன்ன கமல் # கோச்சடையான் ரிலீஸ் ஆகட்டும்னு சொன்னதை திரிச்சி போட்டுட்டாங்க போல=======================


9   அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் ஜெ. பிரதமராவார்: ஏ.பி. பரதன் நம்பிக்கை # இது வாழ்த்தா ? எச்சரிக்கையா?========================


10  உண்மையை வெளிக்கொண்டுவர ரகசிய கேமரா பதிவு தவறல்ல: -அரசு # ஆமாங்க, வீடியோ கேமரான்னு இன்னும் நல்லது===========================11 புகார் மனுக்களை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக பெற வேண்டாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு # கொல்லைப்பக்கமாப்போய் வாங்கிக்கனுமா?==========================12 காங்., கூட்டணிக்கு கருணாநிதி நிபந்தனை  # பார்த்த 18 பொண்ணும் சரி வர்லைன்னா முதல்ல பார்த்த பொண்ணையே  ஓக்கே சொல்லிடுவார் மாப்ளை=======================13 ஜெ வின் பிரதமர் ஆசையை முறியடிக்க வேண்டும்: - ஸ்டாலின்  # அண்ணன் சி எம் ஆகக்கூடாது , அம்மா பி எம் ஆகக்கூடாது, ஆஹா! என்ன உயர்ந்த உள்ளம்===========================14 உளூந்தூர்ப்பேட்டை மாநாட்டில் ஜெ குறித்து அவதூறு பேச்சு: விஜயகாந்த் மீது வழக்கு-# வா மச்சி வா வண்ணாரப்பேட்டை.போ உள்ளே போ பாளையங்கோட்டை=======================15 கோதுமைக்கு வரி இல்லை. அரிசிக்கு சேவை வரி - மத்திய அரசு # தமிழனுக்கு சுகர் வரக்கூடாதுன்னு எவ்ளவ் அக்கறைனு அடிச்சு விடுவாங்களோ?===========================16  பிஸ்கெட் சாப்பிடுவது உடல் நலத்துக்கு கேடு: புதிய ஆய்வில் தகவல்.# அய்யய்யோ.பிஸ்கோத்து மேட்டர் இது னு அசால்ட்டா விட முடியாதே?========================17 சட்டமன்றத்தில் எதிர்கட்சியினரை ஜெ.பேசவிடுவதில்லை ஸ்டாலின் குற்றச்சாட்டு #ஒன் கரெக்சன் யுவர் ஆனர்.எந்தக்கட்சியினரையும் பேச விடுவதில்லை=====================18 சேலத்தில் பிளஸ்–2 மாணவியிடம் ‘சில்மிஷம்’: பள்ளி நிர்வாகிக்கு பெண்கள் செருப்படி # ஹை ஹீல்ஸ் அடி வேற .செத்தாண்டா சேகரு==========================


19  தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது தவறு:ராகுல் காந்தி! #மேரேஜ் க்கு முன்பே கல்யாண மண்டபம் எது?னு சொல்லனும்ணா!==========================20 தேமுதிக வந்தாலும் இனி சேர்த்துக்கொள்ள மாட்டோம் -பா ஜ க # 19 ஒரு தரம் 18 ரெண்டு தரம் 17 ,,,,,, -கேப்டன்=============================

0 comments: