Tuesday, February 11, 2014

அக்கடான்னு நாங்க சரக்கடிச்சா துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா

1. 2009ல் கைதான விபச்சார வழக்கு... புவனேஸ்வரிக்கு ரூ. 3000 'ஃபைன்'! # அஞ்சு வருசம்.ஒரு ஆட்சியே நடந்து முடிஞ்சாலும் வழக்கு முடியாது போல====================


2 நஸ்ரியா என் தங்கச்சி மாதிரி: சொல்கிறார் மம்மூட்டி மகன் # பாஸ்! அப்போ டூயட் ,கிஸ் சீன் ல நடிக்கும்போது சங்கடமா இருக்காது?


=====================


3 ஜாக்கிசான் ன் போலீஸ் ஸ்டோரி பாகம் 6 சீனாவில் மட்டும் 400 கோடி வசூல் - செய்தி # ஜில்லா ரேஞ்ச்க்கு இருக்கும் போலயே========================


4 டெல்லியை விட தமிழ்நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு! - நத்தம் விஸ்வநாதன் # நல்ல வேளை.ரேப் க்ரைம் ரேட்டிங் ஒப்பீடு செய்யல==========================


5 காளி அம்மனுக்கு பூஜை போட்டாலும் நம்ம தலை எழுத்து சரி இல்லைன்னா நாம காலி ஆகிடுவோம்.விதி நல்லாருந்தா ஜாலி ஆவோம்


======================


6 : ஏப்ரல் 11 கோச்சடையான் வெளியீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு # 11 4 2014 =கூட்டுத்தொகை 4 வருது .ரஜினி =3 கோச்சடையான் =6 மேட்ச் ஆகலையே?==========================


7 எதிர்க்கட்சிகளின் வீழ்ச்சிக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே காரணம்: ஜெ# எலிக்கு மரண வலியாம்.பூனைக்கு கொண்டாட்டமாம்=======================8 காரைக்குடியில் தமிழ் அமைப்புகள் நடத்திய தமிழ்விழா # கேப்டனைக்கூப்பிடலையா? அவரும் தமிழ்க்குடி மகன் தானே?


======================


9 விஜய் - முருகதாஸ் காம்ப்போ படம் கொல் கத்தா வில் இன்று படப்பிடிப்பு துவக்கம் # இதுல ஒரு குறியீடு இருக்கு.புரிஞ்சவங்க சிரிச்சுக்கலாம்=======================10  எங்களின் வாக்கு வங்கி "சுருங்கி"விட்டது - பீட்டர் அல்போன்ஸ் # முருங்கைக்காய் சாம்பார் சாப்ட்டுப்பாருங்க.பெரிய மாற்றம் கிடைக்கும்=======================


11  ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ஜெட்லி கண்டனம் # ஜெட்லிக்கு தமிழ் தெரியுமா? ஓ.இது வேற ஜெட்லியா


======================12  ஹன்சிகா பிறந்தநாளுக்கு சிம்பு அரண்மனை வடிவில் பெரிய கேக் கொடுத்தார், சிம்பு பிநாளுக்கு ஹன்சிகா சின்ன கேக் தான் கொடுத்தார் # நீதி -ஹிஹி


========================


13 அழகிரி மூலம் மு.க. ஸ்டாலினுக்கு ஆபத்து: -ஜெ # எதிர்க்கட்சி 2 பட்டா ஆளுங்கட்சிக்கு கொண்டாட்டம்


==========================14  சம்பளமே வாங்காமல் தனுஷ் படத்தில் நடனமாடினார் சிவகார்த்திக்கேயன் # இந்தியப்பொருளாதாரமே இதனால் உயர்ந்து சென் செக்ஸ் 1000 புள்ளி உயர்வு
======================


15 திருச்சி மாநாடு கட்சிக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் - கலைஞர் # தலைவா! நேர் வழி ல போனா திருப்பு முனையே வராது,ஹி ஹி=====================


16 தேமுதிகதான் அடுத்து ஆட்சியில் உட்காரப்போகிறது! - விஜயகாந்த் # அக்கடான்னு நாங்க சரக்கடிச்சா துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா .=======================17   பாஜக கூட்டணியில் விஜயகாந்த் சேரவேண்டும்! - எஸ்.வி.சேகர் # தாமரைப்பூவுக்கும் ,தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல.மாமனை அள்ளி நீ========================18 இளைஞர்களைக் கெடுக்கவேண்டுமென்பதற்காக டாஸ்மாக் கடைகளை திறந்துவைக்கிறார்கள்! - கேப்டன் # ராம்தாஸ் கூட கூட்டணி போல?==========================


19  பாஜகவிற்காக இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்வேன்! - எஸ்.வி.சேகர் # ஓ சி ல ஆல் இந்தியா டூர் .அடிச்சு விடுங்க=======================20  இளைஞர் படை இருக்கும்போது என்னால் நாட்டை சுத்தப்படுத்தமுடியும்! - விஜயகாந்த் # சுத்தப்படுத்த விளக்குமாறு கூட கூட்டு.ஆம் ஆத்மி.சிக்னல்=====================


 21  நாட்டை நல்ல வழியில் நடத்திச்செல்லுங்கள் என்றுதான் கேட்கிறேன்! - விஜயகாந்த் # சாலை ஓரம் டாஸ்மாக் இருந்தாலே அது நல்ல வழிதான் கறாரா?============================

22   மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்! - பிரேமலதா # நுட்பமா படிக்கனும்." கலந்து" கொண்ட னர் . செம சரக்கு போல


===========================23   இனி போலீசாக நடிக்கமாட்டேன்! - விஜயகாந்த் # அரசியல் வாதி ஆகிட்டாலே போலீசைப்பிடிக்காதோ ?


=======================

 24  நான் மோடியின் கொள்கை பரப்பு செயலாளரோ, ஜெ விின் ஆலோசகரோ அல்ல: சோ # நல்லவேளை .துக்ளக் ஆசிரியர் நான் இல்லைனு சொல்லல


======================


25  பாலா படம் - 12 பாடல்களை பதிவு செய்த இளையராஜா - # படம் ரிலீஸ் ஆனதும் ட்ரிம்மிங் கற பேர்ல 6 பாட்டு எப்டியும் கட் பண்றது தானேவழக்கம்?======================


26  மக்களுடனே கூட்டணி அமைப்போம்.- ஸ்டாலின் # ஆனா சொந்த அண்ணனை விரட்டி விடுவோம்.தமிழேண்டா


==============================
0 comments: