Sunday, February 16, 2014

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா -மக்கள் கருத்து


புதுடில்லி:'வி.வி.ஐ.பி.,கள் பயணிப்பதற்கான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை, இந்தியாவிடமிருந்து பெறுவதற்கு, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சரிகட்ட வேண்டும்' என, இடைத்தரகர் ஒருவர், ஹெலிகாப்டர் நிறுவன அதிகாரியிடம் தெரிவித்ததாக வெளியாகியுள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜனாதிபதி, பிரதமர் போன்ற, வி.வி.ஐ.பி.,கள் பயணிக்க, அதிநவீன சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட, ஹெலிகாப்டர்கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது. 2010ல் ஒப்பந்தம்:இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற, ஹெலிகாப்டர் நிறுவனத்திடம், 12 ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்ய, 2010ல், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தம், 3,600 கோடி ரூபாய் மதிப்பிலானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரண்டு ஹெலிகாப் டர்கள், ஏற்கனவே நம் நாட்டிற்கு வந்து சேர்ந்து விட்டன. பத்து ஹெலிகாப்டர்கள் வரவிருந்த நிலையில், இதில், ஏராளமான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அம்பலமானது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இத்தாலி நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு, 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.விமானப் படை முன்னாள் தளபதி, தியாகி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்து 
செய்யப்பட்டுள்ளது.
அதிகாரி கைது: இத்தாலி போலீசாரும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை கைது செய்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை, மத்திய அரசிடமிருந்து, அந்த நிறுவனத்துக்கு பெற்றுத் தருவதற்காக, இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிறிஸ்டியன் மைக்கேல் என்ற இடைத்தரகர், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்தின், இந்தியஅலுவலகத்தில் பணியாற்றிய, பீட்டர் புல்லெட் என்பவருக்கு, ஒப்பந்த விவகாரங்கள் நடந்தபோது, முக்கியமான, 'பேக்ஸ்' ஒன்றை அனுப்பியுள்ளார்.


அதில், 'இந்தியாவிடமிருந்து, ஒப்பந்தத்தை பெறுவதற்கு, காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல், இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய, மத்திய அமைச்சருமான பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், மேற்கு வங்க கவர்னர், எம்.கே.நாராயணன், வினய் சிங் என்பவர் உள்ளிட்டோரை அணுகலாம்' என, தெரிவித்துள்ளார்.'டிவி'க்களில் வெளியானது: 
ஆனால், இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு, கமிஷன் கொடுக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள், அதில் இடம்பெறவில்லை. இந்த, பேக்ஸின் நகலை, இத்தாலி போலீசார் கைப்பற்றி, அங்குள்ள கோர்ட்டில், கடந்த மாதம் தாக்கல் செய்துள்ளனர்.இதையடுத்தே, இந்த தகவல், வெளிஉலகிற்கு தெரிய வந்துள்ளது. இதன் நகலை, இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இந்திய அதிகாரிகளிடம், இத்தாலி போலீசார் சமீபத்தில் கொடுத்துள்ளனர்.இந்த விவகாரம் நேற்று, நம் நாட்டின், ஆங்கில செய்தி,'டிவி'க்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நம் அரசியல் தலைவர்களை சிறுமைப்படுத்தும் விதத்தில், இத்தாலி தரகர் எழுதிய குறிப்பு, அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.'பார்லி.,யில் இருக்கு கச்சேரி':
இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறியதாவது:நாட்டையே உலுக்கிய, 'போபர்ஸ்' பீரங்கி பேர ஊழல் போல், ஹெலிகாப்டர் ஊழலும் நடந்துள்ளது. ஒப்பந்தத்தை பெறுவதற்காக, இந்தியாவில் உள்ளவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி தரகர் தெரிவித்த தகவலில், இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரச்னையை பார்லிமென்டில் எழுப்புவோம். இது குறித்த முழு உண்மைகளை அறியாமல் விட மாட்டோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\

\\
THNX - DINAMALAR

மக்கள் கருத்து 

இது எல்லாம் எவ்வுளவு தூரம் நம்பக தன்மை வாய்ந்த குற்றசாட்டுகள் என்பது தெரியவில்லை, யார் வேண்டுமானாலும் சோனியா காந்தி மற்றும் பிரதமரின் பெயரை யூகத்தின் அடிப்படையில் அவர்களிடம் சென்றால் வேலை முடியும் என்று சொல்லலாம் ஆனால் அவர்கள் லஞ்சம் வாங்கினார்களா என்பது தான் முக்கியம், அவர்கள் லஞ்சம் வாங்கவில்லை என்றால் இதை பிரச்சனை ஆக்குவது தவறு ஆனால் இன்றை அரசியலில் ஒருவர் மீது மீது ஒருவர் வாரி இறைக்கும் சேற்றில் இம்மாதிரியான விஷங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்ள பார்ப்பார்களே ஒழிய உண்மை இருக்கிறதா என்று பார்க்க மாட்டார்கள். இதற்க்கு காங்கிரஸ் கட்சியும் சரி பிஜேபியும் சரி விதி விளக்கு அல்ல. காங்கிரஸ் கட்சி மோடிக்கு எதிராக குஜராத் கலவரத்தை வைத்து பொறுப்பிலாமல் பிரச்சாரம் செய்கிறார்கள் அதேபோல் பிஜேபி இம்மாதிரி செய்கிறார்கள். இது அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பக தன்மையை குறைத்துவிடும் என்பது யாருக்கும் புரியவில்லை
Rate this:
1 members
members
members
Share this comment

rajen.tnl - tirunelveli,இந்தியா
03-பிப்-201409:11:16 IST Report Abuse
rajen.tnl
சோனியாவின் சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சோனியாவின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலராக இருக்கக் கூடும் என்றும் சில இணையதளங்களை மேற்கோள் காட்டி அது பதிவு செய்திருக்கிறது...உலகின் 4 வது பணக்காரர் சோனியா ,,அவர் என்ன தொழில் பண்ணுகிறார் ..இந்தியாவை அழித்தால் தான் பணக்காரர் ஆக முடியும் .......
Rate this:
0 members
members
members
Share this comment

PR Makudeswaran - madras,இந்தியா
03-பிப்-201408:29:21 IST Report Abuse
PR Makudeswaran
அப்படிஎன்றால் ப சி,, சிபல் அந்தோணி இவர்களுக்கெல்லாம் பங்கு இல்லையா?அல்லது குறைவான பங்கு போகுமா? இனியாவது நம் மக்கள் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தனி மனித துதி பாடுபவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உண்டா?
Rate this:
0 members
members
20 members
Share this comment

Rathinasami Kittapa - ambur,இந்தியா
03-பிப்-201409:15:14 IST Report Abuse
Rathinasami Kittapa
ஊழல் நடந்துள்ளது நிரூபணமாகியுள்ளது என்றெல்லாம் பேசி என்ன பயன்? யாருக்காவது இக்குற்றத்திற்காக punishment கிடைக்குமா? எல்லாமே வீண்.நம் நாட்டின் பெயர் மென்மேலும் கெட்டு , இந்தியர் என்றாலே ஊழல் பெருச்சாளிகள் என்ற பெயர் சொல்லுமளவுக்குப் போய்விட்டதே.எப்படி,எப்போது எவ்வாறு நற்பெயர் எடுக்கப் போகிறோம்? Software மற்றும் பல தொழில் நுட்பங்களில் முன்னேறினாலும் ஊழல் என்ற சொல் இந்தியருக்குப் பெரும் அவமானம். இதன் பெருமையெல்லாம் கான்'கிராஸ் கட்சியையே சாரும்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
03-பிப்-201408:16:39 IST Report Abuse
T.R.Radhakrishnan
இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்று சொல்லி தப்பிக்க காங்கிரஸ் முயலும்......ஆனாலும், யாரை 'கவனித்தால்' காரியம் சாதகமாகும் என்று உலகம் முழுவதும் உள்ள தரகர்களுக்கும் தெரிந்திருக்கு.....சோனியாவின் செயலாளர் அகமது படேலை கொஞ்ச நாள் 'வாட்ச்' பண்ணினால் இன்னும் பல ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும்....
Rate this:
0 members
members
20 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201408:01:47 IST Report Abuse
villupuram jeevithan
என்னையும் என் அரசையும் வழி நடத்துபவர் கருணா என்று மனமோகன் சொல்லியிருக்கிறாரே , அவருக்கும் பங்கு இருக்குமா ?
Rate this:
0 members
members
18 members
Share this comment

மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
03-பிப்-201407:44:25 IST Report Abuse
மதுரை விருமாண்டி
"பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா கூறியதாவது:நாட்டையே உலுக்கிய, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் போல், ஹெலிகாப்டர் ஊழலும் நடந்துள்ளது." - அது சரி, பீரங்கி ஊழலில் பாஜக ஆட்சியில் என்ன ஆணி பிடுங்கினார்கள்? அரசியல் ஆதாயத்தை தவிர ஒரு ஆணியும் பிடுங்க மாட்டார்கள் இந்த போலி தேச ப (க்) தர்கள்
Rate this:
17 members
members
members
Share this comment

sunil - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-பிப்-201409:36:22 IST Report Abuse
sunil
போட்டு தாக்கு........ போட்டு தாக்கு ..........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201407:42:13 IST Report Abuse
villupuram jeevithan
இதெல்லாம் சுத்த பொய் , கெஜரிவால் பலிஸ்டில் இவர்கள் பெயர்கள் இடம் பெறவில்லையே ?
Rate this:
2 members
members
11 members
Share this comment

Kulasekar Erk - sunnyvale,யூ.எஸ்.ஏ
03-பிப்-201407:08:54 IST Report Abuse
Kulasekar Erk
போபர்ஸ் ஊழல் புகழ் கட்சியின் தலைமை தீர்மானிக்க வேண்டியதை இத்தாலி இடைத்தரகர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்பதை நோக்கித்தான் கேவலம் இந்த பிசாத்து 3500 கோடி ஹெலிகாப்டர் ஊழலும் நகரும் போல் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஊழல் செய்து கோடானகோடி சம்பாதித்த இத்தாலி புகழ் குடும்பமும் 2G அலைக்கற்றை விஞ்ஞானமுறைப்படி ஊழல் புகழ் குடும்பங்களும் எப்போதாவது நமது சட்டத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ன, நம்மால் முடிந்தது ஒதுங்கிப்போக வேண்டியத்தான் வாக்காளர்கள் சிந்தித்துச் செயல்படும் நேரம் நெருங்குகிறது
Rate this:
0 members
members
13 members
Share this comment

Sundeli Siththar - hyderabad,இந்தியா
03-பிப்-201407:07:33 IST Report Abuse
Sundeli Siththar
இப்படித்தான் முழு உண்மையும் தெரிவிக்கணும் என்று பாஜக கேட்கிறது... ஒரு ஊழலுக்காவது உண்மை வெளியே வந்துள்ளதா என்ன...மக்கள்தான் முட்டாள்கள்.
Rate this:
0 members
members
members
Share this comment

P. Kannan - bodinayakkanur,இந்தியா
03-பிப்-201407:07:26 IST Report Abuse
P. Kannan
காங்கிரசில் இருப்பவர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு ஆப்பை எடுத்து அவர்களாகவே சொருக்கி கொள்கிறார்கள், அடுத்தவர்களுக்கு சிரமம் வைக்காமல். ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்களே.
Rate this:
0 members
members
12 members
Share this comment

jay - toronto,கனடா
03-பிப்-201407:04:50 IST Report Abuse
jay
என்ன பண்ணுவது . இதுகளை வாக்களித்து பதவி யில் வைத்த மக்களை என்ன பண்ணுவது ,அப்புறம் இந்தியா ஏன் இன்னமும் ஏழைநாடா இருக்கு என்று பிள்ளைகள் கேட்பார்கள்
Rate this:
0 members
members
10 members
Share this comment

P. Kannan - bodinayakkanur,இந்தியா
03-பிப்-201407:04:24 IST Report Abuse
P. Kannan
அன்னை,மகன்,மருமகன் எல்லாமே பூஜ்யம் தானா, அப்போ காங்கிரசு பெயிலு. ரொம்ப நாளாவே சுருட்டுரீங்க அம்மா. இனி இந்த நாட்டை விட்டு போனாலும் நிம்மதியா வாழ்வை நடத்தலாம். சூப்பர் மேடம்.
Rate this:
0 members
members
11 members
Share this comment

Thangairaja - tcmtnland,இந்தியா
03-பிப்-201406:53:57 IST Report Abuse
Thangairaja
என்னமோ லஞ்சம் கொடுக்கும் போது கையும் களவுமா பிடிச்ச மாதிரித்தான் செய்தி. ஒரு பிரச்சினை தீர அது சம்பந்தப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டால் காரியம் நடக்க வாய்ப்புண்டு என்பது சாமானி மக்களுக்கும் பொருந்தக்கூடியதே. அரசு காரியம் என்றால் ஆளும் கட்சியினரைத்தானே தொடர்பு கொள்ள வேண்டும்.
Rate this:
21 members
members
members
Share this comment

மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:43:03 IST Report Abuse
மிஷன் 272 PLUS
ஜனாதிபதி, பிரதமர், சோனியா முதல், காங்கிரசின் அடிமட்ட உறுப்பினர் நம்ம சுப்புரமணி வரை ஊழல் பெருச்சாளிகள் தான் போல.... எவனையும் நம்பமுடியல... சுப்புணி சார் உங்களுக்கு எவ்வளவு கிடைச்சுது...அதை மறைக்கத்தான் விடுதலை புலி, சாம்பார் புளின்னு பீலா விடுறீங்களா...
Rate this:
0 members
members
25 members
Share this comment

சூனா பானா - kaabool,ஆப்கானிஸ்தான்
03-பிப்-201407:40:37 IST Report Abuse
சூனா பானா
காங்கிரெஸ் இல் இருக்கும் ஒரே தொண்டனான சுப்புணி , இது போன்ற செய்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வர மாட்டார், ஓடி போய் பங்கர் இல் பதுங்கி கொள்வார் ....
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201409:30:38 IST Report Abuse
Pannadai Pandian
நவ மயத்தை மறந்து விட்டீர்களே சூனா பானா...
Rate this:
0 members
0 members
8 members
Share this comment

Arv Sekar - riyadh,சவுதி அரேபியா
03-பிப்-201406:28:37 IST Report Abuse
Arv Sekar
எப்ப இந்தியன் இந்தியனை நேசிக்கிறானோ அப்பா இந்த இத்தாலி கொள்ளகூட்டம் கூண்டுக்குள்ள போய்டும்
Rate this:
0 members
members
17 members
Share this comment

Arv Sekar - riyadh,சவுதி அரேபியா
03-பிப்-201406:25:19 IST Report Abuse
Arv Sekar
சோனியாவின் அடிவருடி கருணாநிதிக்கும் இதுல பங்கு இருக்கும் எதுக்கும் அவரையும் கொஞ்சம் சோதனை போடுங்களேன்
Rate this:
2 members
members
14 members
Share this comment

rajen.tnl - tirunelveli,இந்தியா
03-பிப்-201409:08:22 IST Report Abuse
rajen.tnl
எங்க தலைவர் மிது என்னா பொறாமை ........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

ரகுவம்சம் - thiruporur,இந்தியா
03-பிப்-201406:16:29 IST Report Abuse
ரகுவம்சம்
இத்தாலி அம்மையார் இனி இந்தியாவை விட்டு ஓடும் காலம் அருகில் மிக அருகில்.
Rate this:
1 members
members
19 members
Share this comment

vaaithaa vampan - mannargudi ,இந்தியா
03-பிப்-201407:19:22 IST Report Abuse
vaaithaa vampan
நிச்சயம் இது ஒரு நாள் நடக்கும் கொத்தடிமை நவமயம் எங்க கொண்டி மூஞ்ச வச்சுக்குமோ தெரியாது.........
Rate this:
0 members
0 members
7 members
Share this comment

g.s,rajan - chennai ,இந்தியா
03-பிப்-201406:10:21 IST Report Abuse
g.s,rajan
நீலச்சாயம் வெளுத்துப்போச்சு ஜி.எஸ்.ராஜன்சென்னை .
Rate this:
0 members
members
members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201408:49:51 IST Report Abuse
villupuram jeevithan
மஞ்ச சாயம் ஏற்கனவே வெளுத்து போச்சு...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

N.Purush Bharatwaj - cuddalore,இந்தியா
03-பிப்-201405:47:54 IST Report Abuse
N.Purush Bharatwaj
பிரணாப் நல்ல மனுஷன்யா.....அவரை போய் இதில இழுத்து விட்டுட்டானுங்க.....மத்தவர்களை கண்டிப்பாக சந்தேகிக்கலாம்...அப்போ இதுக்கு முன்னாடி போபர்ஸ் புகழ் கோட்றோச்சி,யூனியன் கார்பைடு ஆண்டர்சன் எல்லாம் இவர்களை தாஜா செய்து இப்படி தான் தப்பிச்சாங்க என்கிற சந்தேகம் வலு பெற்றுள்ளது...
Rate this:
5 members
members
members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201406:10:13 IST Report Abuse
Pannadai Pandian
நீங்க சர்டிபிகேட் அதாரிட்டி இல்லை சர்டிபிகேட் கொடுக்காதீங்க....
Rate this:
1 members
0 members
5 members
Share this comment

மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:36:18 IST Report Abuse
மிஷன் 272 PLUS
Purush பிரணாப் மற்றும், மண்ணு சிங்கும்... நல்லவர்கள் என்ற போர்வையில் உலாவரும் உலகமகா திருடர்கள்... அவர்களுக்கு வக்காலத்து வாங்கவேண்டாம்... காங்கிரஸ் ரத்தம் ஓடும் எவனையும் நம்ப தேவை இல்லை....இது காங்கிரசுடன் கூட்டு வைத்திருக்கும் மற்றும் காங்கிரஸ் கூட்டு வைத்திருக்கும் கட்சிகளும் அடக்கம்......
Rate this:
1 members
0 members
14 members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201407:51:10 IST Report Abuse
Pannadai Pandian
புருஷ்....நம் ஜனாதிபதியின் உயரத்தை கவனித்தீர்களா ??? கள்ளணை நம்பினாலும் .....................
Rate this:
1 members
0 members
7 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201408:52:40 IST Report Abuse
villupuram jeevithan
பிரணாப் தன மகனையும் மகளையும் அரசியலில் நுழைக்கும் போதே தெரியும் அவர் எப்படிப் பட்டவர் என்று ? பாவம் இப்ப்ச்டி அப்பாவியாக எல்லாத்தையும் நம்புகிரீரெ...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment

நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
03-பிப்-201409:39:42 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான்
PRANAB IS A BRAHMIN...THEY WON'T INVOLVE IN CORRUPTION...AM I CORRECT MR.PURUSH SIR?...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment

Ganapathysubramanian Gopinathan - bangalore,இந்தியா
03-பிப்-201405:37:14 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan
இந்தியாவின் சிறு குழந்தைக்கும் கூட இந்த உண்மை தெரியுமே
Rate this:
0 members
members
11 members
Share this comment

Pannadai Pandian - wuxi,சீனா
03-பிப்-201405:31:43 IST Report Abuse
Pannadai Pandian
பாருங்கடா.....வெளிநாட்டுக்காரனுக்கு கூட நல்லா தெரிஞ்சிருக்கு யார் யாருக்கு மொய் அழுதா காரியம் நடக்கும்ன்னு. ஊழல் தலைவர்களின் லிஸ்ட்டையே கொடுத்திருக்கான். இந்த நாட்டை பிடித்திருக்கும் காங்கிரஸ் பேயை சீக்கிரம் விரட்ட வேண்டும். நேரு குடும்பத்தில் நுழைந்த அனகோண்டா இன்று நாட்டையே விழுங்குகிறது. நாட்டை பற்றி இந்த அனகொண்டாவுக்கு கவலை இல்லை. அதை பற்றி கவலை பட வேண்டியது ஒவ்வொரு இந்தியனும் தான். இந்த நாடு இருந்தால் என்ன சுடுகாடாய் மாறினால் என்ன அவர்களுக்கு. அவர்களே என்னதான் முயன்றாலும் இந்தியாவை நேசிக்க முடியாது. அது ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும். அப்படி நேசித்திருந்தால் இந்திய கலாச்சாரத்துக்கும், இந்து மதத்துக்கும் மாறியிருப்பார்கள். பிள்ளைகள் கிராஸ் கலச்சரை தேடாமல் ஒரு சாத்சாத் இந்தியரை திருமணம் செய்திருப்பார்கள். ராகுல் ஸ்பெயின், கொலம்பியா என்று சுற்ற மாட்டார். மக்கள் தெளிவு பெரும் வரை இவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
Rate this:
1 members
members
25 members
Share this comment

Ramasami Venkatesan - chennai - now in brisbane - aus,இந்தியா
03-பிப்-201405:03:31 IST Report Abuse
Ramasami Venkatesan
பண பரிவர்த்தனை எல்லாமே நேரடியாக வெளிநாட்டு வங்கி அக்கௌன்ட் களில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் அவரவர்களுக்கு உள்ள கணக்குகளில். அப்போ சோனியா காந்தி இன்னமும் நான்-ரெசிடண்ட் ஸ்டேடஸ் தானா. இரு நாடுகளின் பாஸ்போர்டும் உள்ளதா - யார் அறிவார்கள்?
Rate this:
0 members
members
13 members
Share this comment

Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:26:34 IST Report Abuse
Kasimani Baskaran
அம்மாவின் ஊழல், மணிமேகலையின் ஊழல் எல்லாம் இந்த நாட்டில் சாதாரணம். மக்கள் ஆறாவது அறிவில்லாத பகுத்தறிவு பெற்ற அறிவாளிகள். அடிமை தேசத்தில் எது சொன்னாலும் நம்ப மக்கள் தயார்.
Rate this:
0 members
members
11 members
Share this comment

villupuram jeevithan - villupuram,இந்தியா
03-பிப்-201407:43:49 IST Report Abuse
villupuram jeevithan
ஆறாவது அறிவு என்பது ஒன்று இல்லை என்பதே இன்றைய அறிவியல்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
03-பிப்-201403:36:42 IST Report Abuse
தமிழ் சிங்கம்
சோனியா காந்தி ஊழல் செய்வதில் திலகம் போன்றவர். மிகவும் கெட்டிகாரர். தான் செய்த ஊழலை மறைக்க, கனிமொழி மற்றும் ராஜாவின் மீது அபாண்டத்தை சுமத்தியவர். இப்போது மாட்டிகொண்டார். பல நாள் திருடி, ஒரு நாள் அகபடுவாள் என்பதை போன்று அகப்பட்டு விட்டார். இவருக்கு ச்விச்ஸ் வங்கியில் கணக்கு இருந்தும், அதை பற்றி சொன்ன , அத்வானியையே மன்னிப்பு கேட்க வைத்தவர். இப்பேற்பட்ட, ஊழல் திலகி சோனியா, ராஜாவின் மீது குற்றம் சொன்னது, மிக பெரிய தவறு.
Rate this:
13 members
members
members
Share this comment

என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
03-பிப்-201405:36:26 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே
என்னவோ நெருடுதே, அப்போ திமுக, பிஜேபி கூட்டணியா?...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201407:11:06 IST Report Abuse
Kasimani Baskaran
உங்கள் ஊழல் திலகம் முகவை மணிமேகலை திரும்பவும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் இந்த கருத்தை நீங்கள் திரும்ப பெற்றுக்கொள்வீர்களா அல்லது பெயரை மாற்றி விடுவீர்களா?...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

Ramasamy Sooriyanarayanan - hyderabad,இந்தியா
03-பிப்-201409:00:25 IST Report Abuse
Ramasamy Sooriyanarayanan
அப்போ கனி மொழி, ராஜா இருவரும் விரல் வெச்சா கூட கடிக்கதேரியாத பாப்பான்னு சொல்லுறீங்களா நீங்க சப்போர்ட் பண்ணற dmk கட்சிக்காரங்க ஊழலைப்பத்தி ஒண்ணுமே தெரியாதவங்க அவங்க கட்சி நிதியெல்லாம் மெம்பர்கள் கொடுத்ததுன்னு சொல்றீங்க. dmk தான் ஊழலை தொடங்கியவர்கள் அதுக்கப்பறம் தொடங்கிய காங்கிரஸ் அவங்களை தூக்கி சாப்பிட்டுவிட்டார்கள்...
Rate this:
2 members
0 members
2 members
Share this comment

வைகை செல்வன் - சென்னை,இந்தியா
03-பிப்-201403:10:26 IST Report Abuse
வைகை செல்வன்
இந்த லட்சணத்தில் இந்த அம்மையார் ஊழலை பற்றி வேதம் ஓதுகிறது.. ஒழிக்கப்படவேண்டிய விஷ செடி இந்த அம்மையாரும் மற்றும் குடும்பத்தாரும் தான் .
Rate this:
0 members
members
32 members
Share this comment

rajen.tnl - tirunelveli,இந்தியா
03-பிப்-201409:12:57 IST Report Abuse
rajen.tnl
ரத்த காட்டேரி சுத்த சைவம் என்று சொல்கிறது ?...

0 comments: