Monday, February 03, 2014

உளுந்தூர்ப்பேட்டையில் கேப்டன் தெளிவாகப்பேசியது என்ன? -ஒரு மப் போர்ட்

தே.மு.தி.க., தனித்து போட்டி? மாநாட்டில் விஜயகாந்த் பேச்சு


உளுந்தூர்பேட்டை : 'தேர்தலில் தனித்து போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள்; கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்து, அதனால் பட்ட அடி போதும்' என, உளுந்தூர்பேட்டையில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் விஜயகாந்த் தெரிவித்தார்.

விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் நேற்று தே.மு.தி.க., நடத்திய 'ஊழல் எதிர்ப்பு மாநாட்டில்" தமிழகம் முழுவதும் இருந்து பெருந்திரளான தொண்டர்கள் பங்கேற்றனர். 

இம்மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில் கடல் இல்லை என்று நினைத்தேன். என் மனைவி பிரேமலதா கூறியதுபோல் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எறஞ்சியில் இளைஞர்கள் கடல் இங்கே இருப்பதைக் காண முடிகிறது.அருகில் உள்ள விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதி மக்களுக்கு எனது நன்றி. இங்கு ஒரு நரையை கூட பார்க்க முடியவில்லை. அனைவரும் இளைஞர் கூட்டம்.மக்களுக்கு நல்லது செய்யும் போலீஸ் வேடத்தை அதிக படத்தில் ஏற்று நடித்தேன். இதற்காக இப்போது வெட்கப்படுகிறேன். எனது மகனையும் போலீஸ் வேடத்தில் நடிக்க விடமாட்டேன். போலீஸ் துறை, இந்த மாநாட்டை நடக்க விடாமல் செய்ய அனைத்து வேலைகளையும் செய்தனர். இந்த மானம் கெட்ட பிழைப்புக்கு தூக்கு போட்டு சாகலாம். ஆண்டுக்கு ஒருமுறை மாநாடு நடத்துகிறோம். இதற்கு அனுமதி மறுக்கின்றனர். தமிழகத்தில் திருடன், கொலைகாரனை வளர்த்து விடும் வேலையை ஜெ., செய்கிறார்.வரும் 24ம் ததேி ஜெ., பிறந்த நாளில் பேனர் கட்டுவார்களே, அதை போலீஸ் தடுப்பார்களா. தமிழகத்தை பாதுகாக்கும் செயலை ஜெ., செய்யவில்லை. இங்கு 
கூடியிருக்கும் கூட்டத்தை நான் தூண்டிவிட மாட்டேன்.ஆண்ட, ஆளும் கட்சிக்கு அடித்து கூறுகிறேன். தே.மு.தி.க., மாற்றுக்கட்சியாக செயல்படும் என்பதை மறந்து விடக்கூடாது. பேனர் கட்டும் கயிறு எனது தொண்டனின் நரம்பு.

பணக்காரனிடம் ஊழல் இருக்க கூடாது. இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள். லஞ்சம் இருந்தால் நாடு உருப்படாது. மாடுகளை தாக்கிய கோமாரி நோயை தீர்க்க ஆள் இல்லை. இந்நோய் தாக்கி 1 லட்சம் கால்நடைகள் இறந்து உள்ளது. நாட்டை திருத்த விவேகானந்தர் 100 இளைஞர்களை கேட்டார். எனது கட்சியில் 25 லட்சம் இளைஞர்கள் உள்ளனர்.இந்தியா முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. தமிழகத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டத்தை விலையில்லா பொருட்கள் வழங்கும் திட்டம் என்று பெயர் மாற்றி பெரும் ஊழல் நடந்து வருகிறது.பத்திரிகையில் என்னை பற்றி எது எழுதினாலும் நான் கவலைப்படமாட்டேன். சட்டசபைக்கு ஏன் போகவில்லை என்று பலர் கேட்கின்றனர். அங்கே எதையும் பேச விடுவதில்லை. அதிக எம்.எல்.ஏ.,க்கள் அ.தி.மு.க,. வில் உள்ளதால் அவர்களே பேசிக்கொள்கின்றனர். மக்களை நாங்கள் ஏமாற்றவில்லை. ஆனால், அ.தி.மு.க., அரசு இளைஞர்களை கெடுக்க டாஸ்மாக் திறந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விவசாய பூமி. இங்கு 70 சதவீதம் விவசாயம் செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடை மூலம் டார்கெட் பிக்ஸ் செய்து 300 கோடி, 350 கோடி ரூபாய் என்று விற்பனை செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.

விவசாயிகள் வருவாய் பெருக்க எந்த டார்கெட்டையும் அரசு நிர்ணயிக்க வில்லை. சட்டசபையில் 110 விதியின் கீழ் இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு ஆண்டுக்கு பட்ஜெட் தொகையே 1.25 லட்சம் கோடிதான். இட்லி ஒரு ரூபாய், ஆனால் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீருக்கு விலை வைத்த ஒரே முதல்வர் ஜெ., மட்டுமே.கூட்டணி கட்சி என்றால் சட்டசபையில் 'ஜிங்ஜாங்' போடுவதற்கு அல்ல. தவறு செய்யும் போது சுட்டிக்காட்ட வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். நான் தலை குனிந்தாலும் எனது தொண்டர்களை தலை குனிய விடமாட்டேன். பால் விலை, பஸ் கட்டணம் உயர்வு குறித்து பேசியது தவறு என்று ஜெ., நினைக்கிறார். பென்னாகரத்தில் டெபாசிட் இழந்த ஜெ., எங்களால் தான் தே.மு.தி.க., வெற்றிபெற்றது என்று வீண் பிரசாரம் செய்கிறார்.ஆனால் தி.மு.க., ஆட்சியில் நடந்த 13 இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வியை தான் கண்டது. கூடங்குளம் மக்களை ஏமாற்றும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக கூறி ஏமாற்றினார். ஆனால் அந்த பகுதியில் இதுவரை ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டவில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பதுதான் ஜெ., வின் பழக்கம். ஜெ., வின் செயலால் வாஜ்பாய் படுத்த படுக்கையாய் போனார். இரு பெண்களால் தான் அவர் பதவி இழந்தார்.இலங்கை தமிழர் கண்ணீரில் சிலர் கட்சி நடத்துகின்றனர். ஜாதி, மதத்தை வைத்து இனி யாரும் அரசியல் செய்ய முடியாது. 

40 சீட்டையும் காசு கொடுத்து வாங்கலாம் என்று ஜெ., நினைக்கிறார். ஆனால் பணத்திற்காக மக்கள் தங்கள் ஓட்டுக்களை விற்க மாட்டார்கள். தே.மு.தி.க.,வில் எதிரிகளை மன்னித்து விடுவோம், துரோகிகளை மன்னிக்க மாட்டோம். குள்ளமாக இருக்கும் ஜெ., வுக்கு உயரமாக இருக்கும் ஆண்கள் குனிந்துதான் வணக்கம் சொல்ல வேண்டும்.இந்த ஆட்சியில் இரண்டு மூன்று நாட்கள் கூட அமைச்சர்கள் பதவியில் இருக்கமுடியவில்லை. இதனால் துறைகள் குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. சாது மிரண்டால் காடு கொள்ளாது. இதை உணர்ந்து போலீஸ் துறை எங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பில் ஜெ., சிக்கி தவிக்கிறார்.நான் உண்மையை பேசினால் குடித்து விட்டு பேசுகிறேன் என்று குறை சொல்கிறார்கள். வரும் லோக்சபா தேர்தலில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்று கேட்டால், என் தொண்டர்கள் கூட்டணி வேண்டாம். தனித்தே நிற்கலாம் என்கின்றனர். கடந்த முறை கூட்டணி வைத்து பட்ட அடி போதும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.



ஆனாலும், கேப்டன் கொஞ்சம் வித்தியாசமாகதான் முடிவுகள் எடுக்கிறார்..... சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டு போடுகிறார்....பாராளுமன்ற தேர்தலுக்கு தனியே என்கிறார்.....தனித்து நின்றால் சட்ட மன்ற தேர்தலிலேயே தேறுவது கடினம்.... பாராளுமன்ற தேர்தலில் எப்படி?........விஜயகாந்தின் 'எதிர்பார்ப்புகள்' நிறைவேற்றப்படும் என்றுதானே அவருக்கு உறுதி அளிக்கப்பட்டதாக செய்திகள் கசிந்தன...
..எங்கேயோ இடிக்குதே?

நன்றி -தினமலர்
Rate this:
0 members
members
members
Share this comment
R.Subramanian - chennai,இந்தியா
03-பிப்-201407:51:41 IST Report Abuse
R.Subramanian
ஆந்திராவில் சிரஞ்சிவி செய்தது போல் விஜயகாந்த் தன் கட்சியை ஏதேனும் ஒரு தேசிய கட்சியோடு இணைத்து விடலாம். இவர் தனித்து நிற்பதால் வாக்குகள் சிதறுமே தவிர அதனால் இவர் கட்சிக்கோ அல்லது தமிழகத்திற்கோ நன்மை இல்லை... இதுவே ஒரு தேசிய கட்சியில் இவர் கட்சியை இணைக்கும் போது அது இவருக்கு மட்டும் இல்லை தமிழகத்திற்கு நன்மை கொண்டு வரும். என்னை பொருத்தவரையில் இவர் காங்கிரஸ் கட்சியோடு தேமுதிகவை இணைத்து தமிழகத்தில் மீண்டும் தேசிய கட்சியின் ஆட்சியை கொண்டு வர உதவலாம். திராவிட கட்சிகளின் ஆட்சியை விட தேசியக்கட்சிகளின் ஆட்சி நன்றாகவே இருக்கும்...
Rate this:
0 members
members
members
Share this comment
T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
03-பிப்-201407:41:15 IST Report Abuse
T.R.Radhakrishnan
கப்டனின் முடிவை மதிப்போம்....வரவேற்போம்......பெரிய கட்சிகளே தனித்து நிற்க திராணி இல்லாத நிலையில், இவர் தனித்து நிற்கிறேன் என்கிறார்.... அந்த வகையில் நல்லது...ஆனால், காப்டனின் தற்போதைய ஒரே குறிக்கோளான ஜெயாவை தோற்கடிக்கும் எண்ணத்துக்கு இந்த முடிவு எந்த வகையில் துணை போகும்?.......ஜெயா அதிக இடங்கள் பெறுவது என்பது வரப்போகும் மத்திய அரசின் ஆயுள் கம்மி என்பதையே குறிக்கும்....அது பா.ஜ.க. அரசாக இருந்தாலும் சரி, இல்லை மூன்றாவது அணியாக இருந்தாலும் சரி.....
Rate this:
0 members
members
members
Share this comment
saravanan sagadevan - chennai,இந்தியா
03-பிப்-201407:39:41 IST Report Abuse
saravanan sagadevan
நேற்று மாநாடு ஜெயலலிதாவை திட்டுவதற்காக தான் நடத்தப்பட்டது. எல்லோரும் தொண்டை கிழியும் அளவு கத்தினார்கள். விஜயகாந்த் பற்றி சொல்லவே வேண்டாம், வழக்கம் போல் என்ன பேசுறோம் என்று தெரியாமல் ஏதோ உளறிக்கொண்டு இருந்தார். இடையில் கூட்டத்தினரை பார்த்து கோப பட்டார். கேப்டன் டிவியில் நேரலையாக இருந்தாலும் அடிக்கடி சென்சார் செய்யப்பட்டது. அவர் கட்சியினரை அவரே அமைதிபடுத்த முடியவில்லை ஜெயலலிதாவை தாக்கி பேசுகிறோம் என்று அநாகரிகமாக பேசினார். மாநாட்டின் சாராம்சமே தெரியாமல் ஒரு கூத்து நடந்தது .
Rate this:
2 members
members
members
Share this comment
menaha govindan - putukkottai,இந்தியா
03-பிப்-201407:22:03 IST Report Abuse
menaha govindan
நான் அடித்து சொல்லுகிறேன் கண்டிப்பா கூட்டணிதான்
Rate this:
0 members
members
members
Share this comment
K Sanckar - bengaluru ,இந்தியா
03-பிப்-201407:16:04 IST Report Abuse
K Sanckar
விஜயகாந்த் கூட்டத்தை வைத்து கணக்கு போடுகிறார். காசு கொடுத்தால் கூட்டம் வரும் அந்த கணக்கு பிரகாரம் வோட்டுக்கும் காசு கொடுக்க வேண்டும். விஜயகாந்த் இதை மறந்து விடக்கூடாது. விஜயகாந்த் ஏதோ பேரம் பேசப்போகிறார் என்று தெரிகிறது. அதற்கு தயாராகிறார் என்று தோன்றுகிறது. அதனால் தான் மாநாட்டில் சொன்னபடி கூட்டணியை அறிவிக்கவில்லை. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ?
Rate this:
1 members
members
members
Share this comment
Nagulan - hanoi,வியட்னாம்
03-பிப்-201407:12:52 IST Report Abuse
Nagulan
கேப்டன் அவர்களே புதுசா ஏதாவது சொல்லுங்க இது எல்லோருக்கும் தெரியும் இதற்க்கு மாநாடு தேவையில்லை
Rate this:
8 members
members
27 members
Share this comment
ஜாம்பஜார் ஜக்கு - chennai,இந்தியா
03-பிப்-201406:58:11 IST Report Abuse
ஜாம்பஜார் ஜக்கு
ஐந்து முனைப்ப் போட்டி.......ஜெயாவிற்கு சாதகம். மினிமம் கியரண்டீ.....35
Rate this:
37 members
members
98 members
Share this comment
மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:55:12 IST Report Abuse
மிஷன் 272 PLUS
விஜயகாந்த் எடுத்த தனியாக நிற்ப்போம் என்ற முடிவுக்கு பாராட்டுக்கள்... அதே நேரத்தில் நீங்கள் ஒன்றை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.... தங்களின் நிர்வாகத்திறமை என்ன என்பது மக்கள் அறியாதது... அதனை நிருபியுங்கள்... இல்லை எனில் கெஜிரிவாலின் மறுவுருவம் என்று மக்கள் என்ன கூடும்... இப்பொழுது உங்களுக்கு வழங்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை வைத்து அதனை ஓரளவிற்கு நிருபிக்க முடியும்....இந்த தேர்தலில் உங்களுக்கு எவ்வளவு தொகுதிகள் கிடைக்கிறது என்று எண்ணாமல் எதிர்காலத்தில் தமிழகத்தில் கால்பதிக்க இது உதவும்...All the best..
Rate this:
31 members
members
89 members
Share this comment
Mathiyalag - salem,இந்தியா
03-பிப்-201407:38:51 IST Report Abuse
Mathiyalag
கேஜ்ரிவால் பற்றி 30 நாட்களில் புரிந்த அரசியல் ஞானி உலகத்தில் நீங்கள் மட்டுமே ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
P. Kannan - bodinayakkanur,இந்தியா
03-பிப்-201406:48:52 IST Report Abuse
P. Kannan
யாருடனும் கூட்டணி இல்லை என்றால் மிகவும் சந்தோசப்படுவது திமுக தான். அவர்களின் வெகுநாள் கனவு நனவாக போகிறது. தனித்து போட்டியிட்டால், அந்த பீலிங்க்ல புல்லா மூழ்கிடுவாரு
Rate this:
53 members
members
51 members
Share this comment
NAMO ROCKERS - coiambatore.  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201406:38:44 IST Report Abuse
NAMO ROCKERS
என்ன தா சொல்ல வர்ரிங்க சாமி எங்களுக்கு ஒன்னும் புரியல
Rate this:
16 members
members
40 members
Share this comment
TIRUVANNAMALAI Kulasekaran - australia  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201406:33:53 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran
நீயும் உன் பையனும் போலீசா நடிக்க மாட்டீங்களா ரொம்ப நல்லதா போச்சுடா சாமி தப்பிச்சாங்க தமிழ் ரசிகர்கள்
Rate this:
17 members
members
122 members
Share this comment
TIRUVANNAMALAI Kulasekaran - australia  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201405:49:35 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran
சூப்பர் முடிவு கேப்டன் தெளிவாகத்தான் எடுத்தாரா ஃ வெரி குட் சீக்கிரமே கட்சி அங்கீகாரம் பறி போகும் ஃ ஊ ஊஊ ஊ ஊஊஊ சங்குதான்
Rate this:
21 members
members
145 members
Share this comment
TIRUVANNAMALAI Kulasekaran - australia  Posted via: Dinamalar Android App )
03-பிப்-201405:45:44 IST Report Abuse
TIRUVANNAMALAI Kulasekaran
விவேக் சொன்னது தோற்கும் தொகுதி் கணக்கு
Rate this:
11 members
members
55 members
Share this comment
Ganapathysubramanian Gopinathan - bangalore,இந்தியா
03-பிப்-201405:45:07 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan
ோலீஸ் போல பணம் வாங்கியது மறந்ததோ/
Rate this:
9 members
members
38 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
03-பிப்-201405:44:14 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே
ஏங்க விஜயகாந்து நீங்க அரிதாரம் பூசிய, பூசி கொண்டிருக்கும் நபர் அல்லவோ, தொண்டர்களிடத்தில் நரையை எதிர்பார்க்காத நீங்க, நரையை மறைத்தது ஏனோ? கொஞ்சம் தெளிவா இருங்க :), அந்த ஒரு வசனத்தை நீங்க "கட்" சொல்லியிருக்கலாம்.
Rate this:
5 members
members
48 members
Share this comment
Vivek Palaniappan - paris,பிரான்ஸ்
03-பிப்-201405:34:35 IST Report Abuse
Vivek Palaniappan
நான் 2 வாரம் முன்னாடியே என்னோட கருத்த சொன்னேன். எப்போ மறுபடி சொல்லுறேன், விஜய்காந்துக்கு 40000 VOTE
Rate this:
8 members
members
46 members
Share this comment
Vivek Palaniappan - paris,பிரான்ஸ்
03-பிப்-201405:31:04 IST Report Abuse
Vivek Palaniappan
யாரு எப்படி தான் நில்லுங்க நான் சொல்லுறேன் ADMK 35 BJP 4 MDMK 1 எது தான் தமிழ்நாடுல 2014 election ரிசல்ட்
Rate this:
97 members
members
60 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201408:01:03 IST Report Abuse
s.maria alphonse pandian
அப்போ அதிமுக கூட்டணி கம்யுனிச்டுக்கு ஒண்ணுமே இல்லையா?சொல்றதுதான் சொல்றீங்க..அதிலே ஏன் ஓர வஞ்சனை? ADMK 40 ன்னு சொல்லிட்டு போங்களேன்......
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Ram Psa - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
03-பிப்-201405:27:59 IST Report Abuse
Ram Psa
கேப்டன் சரியான முடிவை எடுத்து இருக்கிறார்.இதே முடிவை அம்மா கூட சேர்வதற்கு முன்பே எடுத்து இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.தனியா நிக்கிறதுக்கும் ஒரு தில்லு வேணும்.தில்லு இருந்தா பேசு இல்லாட்டி ஒரு ஓரமா உக்காந்து வேடிக்கை பாரு.தமிழ் நாட்ல எந்த கட்சிக்காவது தனியா நிக்க தில்லு இருக்கா.தனியா நிக்கிறேன்னு சொல்ல வேண்டியது.தேர்தல் வந்துட்டா யார் கூடயாவது கூட்டணி சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது.எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு.ஜெயிக்கிறமோ,தோக்குரமோ அது முக்கியம் இல்ல ஆனா நம்மளோட தனித் தன்மைய இழந்து விட கூடாது.மறுபடியும் கேட்குறேன் எந்த கட்சிக்காவது தனியா நிக்கிற தில்லு இருக்கா.என்னப்பா யாருமே வாய தொறக்க மாட்டென்குரிங்க.சும்மா மா..மா..மா..மா..அதிருதில்ல..ல..ல..ல..ல..
Rate this:
89 members
members
57 members
Share this comment
madurai mani bharathi - madurai,இந்தியா
03-பிப்-201405:26:43 IST Report Abuse
madurai mani bharathi
பு ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ......................................... பஞ்சர் ஆயி காற்று போன தண்ணி வண்டி.
Rate this:
13 members
members
41 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
03-பிப்-201405:19:34 IST Report Abuse
Samy Chinnathambi
பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறாதது ஏமாற்றம் தான். ஆனால் அவர் அதனை தவிர்த்து தனியாக நிற்பதும் பாராட்ட பட கூடியதே...ஏனெனில் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் தனியாக தான் நிற்க சொல்கிறார்கள்... தொண்டர்களின் கருத்தை மதிப்பவர் விஜயகாந்த்...எனவே அவர் தனியாக நின்றால் ஆச்சரியமில்லை....
Rate this:
88 members
members
57 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
03-பிப்-201405:17:47 IST Report Abuse
Samy Chinnathambi
மோடிக்கு பிறகு தேமுதிகவுக்கு தான் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி நான் பார்கிறேன்...அதனை இவர்கள் ஜெயாவை திட்டுவதற்கு பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை...இருந்தாலும் அவர்கள் கோவத்தில் ஒரு நியாயமும் இருக்கிறது.........மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதற்கு கடைசி வரை இழுத்தடித்தது, மற்றும் போலிஸ் காரர்களை இலட்சணக்கான மக்கள் கூடும் கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு அனுப்பாதது, மற்றும் மாநாட்டு திடல் தவிர வேறு ஊர்களில் பிளக்ஸ் போர்டு பேனர் வைக்க அனுமதி தராதது போன்ற கோவம் அவர்களது பேச்சில் தெறிக்கிறது...ஜெயாவுக்கு இருபத்தினாலாம் தேதி பிறந்த நாள் வருகிறது. அப்போது இதே காவல்துறை அதிமுக ஆட்களுக்கும் பிளக்ஸ் போர்டு பேனர் வைக்க அனுமதி தர கூடாது. அப்படி செய்யுமா காவல் துறை....நடக்காது...மாநிலம் முழுக்க பிளக்ஸ் போர்டு பேனர்களை காண்பீர்கள்...அதனால் தான் அவர்கள் கோவப்பட்டு அடக்குமுறை என்று திட்டுகிறார்கள்...மற்றும் தனியார் பேருந்து முதலாளிகளை மாநாட்டிற்கு செல்ல கூடாது என்று நிர்பந்தித்த காரணத்தினால் காவல் துறை மீதும் ஜெயா மீதும் கோவமா இருக்கிறார்கள்...
Rate this:
120 members
members
80 members
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:54:08 IST Report Abuse
Kasimani Baskaran
"இட்லி ஒரு ரூபாய், ஆனால் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது" - அலுவாலியா சொன்னதை சரியாக நினைவில் வைத்து ஒவ்வொரு ஏழையும் ஆளுக்கு 2 இட்லி ஒரு தண்ணீர் பாட்டில் மூலம் பசியை போக்கிக்கொள்ளலாம் என்று கொடுத்ததை ஏன் கஜிநிகாந்தால் புரிந்து கொள்ள முடியவில்லை? கான்வென்ட்-இல் படித்திருந்தால் புரிந்திருக்கும்...
Rate this:
17 members
members
29 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:52:11 IST Report Abuse
s.maria alphonse pandian
விஜயகாந்த் பிஜேபி கூட்டணிக்கு ஓகே சொல்லியிருந்தால் முதல் பக்க பெரிய தலைப்பு செய்தியாக போட்டிருப்பீர்கள்..இப்போது கூடிய அந்த பெரும் கூட்டத்தின் படத்தையும் போடாமல் சில்லறை செய்தி போல போட்டுவிட்டீர்கள்...
Rate this:
469 members
members
125 members
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:50:31 IST Report Abuse
Kasimani Baskaran
"சட்டசபையில் 110 விதியின் கீழ் இதுவரை 8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது" - எப்பேர்ப்பட்ட பொய்களை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் மிக அதிகமாக இருப்பதன் விளைவு இது. அம்மா பிரதமரானால் அமெரிக்க + சீன + ஜப்பானிய GDP யையும் சேர்த்தால் வரக்கூடிய தொகையை விட 10 மடங்கு அதிகமாக 110 விதி மூலம் திட்டங்களை அறிவித்து விடுவார்.
Rate this:
5 members
members
68 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:49:54 IST Report Abuse
s.maria alphonse pandian
எம்ஜிஆர் இரட்டை விரலை " v " என காட்டியதே v = vijaykanth என்பதற்காகத்தானாம்....இனி ஜெயலலிதா இரட்டை விரலை அப்படி காட்டுவாரா?
Rate this:
245 members
members
59 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:47:59 IST Report Abuse
s.maria alphonse pandian
3 மாதத்துக்குள் சிறைக்கு செல்ல இருக்கும் ஜெயலலிதாவால் ஊழல் ஒழிப்பு மாநாடு நடத்த முடியுமா? என எழுப்பப்பட்ட சவால் உண்மையிலேயே யோசிக்க வேண்டிய ஒன்று.....e
Rate this:
375 members
members
77 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:45:48 IST Report Abuse
s.maria alphonse pandian
மிக அருமையான ஒரு முடிவை எடுத்துள்ளதற்காக கேப்டனுக்கு பாராட்டுக்கள்....தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்...இது அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படும்...இப்போது பிஜேபியோடு கூட்டணி வைத்து 5 சீட்டு ஜெயித்தாலும் இது மோடி அலையினால் கிடைத்தது என்பார்கள்...திமுகஅதிமுக கட்சிகளை நீக்கிவிட்டு மூன்றாம் நபராக தொடர்ந்து செயல்படட்டும்...
Rate this:
353 members
members
68 members
Share this comment
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
03-பிப்-201407:15:32 IST Report Abuse
Samy Chinnathambi
இந்த உலகத்திலேயே மிகவும் சந்தோசமா இருக்க போவது ரெண்டு பேரு இப்போ...ஒன்னு கட்டுமரம், ரெண்டாவது அதன் தொண்டரடி அத்தலைவர் மரியா.....
Rate this:
5 members
3 members
156 members
Share this comment
Kasimani Baskaran - singapore,சிங்கப்பூர்
03-பிப்-201404:45:45 IST Report Abuse
Kasimani Baskaran
"எனது மகனையும் போலீஸ் வேடத்தில் நடிக்க விடமாட்டேன்" - ஹி ஹி...சூப்பர். போலிஸ் வேடத்தில் நடிக்க ஆட்களா இல்லை?
Rate this:
6 members
members
29 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201404:17:11 IST Report Abuse
gopalakrishnan saminathan
இன்னும் மயக்கம் தீரளையப்பா
Rate this:
14 members
members
41 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:53:04 IST Report Abuse
s.maria alphonse pandian
ஜெயலலிதாவின் டாஸ்மாக் கடை மக்களை இன்னும் மயக்கத்திலிருந்து தீர வைக்கவில்லை.......
Rate this:
275 members
0 members
36 members
Share this comment
மிஷன் 272 PLUS - delhi,இந்தியா
03-பிப்-201406:56:45 IST Report Abuse
மிஷன் 272 PLUS
மரியா... மதுக்கடைகளை தமிழகத்தில் முதன் முதலில் திறந்து விட்டவர் கருணா ... அவரை எதுவும் சொல்லவில்லையே......
Rate this:
38 members
0 members
237 members
Share this comment
Suresh - nagercoil,இந்தியா
03-பிப்-201404:03:09 IST Report Abuse
Suresh
இங்கு ஒரு நரையை கூட பார்க்க முடியவில்லை...இனி வரும் காலத்தில் ஒரு நரயையும் உங்களால் பார்க்க முடியாது காரணம் 30 வையதிலே பெயிண்ட் அடித்து விடுகிறோமே...ரொம்ப பில்டப் பண்ணாமல் கூட்டனியை பத்தி சொல்லிவிடுங்கள். தி மு க வில் சேர்ந்தால் உங்கள் குடும்ப ஓட்டு கூட உங்களுக்கு கிடைக்காது....
Rate this:
51 members
members
338 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201404:01:19 IST Report Abuse
gopalakrishnan saminathan
அப்படி யானால் இன்றைக்கும் குடித்தானா பாவம் இவருக்கு ஷேர்பண்ண ஆலிலையோ அந்த விரக்தியோ
Rate this:
8 members
members
139 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201403:59:08 IST Report Abuse
gopalakrishnan saminathan
உளுந்தூர் பேட்டையும் புசுவானம்மா போய்ட்டா கூட்டம் இருந்தால் வோட்டு விழும்மா எல்லாம் கேப்டன் தெளிந்து விட்டாரா என்று பார்க்க வந்த கூட்டம்
Rate this:
12 members
members
333 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:55:02 IST Report Abuse
s.maria alphonse pandian
காவல்துறையையும் நிர்வாகத்தையும் வைத்து இம்மாநாட்டுக்கு எதிராக ஜெயலலிதா நடத்திய ஆரவாரத்துக்கு நல்ல பதிலடிதான் அங்கே குவிந்திருந்த கூட்டம்.......
Rate this:
317 members
1 members
37 members
Share this comment
Raju - auckland,நியூ சிலாந்து
03-பிப்-201403:56:20 IST Report Abuse
Raju
ம்ம்ஹூம் வாய்க்கு வந்தபடி பேசியதால்தான் கோர்ட் கேஸ் என அலையவிட்டார் முதல்வர். திரும்பவும் உளறல் ஜாஸ்தியாய் இருக்கே?
Rate this:
62 members
members
540 members
Share this comment
s.maria alphonse pandian - chennai-88,இந்தியா
03-பிப்-201404:56:31 IST Report Abuse
s.maria alphonse pandian
வாங்குறது ஆண்டுக்கு 100 வாய்தா...இதுலே மத்தவுங்க மேல கேசு....நாடு விளங்கிடும்.......
Rate this:
438 members
1 members
107 members
Share this comment
gopalakrishnan saminathan - grigny,பிரான்ஸ்
03-பிப்-201403:56:06 IST Report Abuse
gopalakrishnan saminathan
இவர் கேட்கும் பணம் யாரிடமும் இல்லைப்பா ஆகையால் இவர் யாரிடமும் கூட்டணி இல்லை
Rate this:
13 members
members
129 members
Share this comment
Gsanky - bangalore,இந்தியா
03-பிப்-201403:32:20 IST Report Abuse
Gsanky
வினாச காலே விபரீத புத்தி
Rate this:
33 members
members
280 members
Share this comment
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
03-பிப்-201403:32:06 IST Report Abuse
தமிழ் சிங்கம்
தனித்து நில்லுங்கள். அதைதான் நாங்கள் எதிர்பார்கின்றோம். பிஜேபி, மதிமுக, பாமகவுடன் கூட்டு சேர்ந்து ஓட்டை பிரித்துவிடாமல், தனித்தே நில்லுங்கள். அப்போதுதான் தலைவர் நாற்பதுக்கு நாற்பது வெல்ல முடியும். உங்களின் தைரியத்தை மனமார பாராட்டுகிறேன். முட்டை வாங்க நீங்கள் காட்டும் ஆர்வம் மெச்சத்தக்கது. அனைத்து கட்சிகளும் தனித்தே களம் இறங்கும் போது, திமுக சுலபமாக அனைத்து சீட்டுகளையும் வெல்லும். தமிழகத்தின் பெரிய கட்சி திமுக எனும் சுறா மற்ற கெண்டை மீன்களை திங்க போவதை நினைத்தால், எங்களுக்கே பரிதாபமாக உள்ளது. என்ன செய்ய முடியும்? பசிக்கும் போது திங்கதான் வேண்டும். இப்போது தமிழர்களுக்கு மின்சார பசி, தண்ணீர் பசி, வேலை வாய்ப்பு பசி உள்ளது. அதை போக்க, உதய சூரியனின் வெளிச்சம் வேண்டும். வரும். மலைகளில் இருந்து புகை மூட்டங்களில் இருந்து, உதய சூரியன் வெளியே வரும். தமிழர்களை காக்கும். " தமிழ் சிங்கம் " என்ற பெயரில் இன்னொரு அதிமுக புல்லுருவி கருத்துகள் எழுதி வருவதை கண்டு வாசகர்கள் குழப்பம் அடையவேண்டாம்.
Rate this:
191 members
members
42 members
Share this comment
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
03-பிப்-201403:20:51 IST Report Abuse
வைகை செல்வன்
பேரம் படியவில்லையா ??
Rate this:
45 members
members
215 members
Share this comment

ASHOK - tanjore,இந்தியா
03-பிப்-201403:11:34 IST Report Abuse
ASHOK
நாளைமுதல்குடிக்கமாட்டேன்சத்தியமடிதங்கம்...

0 comments: